2018ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் ‘முன்கூட்டிய மருத்துவ வழிகாட்டுதல்கள்’ என்ற கருத்தாக்கத்திற்கு சட்டப்பூர்வ அந்தஸ்தை வழங்கி, கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டு கருணைக் கொலையை அனுமதித்தபோது, வாழ்க்கை பற்றிய இறுதி முடிவை எடுப்பதற்கான நோயாளியின் தனிப்பட்ட உரிமைக்கும் கண்ணியமான மரணத்துக்கான உரிமைக்குமான ஒரு முக்கியமான அங்கீகாரமாகப் பார்க்கப்பட்டது. ஆனால் சில குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் “கடக்க முடியாத தடைகளாக” இருந்ததை மருத்துவர்கள் பின்னர் கண்டறிந்தார்கள். சமீபத்திய உத்தரவு ஒன்றில், அரசியல் சாசன அமர்வு இந்த வழிகாட்டுதல்களை இன்னும் அதிகமாக செயல்படுத்தக்கூடியதாகவும் எளிமையாகவும் மாற்றியிருக்கிறது. இந்த மேம்படுத்தப்பட்ட வழிகாட்டுதலுக்கு இனி நீதித்துறை நடுவர் கூடுதல் கையெழுத்திடத் தேவையில்லை. பதிலாக நோட்டரி அல்லது அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரியின் முன் அதை சான்றளிக்க முடியும். அதாவது மாவட்ட நீதிபதிக்கு பதிலாக நோட்டரி அல்லது அதிகாரி தானாக முன்வந்து, கட்டாயப்படுத்தல் அல்லது தூண்டுதல் இல்லாமல், முழு புரிதலுடன் ஆவணம் செயல்படுத்தப்படுகிறது என்பதில் திருப்தி அடைந்தால் போதுமானது. இந்த ஆவணத்தை நிறைவேற்றுபவர் முடிவை எடுக்க இயலாதவராக மாறினால், மருத்துவ சிகிச்சையை மறுப்பதற்கோ அல்லது திரும்பப் பெறுவதற்கோ ஒப்புதல் அளிக்க அதிகாரம் பெற்ற ஒரு பாதுகாவலர் அல்லது நெருங்கிய உறவினரின் பெயரைச் செயல்படுத்துபவர் குறிப்பிட வேண்டும் என்ற முந்தைய அசல் வழிகாட்டுதல் மாற்றப்பட்டு, ஒன்றுக்கு மேற்பட்ட பாதுகாவலர் அல்லது உறவினரின் பெயர்களைக் குறிப்பிடும் வகையில் திருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆவணம் நிறைவேற்றப்படும் போது அவர்கள் அங்கு இல்லையென்றால் குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கும் பொறுப்பு மாவட்ட நீதிபதியிடம் இருப்பதற்குப் பதிலாக, இப்போது அதில் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாவலர்கள் அல்லது நெருங்கிய உறவினர்களிடமும், குடும்ப மருத்துவரிடமும் முன்கூட்டிய உத்தரவு நகலை ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு இப்போது அந்த நபர்களுக்கே உள்ளது. இது டிஜிட்டல் சுகாதாரப் பதிவுகளிலும் சேர்க்கப்படலாம்.
சிகிச்சையை மறுப்பது அல்லது திரும்பப் பெறுவது குறித்த அறிவுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமா என்பதை சான்றளிக்க மருத்துவமனையே ஒரு முதன்மை மருத்துவ வாரியத்தை அமைக்க வேண்டும் என்று புதிய வழிகாட்டுதல்கள் சொல்கின்றன. தவிர மாவட்ட தலைமை மருத்துவ அலுவலரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு மருத்துவரையும் கொண்ட இரண்டாம் நிலை வாரியத்தையும் மருத்துவமனை அமைக்க வேண்டும். இந்த இரண்டாம் நிலை வாரியம், முதன்மை வாரியத்தின் சான்றிதழை அங்கீகரிக்க வேண்டும். 2018ஆம் ஆண்டின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளபடி மாவட்ட ஆட்சியர் இரண்டாவது மருத்துவ வாரியத்தை அமைக்க வேண்டிய அவசியமில்லை என்பதுதான் இதில் மாற்றம். முன்கூட்டிய உத்தரவு இல்லாமல் போனாலும் நோயாளி முடிவெடுக்க முடியாத நிலையில் இருந்தால் இந்த வாரியங்களின் ஆய்வு செல்லுபடி ஆகும். புதிய வழிகாட்டுதல்களில் மருத்துவ வாரியங்களில் சேர்க்கப்பட வேண்டியவர்களின் அனுபவம் மற்றும் சிறப்புகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இத்தகைய வழிகாட்டுதல்கள் ‘வாழும் விருப்பம்’ என்ற கருத்தாக்கத்தை செயல்படுத்துவதற்கும் மருத்துவ வழிகாட்டுதல்களை முன்னெடுப்பதற்கும் பயனுள்ளவை, அவசியமானவை என்றாலும், நாடாளுமன்றம் ஒரு விரிவான சட்டத்தைக் கொண்டு வர வேண்டிய நேரம் இது. அத்தகைய சட்டம் இருந்தால் முன்கூட்டிய உத்தரவுகளின் தொகுப்பையும் வழங்கக்கூடும். இதனால் அதன் உண்மையான தன்மையை புதிதாக உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் அதை செயல்படுத்தும் நேரத்தில் எழாது.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE