நவம்பர் மாதத்துக்கான எட்டு முக்கிய தொழில்களின் அதிகாரப்பூர்வ குறியீடு மற்றும் டிசம்பர் மாதத்திற்கான உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளுக்கான எஸ் & பி குளோபலின் கணக்கெடுப்பு அடிப்படையிலான கொள்முதல் மேலாளர்கள் குறியீடு (Purchasing Managers Index - பிஎம்ஐ) உள்ளிட்ட சமீபத்திய பேரியல் பொருளாதார தரவு, பொருளாதாரத்தின் அடிப்படை வேகம் குறித்த கலவையான சமிக்ஞைகளை வழங்குகின்றன. நிலக்கரி முதல் மின்சாரம் வரை மையத் தொழில்களில் உற்பத்தியானது நவம்பர் மாதத்தில் வருடத்துக்கு சராசரியாக 5.4 சதவீதம் என்கிற அளவில் அதிகரித்திருப்பதை அரசின் தரவுகள் காட்டுகின்றன. சிமெண்ட், நிலக்கரி, மின்சாரம் மற்றும் எஃகு போன்றவற்றில் இருந்த இரட்டை இலக்க வளர்ச்சி, குறியீட்டை உயர்த்த உதவின. ஆனாலும், தொடர்ச்சியான அடிப்படையில் பார்க்கும்போது மொத்தமுள்ள எட்டு துறைகளில் மின்சாரம், சுத்திகரிப்பு போன்ற முக்கியமான ஆறு துறைகளில் ஏற்பட வளர்ச்சி குறைவாகவே இருந்ததால், சராசரி மொத்த வளர்ச்சி மாறாமலேயே இருக்கிறது. மின்சார உற்பத்தி அக்டோபரில் 2.1 சதவீதம் அளவு சுருங்கியது. சுத்திகரிப்புத் துறை 3.1 சதவீத அளவில் தொடர்ச்சியாக சுருங்கின. நிலக்கரி மற்றும் சிமெண்ட் உற்பத்தி மட்டுமே வருடத்துக்கு வருடம் மற்றும் மாதத்துக்கு மாதம் அதிகரித்தன. இதன் பொருள், மின்சாரத்துக்காக இல்லாமல் உற்பத்தியாகும் நிலக்கரியும் கட்டுமான நடவடிக்கைகளும் மூன்றாவது காலாண்டில் சற்று கவனம் பெற்றிருக்கலாம். சிமெண்ட் உற்பத்தியில் உள்ள ஏற்றம் நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது. காரணம், கட்டுமானத்திற்கு மிக முக்கியமான சிமிண்ட்டின் உற்பத்தி அதிகரிப்பது, வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு பிரிவுகளில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும். இது நீடிப்பது பரந்துபட்ட பொருளாதார வேகத்துக்கு வலிமை சேர்க்கும். நிலக்கரி உற்பத்தியில் வருடந்தோறும் 12.3 சதவீத வளர்ச்சியும் 15.1 சதவீத தொடர்ச்சியான வளர்ச்சியும் சாதகமான ஒன்றுதான். காரணம் அது, அனல்மின் நிலையங்களுக்கும், உலோகம் தயாரிக்கும் தொழில்களின் உலைகளுக்குமான எரிபொருள் தேவையில் ஒரு முன்னேற்றத்தை குறிக்கிறது. தனியாகப் பார்த்தால், பிப்ரவரி 2021 முதல் புதிய ஆர்டர்கள் மிக வேகமாக அதிகரித்திருப்பதாக வர்த்தகத் துறை தெரிவித்த
நிலையில், உற்பத்தி வேகம் கணிசமாக வலுவடைந்திருப்பதை டிசம்பர் மாதத்தின் மிக சமீபத்திய பிஎம்ஐ தரவு காட்டியது. 400 உற்பத்தியாளர்களிடத்தில் கொள்முதல் செய்யும் மேலாளர்கள் பற்றிய தனியார் கணக்கெடுப்பு, இந்த நிறுவனங்களின் சராசரி உற்பத்தி வளர்ச்சி, கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவு உயர்ந்திருப்பதை உணர்த்தியது. 57.8ல் இருந்த பிஎம்ஐ, அக்டோபர் 2020க்கு பிறகான வலுவான வளர்ச்சியைச் சுட்டிக்காட்டுகிறது. சரக்கு உற்பத்தியாளர்கள் நிலுவையில் உள்ள ஆர்டர்களை பூர்த்தி செய்ய வேலைவாய்ப்பை அதிகப்படுத்தினார்கள். செப்டம்பர் தொடங்கி வேலை வாய்ப்புகளில் அதிகரிப்பு மிக மெதுவாக இருந்தாலும், இந்த துறையில் ஒட்டுமொத்தமாக வேலை வாய்ப்பு தொடர்ந்து பத்தாவது மாதமாக அதிகரித்திருந்தது, உற்பத்தியாளர்களிடையே இருந்த அதிகமான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. பிஎம்ஐ ஆய்வின்படி தனியார் துறையில் ஒட்டுமொத்த உற்பத்தி பணவீக்கம் தீவிரமடைந்திருக்கிறது. இரண்டரை வருடங்களில் முதன்முறையாக விற்பனை விலைகளில் பண வீக்கம் உள்ளீட்டு செலவுகளின் லாபங்களைவிட அதிகமாக இருந்ததாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தார்கள். இந்த கட்டத்தில் பணவீக்கம் குறித்து கவனக் குறைவாக கொள்கை வகுப்பாளர்கள் இருக்க முடியாது.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE