2022ன் கடைசி மாதத்தைப் பொறுத்தவரையில், அதிக தலைப்பு பணவீக்கத்தால் ஆதிக்கம் செலுத்திய ஆண்டின் முடிவாக அது இருந்தது. அது இசைவான ஒன்று போலவும் தெரிந்தது. டிசம்பர் மாதத்தில் நுகர்வோர் எதிர்கொள்ளும் சராசரி விலை உயர்வு நவம்பர் 2021க்குப் பிறகு மிகக் குறைவாக 5.7 சதவீதமாக இருந்தது. மொத்த விலை பணவீக்கமும் நவம்பரில் 5.88 சதவீதத்தில் இருந்து 22 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.95 சதவீதமாக குறைந்துள்ளதை திங்கள் கிழமை வெளியிடப்பட்ட தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. டிசம்பர் 2021, 14.2 சதவீத மொத்த விலை உயர்வைப் பதிவு செய்த நிலையில், அது குளிரூட்டும் விளைவை மிகைப்படுத்தியது. ஆனாலும், மே 2022ல் எப்போதுமில்லாத அதிகரிப்பான 16.6 சதவீதத்தை ஒட்டுமொத்த பண வீக்கம் அடைந்த நிலையில் இது மிதப்படுத்துதல் தொடர்ச்சியாக நடந்த ஏழாவது மாதம் என்பதையும் இது குறிக்கிறது. சில்லறை பணவீக்கம் 2022 செப்டம்பரில் 7.4 சதவீதத்திலிருந்து தொடர்ந்து நான்காவது மாதமாக குறைந்துள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், சில்லறை பணவீக்கம் மத்திய வங்கியின் 6 சதவீத வரம்பிற்கும் குறைவாகவே உள்ளது. மொத்த விலையுர்வு நுகர்வோர் விலைகளை விட மந்தமாகவே இருக்கிறது. இது அதிக உள்ளீட்டு செலவுகளை தவிர்க்க உற்பத்தியாளர்கள் மீதிருந்த அழுத்தத்தை தளர்த்தும் குறியீடாகவும் இருந்தது. தேர்தலுக்கு முந்தைய நிதிநிலை அறிக்கைக்கு அரசு தயாராகி வரும் நிலையில், 2022 அக்டோபர் டிசம்பரில் 6.1 சதவீதமாக இருந்த பண வீக்கம் நடப்பு காலாண்டில் சராசரியாக 5.9 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருக்கும் ரிசர்வ் வங்கியும் நுகர்வோரும் கூட இந்த வருடம் குறைந்த விலைகளுக்கான முன்னோடியாக இது இருக்கலாம் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
இருப்பினும், இந்த இரண்டு மாத மிதமான பணவீக்கம் இந்த விஷயத்தில் எந்தவொரு ஆறுதலையும் அளிக்கவில்லை. காரணம், சில பொருளாதார நிபுணர்கள் சொல்வது போல அவற்றின் மீது “தனித்துவமான” கூறுகளின் தாக்கம் முறையற்ற அளவில் இருக்கிறது. “காய்கறி விலைகள்”தான் அந்த கூறு. அக்டோபரில் சுமார் 8 சதவீத பணவீக்கத்திலிருந்து, காய்கறிகளின் விலைகள் நவம்பர் மற்றும் டிசம்பரில் முறையே 8 சதவீதம் மற்றும் 15 சதவீதம் என்கிற அளவில் வீழ்ச்சியடைந்தன. வெங்காயம், தக்காளி மற்றும் உருளைக் கிழங்கு விலைகள் குறைந்தன. இது உணவுப் பணவீக்கத்தைக் குறைத்தது. ஆனால் உணவுக்கான ஒட்டுமொத்த வீட்டுச் செலவுகளை அதிகம் குறைக்கவில்லை. உணவுப் பொருட்களின் மிகப்பெரிய பொருளான தானியங்கள் (13.8 சதவீதம் என்கிற அளவிலும் கோதுமை 22 சதவீதம் என்கிற அளவிலும் விலையர்வு இருந்தன) மீதான பண வீக்கம் தொடர்ந்து ஆறாவது மாதமாக அதிகமாக இருந்தது. பருப்பு வகைகள், பால், முட்டை, இறைச்சி மற்றும் மீன் மற்றும் மசாலாப் பொருட்களும் ஏற்றம் கண்டன. ஆடைகள், காலணிகள், தனிப்பட்ட பராமரிப்பு, வீட்டுப் பொருட்கள் அல்லது சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற சேவைகள் தீவிரமான விலை உயர்வு போக்குகளைக் காட்டுகின்றன. காய்கறிகளின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் அவற்றை விடுத்துப் பார்த்தால், நவம்பரில் சில்லறை பணவீக்கம் 7 சதவீதமாக இருந்தது டிசம்பரில் 7.2 சதவீதமாக முன்னேறியது. இது தலைப்புப் போக்கை பொய்யாக்கியது. உணவு மற்றும் எரிசக்தி தவிர்த்து விலைவாசி உயர்வை அளவிடும் முக்கிய பணவீக்கமும் அதிகரித்து கவனத்தைக் கோருகிறது. வட்டி விகித உயர்வுகளை நிறுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலயில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாசும் இதையே மீண்டும் வலியுறுத்தினார். கடுமையான பூஜ்ஜிய கொரோனா கொள்கையில் இருந்து சீன பொருளாதாரம் மீண்டு வருவதால், சர்வதேச பொருட்கள் மற்றும் எண்ணெய் விலைகள் மீண்டும் கடினமாகலாம். குறிப்பாக கிராமப்புற தேவையை தொடர்ந்து பாதித்து, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனியார் முதலீட்டுத் திட்டங்களைத் தடுக்கும் பணவீக்கப் பிரச்சினையில் இருந்து கவனத்தைத் திருப்புவதற்கு இது காலம் இல்லை.
This editorial was translated from English, which can be read here.
COMMents
SHARE