பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி ஐந்து மாதங்களில் மூன்றாவது முறையாக சரிந்திருக்கிறது. 33.8 பில்லியன் டாலர் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட 8.8 சதவீத சரிவையே குறிக்கிறது. பொதுவாக உற்சாகமாக இருந்த ஏற்றுமதி வளர்ச்சியின் சமீபத்திய காலங்களில், 2022 அக்டோபரில் மட்டுமே கடுமையான சரிவு பதிவாகியிருக்கிறது. எண்ணெய் ஏற்றுமதியில் 29 சதவீத கூர்மையான சரிவு, ரசாயன ஏற்றுமதியில் 12 சதவீத சரிவு மற்றும் பொறியியல் சரக்குகளின் வெளியேற்றத்தில் 10 சதவீத சுருக்கம் ஆகியவையே – இவை மூன்றும் இந்தியாவின் வர்த்தக ஏற்றுமதியில் கிட்டத்தட்ட பாதியைக் கொண்டிருக்கிறது - பிப்ரவரியின் சரிவைத் தூண்டியது. ஆனால் சர்வதேச தேவைகள் தடுமாறத் தொடங்கியதன் தாக்கம் அதைத் தாண்டி சென்றது. இதனால் இந்தியாவின் முதல் 30 ஏற்றுமதி பொருட்களில் மேலும் 13 பொருட்களை கீழிறக்கியது. பிப்ரவரியின் ஏற்றுமதிகள், அக்டோபர் மாதத்தின் தரவுகளை விட இன்னும் 7.3 சதவீத அளவில் அதிகமாகவே இருக்கிறது. ஆனால் 2022ன் கடைசி காலாண்டில் நிலவிய மோசமான சூழலை நோக்கித்தான் உடனடியான கண்ணோட்டம் திரும்பிக் கொண்டிருக்கிறது. அது உலகின் பெரும்பாலான பகுதிகள் மந்தநிலைக்குள் செல்வதை பற்றியது. கடந்த சில மாதங்களாக முக்கிய சந்தைகளின் மீண்டெழும் தன்மை கொண்ட பொருளாதார தரவுகள், 2023ம் ஆண்டில் உருவாகும் என்று பயந்த மோசமான நிலையை உலகப் பொருளாதாரம் தவிர்க்கக்கூடும் என்ற நம்பிக்கையை தந்தது. ஆனால் மார்ச்சின் மத்திய பகுதி இப்போதைக்காவது அந்த நம்பிக்கையை தகர்த்திருக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி தளமான அமெரிக்காவில் சில்லறை விற்பனை ஜனவரியில் 3 சதவீதம் உயர்ந்தது, ஒரு நம்பிக்கையளித்த ஆச்சரியம். ஆனால் பிப்ரவரியில் அது சரிந்தது. இரண்டு அமெரிக்க வங்கிகளின் தோல்விகளும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் போராடி வரும்
நிலையிலும், ஐரோப்பிய வங்கியாளரான கிரெடிட் சூயிஸ் பாதிப்புகளை வெளிப்படுத்தியிருப்பது, இந்த வேகம் விரைவில் திரும்பாது என்பதையே குறிக்கிறது. புதன்கிழமை, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 5 சதவீதம் குறைந்தது. எதிர்பாராத சுமுகமான ஆண்டுத் தொடக்கத்துக்குப் பிறகு இப்போது மந்தநிலை ஏற்படும் ஆபத்துகள் மீண்டும் உருவாகியிருக்கின்றன. ஏற்கனவே இரண்டு காலாண்டுகளாக உற்பத்தி சுருங்கி வரும் நிலையில், தொடர்ந்து சரிந்து வரும் ஏற்றுமதி, தொழிற்சாலைகளில் வேலையிழப்புக்கு இட்டுச் செல்வதோடு நுகர்வை குறைக்கும். பிப்ரவரியின் இறக்குமதியில் 8.2 சதவீத சரிவு - இது மூன்று மாத சுருக்கப் போக்கில் கூர்மையானதும் கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் இறக்குமதி ரசீதுகளில் குறைவானதும் கூட (51.3 பில்லியன் டாலர்) – சர்வதேச அதிர்ச்சிகளிலிருந்து பொருளாதாரத்தை பாதுகாக்கும் என்று நம்பப்படும் உள்நாட்டு தேவையைப் பொருத்த வரையில் சரியாக பிரதிபலிக்கவில்லை. இதில் சில, அளவுக் காரணிகளை விட விலைகள் காரணமாக இருக்கலாம் (யுக்ரெயின் போருக்குப் பிறகு எண்ணை மற்றும் சமையல் எண்ணை விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது). பலவீனமான ஏற்றுமதிக்கு மத்தியில் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருக்க அரசு தேவையற்ற இறக்குமதியைக் கட்டுப்படுத்த பார்க்கிறது. ஆனால் தரம், விலை நிர்ணயம் மற்றும் விநியோக சங்கிலி இணைப்புகள் போன்ற காரணிகளும் முக்கியமானவை என்கிற நிலையில் தவறான நடவடிக்கைகள் நுகர்வோர் (மற்றும் முதலீட்டாளரின்) தேர்வை கட்டுப்படுத்தும் என்கிற வகையில் இது சற்று சிக்கலான இடமும் கூட. கடந்த செப்டம்பரில் ஏற்பட்ட 29.2 பில்லியன் டாலர் மட்டத்திலிருந்து பற்றாக்குறை ஏற்கனவே ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கூர்மையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், கொள்கையின் அலைவரிசையை இன்னும் சிறப்பாக பயன்படுத்தி, புதிய சந்தைகளை கண்டுபிடிக்கவும் முக்கியமான சந்தைகளின் வேகமாக மாறும் போக்குக்கு இன்னும் விரைவாக எதிர்வினையாற்றவும் ஏற்றுமதியாளர்களுக்கு உதவலாம். 2015-20-ம் ஆண்டுக்கான வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் மறு சீரமைப்பு நீண்டகாலமாக தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில் எக்காரணம் கொண்டும் இனியும் தாமதிக்கப்படக் கூடாது.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE