மகத்தான விளையாட்டு வீரர்கள் சில நேரங்களில் ஆட்டத்தின் மீது தங்களது விருப்பத்தை ஏற்ற முடியும். தோஹாவின் லூசைல் விளையாட்டரங்கில் பித்து பிடித்திருந்த ஞாயிற்றுக் கிழமை இரவில், தனது ஆதிக்கத்தை செலுத்தி ஃபிஃபா உலகக் கோப்பையை அர்ஜென்டினாவுக்கு பெற்றுத் தந்தார் லியோனல் மெஸ்ஸி. பல ஆண்டுகள் காணாத உச்சகட்ட மோதல் இது. காரணம் பெனால்டிகளில் அர்ஜென்டினா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெறுவதற்கு முன்பு பிரான்ஸ் இரண்டு முறை தனது பற்றாக்குறையை 3-3 என்ற கணக்கில் சமன் செய்திருந்தது. இதற்கு முந்தைய உலகக் கோப்பைகளில் 35 கோடைக் காலங்களையும் பல ஏமாற்றங்களையும் சந்தித்த மெஸ்ஸிக்கு, இந்த இறுதிப் போட்டி கோப்பையை கைப்பற்ற ஒரு கடைசி வாய்ப்பை வழங்கியது. இதற்கு முன்பு 1986ல் மெக்சிகோவில் நடந்த போட்டியில் மிகப் பெரிய வீரரான டியாகோ மரடோனாதான் அர்ஜென்டினாவுக்காக கோப்பையை வென்றிருந்தார். ஒரு நாட்டின் எதிர்பார்ப்புகள், உலகின் ஒட்டுமொத்த பார்வை மற்றும் அணியினரின் கோப்பைக்கான ஏக்கம் என எல்லாமே மெஸ்ஸியின் மந்திரக் கால்களில் தங்கியிருந்தன. குழுவாக ஆடும் போது ஒரு தனி நபர் வளர்வது எப்போதும் கடினம். இதற்கு ஒருங்கிணைப்பு, பொதுவான விருப்பம் மற்றும் சமமான திறன்கள் தேவை. எஃப்சி பார்சிலோனாவுடனான தனது பயணத்தில் மெஸ்ஸி சிறப்பாக விளங்கினார். நான்கு சாம்பியன்ஸ் லீக் பட்டங்களையும், ஏழு பாலன் டி ‘ஆர் விருதுகளையும் வென்றவர், கோபா அமெரிக்கா கோப்பையின் வெற்றிக்கு அர்ஜென்டினாவை இட்டுச் சென்றார். ஆனால் கைலியன் எம்பாப்பேயின் சாதனைகளில் வளர்ந்த ஒரு வலுவான போட்டி அணியுடன் ஞாயிறு அன்று நடந்த துடிப்பான இறுதிப் போட்டி வரையில் உலகக் கோப்பை கைக்கு அகப்படாமலேயே இருந்தது. முதல் போட்டியில் சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்திருந்த போதிலும் இந்த உலகக் கோப்பையின் வாயிலாக அர்ஜென்டினா மெஸ்ஸியின் துடிப்பான முதுகெலும்பை கண்டது. தலைவர் ஒரு பெருந்தன்மை கொண்ட தந்தையைப் போலிருந்தார். கோல்களை அடித்தார், ஆனால் அதை விட முக்கியமாக மாய
யதார்த்தவாதத்தைப் போல, மற்றவர்கள் கோல்களைப் போட உதவினார். நெதர்லாந்துக்கு எதிராக நகுவேல் மோலினாவுக்கு பாஸ் செய்ததும், ஜுலியன் அல்வாரெஸை தயார் செய்வதற்கு முன்னர் குரோஷியாவைச் சேர்ந்த தற்காப்பாளரிடத்தில் போலியை காட்டியதும் எதிரணியினரை திகைக்க வைத்த, நம்ப முடியாத முயற்சிகள். சொந்த அணியினரின் உற்சாகத்துக்கும் அது காரணமாக இருந்தது. இறுதிப் போட்டியில் மெஸ்ஸி தனது விரைவான கிராஸ்களின் மூலம் சக ஸ்டிரைக்கர்களுக்கு உதவுவதற்கு முன்பு வரையில் தற்காப்பாளர்களின் கவனத்தை திசை திருப்பும் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். முந்தைய ஆட்டங்களில் அல்வாரெஸைப் போலவே டி மரியா உள் நுழைந்தார். இருந்தாலும், அர்ஜென்டினா தனது மேலாதிக்கத்தைக் காட்டிய ஒரு போட்டியில், தனது மீள்வருகையை நிகழ்த்திக்காட்டியதற்காக பிரான்ஸ் பெருமைப்படலாம். பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் எஃப்சி அணியில் வரும் எம்பாப்பேயும் மெஸ்ஸியும், எதிர்பார்த்தது போலவே போட்டியின் ஓட்டத்தை கட்டுப்படுத்தினார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்த மரடோனாவும் நோயுற்ற பீலேவும் மெஸ்ஸி மற்றும் எம்பாப்பேவில் மிகச் சிறந்த வாரிசுகளை கண்டடைந்திருக்கிறார்கள் எனலாம். ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்க நாடுகளின் திறமைகளால் ஒளிரும் உலகக் கோப்பையில் எப்போதும் அதிர்ச்சிக்கான ஒரு காரணம் இருக்கும். ஆனால் மெஸ்ஸி மற்றும் எம்பாப்பேவின் காலணிகளிலிருந்து தோன்றி ஜொலிக்கும் மந்திரத்தின் ஒரு துகளும், மீண்டெழும் தன்மையும் இருந்தால் பாரம்பரிய அணிகள் நீடித்திருக்க முடியும் என்பதை அர்ஜென்டினாவும் பிரான்சும் காட்டின.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE