அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் குவாண்டம் புரட்சி ஒரு புதிய அத்தியாத்தை உருவாக்கியது. டிரான்ஸிஸ்டர்கள் மின்னணுவியலை ஒட்டுமொத்தமாக மாற்றின. தொடர்பியல் தொடங்கி மருத்துவம் வரை லேசர்கள் அடித்தளங்களை அமைத்துக் கொடுத்தன. இந்த வருடம் இயற்பியலுக்கான நோபல் விருது குவாண்டம் இயற்பியலுக்கு தரப்பட்டிருப்பது இன்னொரு மைல்கல். இதை வளர் நிலையில் இருக்கும் ஒரு புரட்சி என்கிறார்கள். காரணம், குவாண்டம் கணிணியியல், குவாண்டம் மறை தகவலியல் மற்றும் குவாண்டம் வலைப்பின்னல்களில் பல செயலிகளுக்கான சாத்தியங்களை இது கொண்டிருக்கிறது. “சிக்கலான ஒளியணுக்கள், பெல் (Bell) ஏற்றத்தாழ்வுகளின் மீறல்களை நிறுவதல் மற்றும் குவாண்டம் தொடர்பு அறிவியலில் முன்னோடி” சோதனை அடிப்படையிலான பணி செய்ததற்காக அலைன் அஸ்பெக்ட் (ஃபிரான்ஸ்), ஜான் எஃப். கிளாசர் (அமெரிக்கா) மற்றும் அண்டன் ஸெயிலிங்கர் (ஆஸ்திரியா) ஆகியோருக்கு இந்த முறை நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களது பணியின் பொதுவான அடிப்படை குவாண்டம் பின்னல். இது குவாண்டம் இயங்குவியலில் ஒரு திருப்பம் எனலாம். அதாவது, இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட துகள்கள் ஒரு ‘பின்னல் நிலையில் இருப்பதும், அப்படி இருக்கும் போது துகள்களுக்கிடையில் எவ்வளவு இடைவெளி இருந்தாலும் ஒரு துகளுக்கு நிகழ்வது இன்னொரு துகளையும் உடனடியாக பாதிப்பதும்தான்’ இது. இதைதான் ஐன்ஸ்டின் ‘தொலைவில் நிகழும் அச்சுறுத்தும் ஒரு செயல்பாடு’ என்றார். அவரையும் போரிஸ் பொடொல்ஸ்கி, நாதன் ரோசென் போன்றோரையும் எண்ண சோதனை (1935) மேற்கொள்ள அது ஊக்கப்படுத்தியது - ஒரே நேரத்தில் உயிருடனும் இறந்தும் இருக்கும் சுரோடிங்கரின் பூனை பற்றிய பிரச்னையை அவர்கள் கையிலெடுத்தார்கள். வெளியில் பிரிந்து கிடக்கும் துகள்களின் நிலையை தீர்மானிக்கும் ‘மறை மாறிகள்’ இருக்கலாம் என்பதும் அவற்றை பின்னலில் வைத்திருக்க கூடிய எந்த திருப்பமும் குவாண்டம் இயக்கவியலில் இல்லை என்பதும் குவாண்டம் இயக்கவியலின் அடிப்படைகளுக்கு சவால்விட்ட ஒரு கருத்தாக இருந்தது.
குவாண்டம் இயக்கவியலுடன் அந்த பகுதி சார்ந்த மறை மாதிரி கோட்பாடுகள் இணக்கம் கொண்டதா என்பதை சோதிக்க ஒரு கணித முறையை 1964ல் கொண்டு வந்தார் ஜான் ஸ்டீவர்ட் பெல். பல மேம்படுத்துதல்களுக்குப் பிறகு இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு பெல் ஏற்றத்தாழ்வுகள் என்று பெயரிடப்பட்டது. ஜான் கிளாசரும் அலைன் அஸ்பெக்டும் இந்த பெல் ஏற்றத்தாழ்வுகளில் உள்ள மீறல்களை சோதனைமுறையில் காட்டியதற்காக விருது பெறுகிறார்கள். இதன் பொருள், பின்னல் என்பது குவாண்டம் இயக்கவியலின் ஒரு உள்ளார்ந்த பகுதி; பின்னலில் உள்ள துகள்களின் தன்மைகளை தீர்மானிக்கும் மறை மாதிரிகள் எதுவும் இல்லை என்பதுதான். இது இந்த துறையில் மேலும் வளர்ச்சிக்கு இட்டுச் சென்றது. அண்டன் ஸெயிலிங்கர் மற்றும் அவரது குழு ‘குவாண்டம் தொலைபெயர்வு’ (quantum teleportation) என்பதை நிறுவும் சவாலை ஏற்றுக்கொண்டார்கள். இந்த வார்த்தைகள் மந்திர - தந்திரத்தைப் போல ஒலித்தாலும், உண்மையில் பொருட்கள் இடம்பெயர்வதில்லை. மாறாக, ஆனால் அவற்றின் குவாண்ட வடிவம் பற்றிய தகவல்கள் தொலை நகர்கின்றன. இது தொடர்பியலிலும் மறை தகவலியலிலும் புதிய வடிவங்களுக்கு உதவுகிறது. இன்று பல கிலோமீட்டர்கள் நீளும் ஒளியியல் இழை வழி பயணிக்கும் போது ஒளியணுக்களுக்கிடையிலான குவாண்டம் பின்னல் நிறுவப்பட்டிருக்கிறது. மேலும், பூமியில் உள்ள ஒளியணுக்களுக்கும் செயற்கைக் கோள்களில் உள்ள ஒளியணுக்களுக்கும் இடையிலான குவாண்டம் பின்னல்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. கவர்ச்சியான மற்றும் நம்பிக்கைக்குரிய இந்த தன்மையை மேலும் பயன்படுத்தும் வழிகளை ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
This editorial has been translated from English, which can be read here.
Published - October 07, 2022 12:04 pm IST