திங்கள் கிழமையன்று இந்திய தேர்தல் ஆணையம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், தற்போது பாலாசாகேபாஞ்சி சிவசேனை என்கிற பெயரை ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனை பிரிவுக்கு ஒதுக்கியதோடு செவ்வாய் கிழமைக்குள் மூன்று புதிய சின்னங்களின் பட்டியலை தருமாறு கேட்டிருக்கிறது. சிவசேனையின் பெயருக்கும் ‘அம்பு - வில்’ சின்னத்துக்கும் மகராஷ்டிராவின் முதல்வரான திரு.ஷிண்டேவும் உரிமை கோரியிருக்கிறார். சிவ சேனையின் பெயரையும் சின்னத்தையும் முடக்குவது என்று ஆணையம் எடுத்த முடிவுக்கு முன்னுதாரணங்கள் இருந்தன. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சியில் முன்பு பிளவுகள் ஏற்பட்ட போது சின்னத்துக்கான உரிமை கோரல்கள் மீது இறுதி முடிவு எடுக்கப்படும் வரையில் அதை ஆணையம் முடக்கி வைத்திருந்தது. பல ஆண்டுகளுக்கான பரஸ்பர தொடர்புக்கு பிறகு சின்னங்கள் என்பது அரசியல் கட்சிகளுக்கு வெறும் குறியீடுகள் மட்டுமில்லை. சில நேரங்களில், சின்னங்கள் அரசியல் பொருளையும் கொண்டிருக்கிறது – ராஷ்டிரிய ஜனதா தளத்தின் ‘விளக்கு’ மற்றும் சமாஜ்வாதி கட்சியின் ‘மிதிவண்டி’ போன்றவற்றை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். ‘வில் - அம்பு’ சின்னம், எப்போதும் போர்க்குணத்தோடும் கடுமையாகவும் இருக்க வேண்டிய தேவையோடு ஒத்துப்போவதாக சிவசேனை நினைத்திருக்கலாம். இந்தச் சின்னத்திற்கு உரிமை கோருவதுதான் இந்த இரண்டு கோஷ்டிகளுக்குமிடையிலான பிரச்னையின் மையமாக இருக்கிறது. தேர்தல் ஆணையம் அதை முடக்கி விட்டாலும், பெயருக்கும் சின்னத்துக்குமான சட்டபூர்வமான மோதலை இரு பிரிவினருமே தொடர்வார்கள். தங்களது உரிமை கோரல்களுக்கு ஆதரவாக இரு கோஷ்டிகளும் தகவல்களையும் பொய்களையும் திரட்டி வரும் நிலையில், சேனையின் அடையாளத்தை கைகொள்வதற்கு எந்த பிரிவுக்கு உரிமை இருக்கிறது என்பதை தீர்மானிப்பது, ஆணையத்துக்கு கடினமான பணியாகவே இருக்கும். மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாரதீய ஜனதா கட்சியோடு திரு. ஷிண்டே கூட்டணியில் இருக்கிறார். பால் தாக்கரேவின் பாரம்பரியம் யாருக்கு உரிமையாகும் என்பது இரு தரப்புக்குமே அவர்களது அரசியல் வாய்ப்புகள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சிவ சேனையின் பெயருக்கும் சின்னத்துக்கும் சட்ட ரீதீயான மோதல் நடந்து கொண்டிருந்தாலும் கடைசியில் இந்த உரிமை கோரல் விவகாரம் அரசியல் ரீதியாகவே முடிவுக்கு வரும். ஆனால் யாரிடம் சின்னமும் பெயரும் செல்கிறது என்பதை தாண்டி, உண்மையில் எந்த கோஷ்டியை பொதுமக்கள் அசலான சிவசேனையாக பார்க்கிறார்களோ, அந்த கோஷ்டியே போட்டியில் வெற்றி பெறும். அதனால் தங்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதை நிறுவ இரு பிரிவுகளுமே கடுமையான முயற்சிகளை மேற்கொள்கின்றன. சிவசேனையின் வருடாந்திர நிகழ்ச்சி நிரலில் மிக முக்கியமான இடத்தைப் பெறும் தசரா பேரணியில் இந்த முறை ஒரே மாதிரி நிகழ்வு இரு இடங்களில் நடந்தன – சிவசேனக்கு பாரம்பரிய இடமான சிவாஜி பூங்காவில் திரு.தாக்கரே உரையாற்றினார். அங்கிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் இன்னொரு இடத்தில் திரு.ஷிண்டே உரையாற்றினார். அந்தேரி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைதேர்தல் நடைபெறும் நவம்பர் 3 ஆம் தேதிதான் இரண்டு பிரிவினருக்கும் உண்மையான சோதனை நடக்கும் நாள். ஷிண்டே பிரிவின் ஆதரவுபெற்ற பா.ஜ.க வேட்பாளரை எதிர்த்து தாக்கரே பிரிவு வேட்பாளர் போட்டியிடுவார். தனது தந்தையும் சிவசேனையின் நிறுவனருமான பால் தாக்கரேவின் பெயருக்கான உரிமையை திரு.தாக்கரே பெற்றிருக்கலாம், ஆனால் அவரது பண்பும் பாணியும் கட்சியின் பெயருக்கு சற்று மிதமானதாக இருக்க கூடும். இன்னொரு புறம், திரு.ஷிண்டேவுக்கு பெயர் இல்லாமல் இருக்கலாம், ஆனால், தெருவில் நடக்கும் யுத்தத்திற்கு அவர் தயாராக இருக்கிறார். இம்மாதிரி யுத்தங்கள்தான் சிவசேனயை உருவாக்கின. இரு பிரிவுகளும் இன்னொன்றை தாண்டி நீண்ட நாட்கள் தழைக்கும் சாத்தியங்கள் அதிகமில்லை. வெற்றியாளர் யார் என்பதை முடிவுசெய்ய சின்னம் மட்டும் போதாது, ஆனால் மோதலுக்கு பின்னர் தழைக்கும் பிரிவுக்கு அது குறியீட்டு மதிப்பைவிட கூடுதல் மதிப்பு வாய்ந்ததாக இருக்கும்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE