யுக்ரைன் போர் குறித்த ஒத்த கருத்து எதுவும் ஏற்படாமலேயே பெங்களூருவில் நிதியமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் (Finance Ministers and Central Bank Governors - எஃப்.எம்.சி.பி.ஜி) ஆகியோரின் கூட்டம், தில்லியில் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் ஆகிய இரண்டு முக்கியமான ஜி -20 அமைச்சர்கள் கூட்டங்கள் முடிவடைந்த நிலையில், தூதர்களும் ஜி-20 அதிகாரிகளும் சற்று இடைநிறுத்தி ஜி-20 தலைமைக்கான அரசின் வியூகம் பற்றிய நிலையை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ஆசிய நிதி நெருக்கடிக்குப் பிறகு சர்வதேச பொருளாதார ஒருங்கிணைப்புக்கு உதவும் பொருட்டு 1999ல் அமைக்கப்பட்ட மிகவும் முன்னேறிய 20 பொருளாதாரங்களுடைய முக்கிய “நிதி பாதையின்” ஒரு பகுதியாக எஃப்.எம்.சி.பி.ஜி உள்ளது. மற்றொன்று, “ஷெர்பா டிராக்”. இது ஜி -20 இன் இலக்கு நிர்ணயிக்கும் செயல்திட்டத்தில் செயல்படுகிறது. ரஷ்யா-மேற்கு பிளவுகளைக் குறைக்க கடந்த ஆண்டு இந்தோனேசியாவில் இந்தியா பெற்ற அனுபவத்துடன், சக்திவாய்ந்த புவிசார் அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் தலைமை பதவிக்கான சவால்கள் தெளிவாக இருந்திருக்க வேண்டும். ஆனால், பெங்களூரில், ரஷ்யாவும் சீனாவும் வெறும் மூன்று மாதங்களுக்கு முன்பு ஒப்புக்கொண்ட யுக்ரைன் போர் குறித்த கருத்தை ஏற்க மறுத்தது ஆச்சரியம். இதனால் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிடுவதற்கு பதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவைத் தலைவரின் சுருக்கக் குறிப்பையும் விளைவுகளின் ஆவணத்தையும் மட்டுமே வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ரஷ்யாவும் சீனாவும் ஆட்சேபம் தெரிவித்த பத்திகளை ஆவணத்தில் பெயரிட்டு சேர்க்கவும் அரசு முடிவு செய்தது. இது ஒரு முன்னுதாரணம் போலத் தோன்றியது. காரணம் கடந்த வருடம், தலைவர் மட்டத்திலும் எஃப்.எம்.சி.பி.ஜி மட்டத்திலும் இந்தோனேசியத் தலைமையின் கூட்டு அறிக்கைகள் “பல” மற்றும் “பெரும்பாலான” நாடுகளின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இருந்தன. பெங்களூரின் நெருக்கடிக்கு பிறகு, வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கான ஒரு கூட்டு அறிக்கை பற்றிய பேச்சுவார்த்தைக்கு அரசு செய்த முயற்சி, ஆச்சரியமாக இருந்தது மட்டுமில்லை அதிகப்படியாகவும் இருந்தது. இறுதியில், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பாலி மாநாட்டில் எழுதப்பட்ட இரண்டு பத்திகள் குறித்த வேறுபாடுகளை மேற்கோள் காட்டி, தலைவரின் சுருக்கம் மற்றும் முடிவு ஆவணங்களையும் வெளியிட்டார். வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அறிக்கை வெளியிட முயற்சி கூட எடுக்காததில் இது முதல் முறை.
இந்த இரண்டு சந்திப்புகளும் இந்தியாவின் ஜி-20 செயல்திட்டத்துக்கான ஒரு கடினமான தொடக்கத்தை அளித்திருந்தாலும், செப்டம்பரில் தலைவர்கள் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக ஒரு நீண்ட பாதை இருக்கிறது. உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, கடன் மேலாண்மை போன்ற உலகளாவிய தெற்கின் முக்கியமான பிரச்சினைகள் தொடர்பான அறிக்கைகளில் பெரும்பாலானவை சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ளன என்று திரு. ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இரண்டாவதாக, பாலி உச்சிமாநாட்டின் மொழியை இந்தியா நம்ப முடியாது என்பது தெளிவாக இருக்கும் நிலையில், ஷெர்பாக்கள் யுக்ரைன் குறித்து ஒரு புதிய ஒருமித்த மொழியை உருவாக்க வேண்டும். இந்த மொழியில் ரஷ்யாவுக்கு இருக்கும் பிரச்னைகளை கணக்கில் எடுக்கும் அக்கப்பூர்வமான வியூகங்களும் கூர்ந்த கவனமும் தேவை. அதோடு, பாலி ஆவணத்தில் ரஷ்யாவின் நடவடிக்கைகளை கண்டிப்பதில் வெற்றிகளை கண்ட மேற்குலகு அதை தக்கவைக்கும் விருப்பத்தையும் கணக்கில் எடுக்க வேண்டும். கூட்டங்களை நடத்த வேண்டிய தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா முக்கியமான ஒரு கட்டத்தில் இருக்கிறது. ஜி-7, அமெரிக்கா தலைமையிலான வளர்ந்த நாடுகள் மற்றும் இப்போது வலுவடைந்திருக்கும் ரஷ்யா-சீனா கூட்டணி ஆகியவற்றின் வேரூன்றிய முகாம்கள் தவிர மற்ற நாடுகளை குழுவில் சேர்ப்பதன் மூலம் இந்தியா அடையும் பயன், மத்திய பாதையை கண்டறிவதை உறுதி செய்யும்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE