சிங்கப்பூரில் படிக்கும் அல்லது வசிக்கும் உறவினருக்கு பணத்தை மாற்றுவது அல்லது தென்கிழக்கு ஆசிய நகர-மாநிலத்தில் பணிபுரியும் ஒரு குடும்ப உறுப்பினரிடமிருந்து பணம் பெறுவது இப்போது மிகவும் எளிதாகிவிட்டது. பிப்ரவரி 21 அன்று, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் ஆகியோர் முறையே இந்தியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள தங்கள் தொலைபேசிகளில் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை செயல்முறை (யுபிஐ) மற்றும் பேநவ் மொபைல் பயன்பாடுகளைப் பயன்படுத்தி அடையாள ரீதியாக ஒருவருக்கொருவர் எல்லை தாண்டிய உடனடி பணம் பரிமாற்றத்தை செய்துக் கொண்டார்கள். இந்த பரிவர்த்தனைகள் தெற்காசியாவின் மிகப்பெரிய பொருளாதாரத்திற்கும் மலாக்கா நீரிணைக்கு அப்பால் அதன் கரையோர அண்டை நாட்டிற்கும் இடையே நிகழ்நேர நபருக்கு நபர் பண பரிமாற்றத்திற்கான எல்லை தாண்டிய இணைப்பின் தொடக்கத்தைக் குறிக்கின்றன. இந்த நாட்டில் கணிசமான இந்திய புலம்பெயர்ந்தோர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிங்கப்பூரின் ஹம்மிங் கட்டுமானம், கடல் கப்பல் கட்டும் தளம் மற்றும் சேவைத் துறைகளில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் இருக்கிறார்கள். இந்த இணைப்பு இப்போது சிங்கப்பூர் டாலர் அல்லது இந்திய ரூபாய் நிதியை ‘உறவினரின் பராமரிப்புக்காக’ அல்லது ‘பரிசாக’ அனுப்ப விரும்பும் நபர்களுக்கு இந்திய முனையில் யுபிஐ மற்றும் சிங்கப்பூர் முனையில் பேநவ் பயன்பாட்டைப் பயன்படுத்தி தடையின்றி பணத்தை மாற்ற உதவுகிறது. முதற்கட்டமாக இந்தியாவில் மூன்று பொதுத்துறை வங்கிகள் உட்பட ஆறு வங்கிகள், இரண்டு தனியார் வங்கிகள் மற்றும் சிங்கப்பூரின் டிபிஎஸ் வங்கியின் இந்திய கிளை ஆகியவை தங்களிடம் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு உள்வரும் பணம் அனுப்புவதை எளிதாக்கும். அதே நேரத்தில் ஒரு தனியார் கடன் வழங்குநர் மற்றும் மூன்று பொதுத்துறை வங்கிகள் தங்கள் இந்திய வாடிக்கையாளர்களுக்கு இணைப்பைப் பயன்படுத்தி பணம் அனுப்ப உதவும். சிங்கப்பூரில், டிபிஎஸ் வங்கி மற்றும் வங்கி அல்லாத கடன்
வழங்குநரான லிக்விட் குழுமத்தின் வாடிக்கையாளர்கள் பரிமாற்ற வசதியைப் பெறலாம்.
தினசரி பரிவர்த்தனை வரம்பு ₹ 60,000 அல்லது சுமார் 1,000 சிங்கப்பூர் டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் இது ஒரு சிறிய தொடக்கமே. என்றாலும், வங்கிக் கிளை அல்லது கம்பி பரிமாற்ற வசதிக்கான தளத்துக்கு செல்ல வேண்டிய அல்லது அதிக விலை மற்றும் அபாயகரமான ‘ஹவாலா’ சேனல்களை நம்ப வேண்டிய தொந்தரவுகள் இல்லாமல் தனிநபர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு விரைவாகவும் பாதுகாப்பாகவும் பணத்தை அனுப்ப இது உதவுகிறது. தனிநபர்கள் மற்றும் வணிகர்களுக்கான செயல்பாட்டு செலவுகளைக் குறைக்கும் வகையில் எல்லை தாண்டிய நிகழ்நேர பண பரிமாற்றங்களை எளிதாக்குவதற்கான பரந்த பிராந்திய முயற்சியின் ஒரு பகுதியாகவும் இந்த ஒப்பந்தம் உள்ளது. அதே நேரத்தில் அயல்நாட்டு தீர்வு நாணயத்தின் மீதான சார்பையும் இது குறைத்திருக்கிறது. இதுவரையில் அமெரிக்க டாலர்தான் இந்த தீர்வு நாணயமாக இருந்தது. 2021 ஆம் ஆண்டில் தாய்லாந்துடன் இதேபோன்ற கட்டண இணைப்பை சிங்கப்பூர் நிறுவியது. மலேசியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய பொருளாதாரங்களின் மத்திய வங்கிகளில் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பெரிய முன்முயற்சியின் ஒரு பகுதியாகவும் சிங்கப்பூர் இருக்கிறது. இது அவர்களின் உள்நாட்டு டிஜிட்டல் கட்டண முறைகளை ஒன்றோடொன்று இணைப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. எல்லை தாண்டிய டிஜிட்டல் கட்டண இணைப்புகளை மேம்படுத்த இந்தியாவும் சிங்கப்பூரில் பெற்ற உந்துசக்தியை பயன்படுத்திக் கொள்ள முடியும். தவிர நகர-மாநிலத்தின் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்புக்கும் இந்த கூட்டணியை விரிவுபடுத்தலாம். இது பிராந்திய வர்த்தகம் மற்றும் சுற்றுலாவுக்கு உறுதியாக ஊக்கமளிக்கும். தவிர, அத்தகைய இணைப்பு. இந்தியாவுக்கு உள்வரும் பணப் புழக்கத்தை மேலும் முறைப்படுத்த உதவும்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE