அமெரிக்க ஒப்பன், மரபுகளை உடைத்தெறியும் ஒரு போட்டி. 1970லேயே இறுதி செட்டில் டை-பிரேக்கை அறிமுகப்படுத்திய முதல் முக்கியமான போட்டி அது. இந்த வருடம், போட்டிகளின் போதே பயிற்சியளிப்பதை அறிமுகப்படுத்தும் முதல் போட்டியாகியிருக்கிறது. வேறு மாதிரியான மரபுகளை உடைத்தெறியும் தன்மையும் இதற்கு உண்டு. ஃபளஷிங் மீடோஸ் எந்தவொரு தனிப்பட்ட ஆண் போட்டியாளரும் உரிமைக் கோரக் கூடிய இடமில்லை. ஜனவரி 2006 தொடங்கி ஆஸ்திரேலிய ஓப்பன், ரொலாண்ட்-காரோஸ் மற்றும் விம்பிள்டன் இணைந்து ஐந்து வெவ்வேறு வெற்றியாளர்களை பார்த்திருக்கின்றன. அதே காலகட்டத்தில், அமெரிக்க ஒப்பன் பத்து வெற்றியாளர்களை பார்த்திருக்கிறது. கடைசியாக வெற்றிப் பெற்றவர் ஸ்பெயினின் பரபரப்பு நாயகனான கார்லோஸ் அல்காரஸ். நார்வேயைச் சேர்ந்த காஸ்பர் ரூட்டுடனான போட்டியில் நான்கு-செட் வெற்றிக்கு பிறகு நியூ யார்க்கின் அரசராக அவருக்கு முடி சூட்டப்பட்டது. இந்த வெற்றி 19 வயது அல்காரஸை ஏடிபி தரவரிசையின் உச்சிக்கு இட்டுச் சென்றிருக்கிறது. மிக இளவயதில் அந்த இடத்துக்குச் சென்ற வீரராக அவர் இருக்கிறார். 2005இல் ரஃபேல் நடால் பிரெஞ்ச் ஒப்பனை வெற்றி பெற்ற பிறகு ஒரு கிராண்ட் ஸ்லாம் போட்டியில் வெல்லும் முதல் பதின் பருவ வீரரும் அவர்தான். கோப்பைக்கான போட்டி, அல்காரஸின் அக்னி பரிட்சை என்று சொல்லலாம். இறுதிப் போட்டிக்கு முன்பு 20 மணி நேரங்கள் அவர் அரங்கத்தில் செலவிட்டார். நள்ளிரவு தாண்டி முடிந்த மூன்று கடினமான ஐந்து-செட் ஆட்டங்களை அவர் ஆட வேண்டியிருந்தது. அரங்கத்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய திறமை மற்றும் நிலைத்தன்மைக்காக அறியப்பட்ட ரூட்டுக்கு ஒரு பெரிய போட்டியின் இறுதி ஆட்டத்தில் பங்கேற்ற அனுபவம் இருக்கிறது (2022 பிரெஞ்ச் ஓப்பன்). ஆனால் அல்காரஸ் ஏமாற்றத்தை சந்திக்கவில்லை. நடால் மற்றும் நொவாக் ஜோகொவிக்கிற்கு எதிராக அடுத்தடுத்த வெற்றிகளை ஈட்டிய கையோடு மே மாதம் அலெக்ஸாண்டர் ஸ்வெர்வை வீழ்த்தி மாட்ரிட் மாஸ்டர்ஸ் பட்டத்தை கைபற்றியபோது இருந்த அதே உற்சாக மனநிலையோடு அவர் ஆட்டத்தை எதிர்கொண்டார்.
அல்காரஸின் முன்னேற்றத்தில் சூழ்நிலைகள் ஒரு பங்காற்றின. விம்பிள்டன் வெற்றியில் ஜோகோவிக்கிற்கு எந்த புள்ளிக்களும் வழங்கப்படாததும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் அவர் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதும் அல்காரஸின் பாதையை கொஞ்சம் எளிதாக்கியது. வெகு நிச்சயமாக அவர் மிகச் சிறந்த அதிரடியான டென்னிஸ் ஆட்டத்தை ஆடுகிறார் என்றாலும் சமகாலத்தில் அவருக்கு நிகரான போட்டியாளர்களும் இருப்பார்கள். காலிறுதிப் போட்டியில் நான்காவது செட்டுக்கு பின்னர் ஜானிக் சின்னருக்கும் போட்டி புள்ளி இருந்தது. ஆனால் நம் சமீபகால நினைவில் இவ்வளவு சிறப்பான அம்சங்களை ஒன்றாக கொண்ட வேறொரு விளையாட்டு வீரர் யாருமில்லை – பந்தை அடிப்பதிலுள்ள தேர்வு, இயல்பான அமைதி, பெரிய போட்டிகளின் போது வழக்கமாக வரும் தடுமாற்றம் சுத்தமாக இல்லாத நிலை என்று அல்காரஸ் ஒரு முழுமையான நிறைவான போட்டியாளராக இருக்கிறார். ஸ்பெயினைச் சேர்ந்த இந்த போட்டியாளர் ஆண்கள் ஆட்டப்பிரிவின் உச்சத்தில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் என்றால் பெண்கள் பிரிவும் ஒரு சமநிலையை எட்டிக் கொண்டிருக்கிறது. ஆதிக்கம் செலுத்தும் ஒரு குழுவும் அடுத்த நிலையில் ஒரு குழுவும் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து சந்தேகத்துக்கு இடமின்றி சர்வதேச அளவில் முதலிடத்தில் இருக்கும் இகா ஸ்வியாடெக் தனது முதல் அமெரிக்க ஓப்பன் கோப்பையை தட்டிச் சென்றார். பாரீஸுக்குப் பிறகு 2022இல் இது அவரது இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் வெற்றி; ஒட்டுமொத்தமாக பார்த்தால் மூன்றாவது வெற்றி. ஓனஸ் ஜாபுர் இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்குச் சென்றார். கிராண்ட் ஸ்லாமைப் பொறுத்தவரையில் நவோமி ஒசாகாவிடம் அதிக எண்ணிக்கையிலான வெற்றிகள் இருந்தாலும் (மொத்தம் நான்கு), ஸ்வியாடெக்கின் உத்வேகம் தரும், முழு விளையாட்டரங்க திறன் அவரை அடுத்த பிம்பத்துக்கான சரியான தேர்வாக முன்னிறுத்துகிறது. நியூ யார்க்கில் மூன்றாவது சுற்றில் அடைந்த தோல்விதான் அவருடைய கடைசி ஆட்டம் என்று சொல்லப்படும் நிலையில் செரீனா வில்லியம்ஸ்ஸின் ஓய்வு பெறும் முடிவை அடுத்து, கடைசியில் பணியும் பொறுப்பும் வேறொரு நபரிடம் ஒப்படைக்கப்படுவது போல தோன்றுகிறது.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE