இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அக்டோபரில் 17 சதவீத சரிவிலிருந்து நவம்பரில் மிதமான 0.6 சதவீதம் என்கிற அளவுக்கு உயர்ந்தது. அக்டோபரில் ஏற்றுமதிகளின் மதிப்பு 29.8 பில்லியன் டாலரிலிருந்து 32 பில்லியன் டாலராக மீண்டாலும், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஏற்றுமதி சரசாரியான 39 பில்லியன் டாலரைவிட கணிசமான அளவுக்கு இது குறைவுதான். இறக்குமதி வளர்ச்சி 5.4 சதவிகிதம் என்கிற அளவில் இருந்தது. சரக்குகளின் மதிப்பு 55.9 பில்லியன் டாலர் என்கிற அளவுக்கு சரிந்தது. பிப்ரவரி 2022ல்தான் கடைசியாக இந்த மட்டத்தில் அது காணப்பட்டது. அதை தொடர்ந்து ஏழு மாதங்கள் ஏற்றுமதி சரக்குகள் 60 பில்லியன் டாலர் என்கிற அளவிலேயே இருந்தன. ஐந்து மாதங்களில் முதல் முறையாக வர்த்தக பற்றாக்குறை 25 பில்லியன் டாலருக்கும் கீழே குறைந்தது. சில பொருட்களின் விலைகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக இறக்குமதி செலவு மற்றும் பற்றாக்குறை ஓரளவு கட்டுப்படுத்தப்படலாம். ஆனால் இதற்கு முந்தைய சர்வதேச விலையின் போக்குகளால் சில ஏற்றுமதிகளின் மதிப்பு வேகமாக உயருமென்பதால் இதனால் சாதக, பாதகங்கள் இரண்டும் இருக்கலாம். இறக்குமதி செலவு வீழ்ச்சியின் ஒரு பகுதி, எண்ணை அல்லாத சரக்குகளின் இறக்குமதி குறைந்ததால் ஏற்பட்டது. உள்நாட்டு தேவை மந்தமாவதையே இது குறிக்கிறது. ஆனால் எண்ணை அல்லாத ஏற்றுமதிகளின் செயல்பாடுதான் அதிக கவலையளிக்கக் கூடியது. ஜூன் மாதத்திலிருந்தே ஏற்றுமதி வளர்ச்சியில் அவற்றின் பங்கு சுருங்கி வருகிறது. செப்டம்பர் தொடங்கி நவம்பர் வரையில் இந்த சுருக்கம் பல துறைகளிலும் துரிதப்படுத்தப்பட்டிருக்கிறது. 2021-22ல் இந்தியாவின் சாதனை அளவான 422 பில்லியன் டாலர் சரக்கு ஏற்றுமதிகளில் பெரும் பங்கு, பொறியியல் சரக்குகளுக்கே இருந்தன. ஆனால் இப்போது அது 11.3 சதவிகித அளவுக்கு சுருங்கியிருக்கின்றன. ஜவுளியும் 25 சதவிகித அளவில் சரிந்திருக்கிறது. நிலுவையிலுள்ள டிசம்பர் மாத விழாக்கால ஆர்டர்கள் இப்போதும் கூட ஏற்றுமதியின் எண்ணிக்கைகளை மாதம் தோறும் உயர்த்தக் கூடும். ஆனால் முக்கியமான சந்தைகள் எல்லாம் மந்த நிலையை நோக்கிச் செல்லும் நிலையில் 2023ஆம் வருடத்தின் தொடக்கம், இந்தியாவின் வர்த்தக்கத்துக்கு கூடுதல் அழுத்தங்களை ஏற்படுத்தும். 2022-23ஆம் வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் 11.1 சதவிகிதம் வளர்ந்திருக்கும் சரக்கு ஏற்றுமதிகள் முழு வருடத்தில் 2.3 சதவிகிதம் வீழ்ச்சியடையக் கூடும் என்று எச்சரிக்கை செய்கிறது செவ்வாயன்று வெளியான கேர் மதிப்பீடுகளின் ஆராய்ச்சி அறிக்கை. 2023ல் சர்வதேச சரக்குகள் வர்த்தகம் வெறும் 1 சதவிகிதம் அளவே வளரும் என்று உலக வர்த்தக அமைப்பு கணிக்கும் நிலையில், இந்தியாவின் ஏற்றுமதிகள் 2023-24ஆம் வருடத்தில் 1.5 சதவிகிதம் மட்டுமே உயரக்கூடும் என்று கேர் சொல்லியிருக்கிறது. சேவை ஏற்றுமதிகள் மற்றும் வருவாய் வரத்து இரண்டும் இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றக்குறையை சரக்கு வர்த்தக சமநிலையற்ற தன்மையிலிருந்து காப்பாற்றி, பொருளாதாரத்தின் வெளிப்புற பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம். ஆனால் கொள்கையை வகுப்பவர்கள், ஏற்றுமதி தீவிரமாக இருக்கும் துறைகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு இது ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவில் இருப்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். அந்த தொழிற்சாலைகள் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை தருபவையாகவும் இருப்பதால் உள்நாட்டு உணர்வு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். சமீப வாரங்களில் பொறியியல் ஏற்றுமதிகளை பாதிக்கும் எஃகு மற்றும் இரும்பு தாது மீதான ஏற்றுமதி வரியை தாமதமாக அரசு ரத்து செய்தது. அதோடு அவற்றை இது வரை விலக்கப்பட்ட துறைகளான மருந்துகள் மற்றும் ரசாயனங்கள் போன்றவற்றுடன் இணைத்து வரி திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ் அரசு கொண்டு வந்தது. வரவிருக்கும் கொந்தளிப்பான நிலையில் நிலைத்திருக்கவும், சர்வதேச அளவில் வர்த்தகத்தில் தமது பங்கை விரிவுப்படுத்தவும் இந்திய ஏற்றுமதியாளர்கள் சந்தை யதார்த்தங்களை கண்காணிப்பது மிக முக்கியம். புதிய சவால்களை திறமையாக எதிர்கொள்ள இது உதவும். வியட்நாம், கம்போடியா, வங்க தேசம், சீனா ஆகிய நாடுகள் கோவிட்-19க்கு முந்தைய வருடங்களில் சர்வதேச வர்த்தக வளர்ச்சி குறைந்த போதும் தமது பங்குகளில் உயர்வை கண்டன. வீசவிருக்கும் புயலிலிருந்து வலுவாக வெளிப்பட இந்தியாவும் முயற்சிக்க வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE