ADVERTISEMENT

ஆஸ்திரேலியாவுக்கான லட்சியம்

Published - October 22, 2022 11:47 am IST

ஐ.சி.சி கோப்பைகளின் வறட்சியை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா பார்க்க வேண்டும்.

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா கடந்த போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த நியூசிலாந்தை சனிக்கிழமையன்று சிட்னியில் எதிர்கொள்கிறது. இதற்கு முந்தைய ஐசிசி டுவென்டி 20 உலகக் கோப்பை போட்டிகள் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றன. அந்தப் போட்டிகளோடு ஒப்பிட்டால், இந்த முறை போட்டிகள் பெரும் மாற்றத்தைச் சந்தித்திருக்கும். கோவிட் - 19 பெருந்தொற்று விளையாட்டை கடுமையாகப் பாதித்திருந்தது. இதன் காரணமாக டி - 20யின் பிரீமியர் சாம்பியன் ஷிப் அட்டவணையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. தவிர, போட்டி நடக்கும் இடங்கள் மாற்றப்படுவது ஏற்கனவே போடப்பட்ட திட்டங்களை அச்சுறுத்தும் ஒரு விஷயமாக இருந்தது. ஒரு வழியாக, தொற்று நோய் குறைந்து வருவதுபோல இருக்கும் நிலையில், கிரிக்கெட்டின் இந்த மிகச் சிறிய வடிவம் ஆஸ்திரேலியாவை நோக்கி நகர்ந்திருக்கிறது. இதற்கிடையில் இதே காலகட்டத்தில் இந்திய பிரிமீயர் லீக் (ஐபிஎல்), பிக் பாஷ் மற்றும் இன்னும் நிறைய லீக் போட்டிகள், சர்வதேச போட்டிகள் நடக்கும் அதே தேதிகளில் நடக்கின்றன. பல நாடுகளில், குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் போட்டிகள் தனது தடத்தை பதித்து வரும் நிலையில் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் கால் பந்து வீரர்கள் எதிர்கொள்ளும் ஒரு மிகப் பழைய சிக்கலில் சிக்கியிருக்கிறார்கள் – நாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பதா அல்லது கிளப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதா என்பதுதான் அந்த சிக்கல். காரணம் டுவெண்டி - 20 சர்வதேச போட்டிகள், பெரும்பாலும் மறந்துவிடக்கூடிய இரு தரப்பு போட்டிகளுக்கிடையிலும் ஐபிஎல் மற்றும் பிற லீக்குகளின் கவர்ச்சியான ஆதிக்கத்திற்கு இடையிலும் தொலைந்து போய் விடுகின்றன. தகுதிச் சுற்றுகள் என்கிற அளவில் ஏற்கனவே தொடங்கிவிட்ட டி - 20 உலகக் கோப்பையின் எட்டாவது பதிப்பு, தேசியவாதம் மற்றும் வர்த்தகத்தின் வழி எப்படி விளையாட்டு பரிணமிக்க முடியும் என்பதற்கான சுட்டிகளை வழங்கும். விளம்பரதாரர்கள் முன் வைப்பது போல, இந்த பெரிய ஆட்டத்தில் வரும் ஞாயிறு அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஆசியக் கோப்பை போட்டிக்குப் பிறகு அண்டை நாடுகளுக்கு இடையில் நடக்கும் இந்த மூன்றாவது போட்டிக்கான டிக்கெட்டுகள் முற்றிலும் விற்று தீர்ந்துவிட்டன.

ADVERTISEMENT

அந்த இரண்டு நாடுகளும் மோதும் போட்டிகள் 1-1 என்ற கணக்கில் பிளவுபட்டாலும், ஐசிசி நிகழ்வுகளில், இந்தியா பெரும்பாலும் பாகிஸ்தானை முந்திச் செல்கிறது, ஆனால் கடந்த ஆண்டு டி - 20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் வெற்றி ஒரு எதிர் புள்ளியை வழங்கியது.

துப்பாக்கியில்லாத இந்த போரை எதிர்கொண்ட பிறகு, ரோஹித் ஷர்மாவும் அவரது வீரர்களும் அரையிறுதிப் போட்டிகளில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி பின்னர் நவம்பர் 13ல் நடக்கும் இறுதிப் போட்டிக்கு நுழைவதற்கு முன்னர், சூப்பர் 12 கட்டத்தில் இன்னும் பல சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும். 2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியின் போதுதான் இந்தியா கடைசியாக ஒரு ஐசிசி போட்டியில் வென்றது. அதன் பிறகு இந்திய வீரர்கள் தடுமாறியிருக்கிறார்கள். இந்தக் கறையைத் துடைக்கத்தான் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிடும் ரோஹித்தும் போராடுகிறார்கள். கடந்த ஐந்தாண்டுகளில் டெஸ்ட் போட்டிகளுக்காக ஆஸ்திரேலியாவில் நல்ல சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த நிலையில், அந்த நினைவுகளிலிருந்து தனக்கான வலிமையை இந்தியா பெறலாம். ஆனால் காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜாவும் ஜஸ்பிரித் பும்ராவும் விலகியிருப்பது அவர்களது திட்டங்களை பாதிக்கலாம். ரோஹித், கே.எல்.ராகுல் மற்றும் விராத் கோலி ஆகியோர் நன்றாக பயிற்சிப்பெற்ற மூவரணியாக இருக்கிறார்கள். ஆனால் தனது 360 டிகிரி அணுகுமுறை காரணமாக மிக முக்கியமான தகுதியை பேட்ஸ்மேன் சூரியகுமார் வைத்திருப்பது அவருக்கான தனிச்சிறப்பு. ஹர்திக் பாண்ட்யா தனது ஆல் ரவுண்ட் திறமையை வெளிப்படுத்தினால், இந்தியா சிறப்பாகச் செயல்படும். முகமது ஷமியின் மீள் வருகை, நேரடியாக பிட்ச்சைத் தாக்கும் ‘சீம்’ பந்துவீச்சை வலுப்படுத்தக் கூடும். தவிர சுழற்பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்த முடியுமென்றால், பெரிய ஆஸ்திரேலிய மைதானங்களில் ஃபீல்டிங் சுறுசுறுப்பாக இருந்தால் இந்த போட்டியின் தொடக்க ஆண்டில் பெற்ற வெற்றியை மீண்டும் இந்தியா எதிர்நோக்கலாம்.

This editorial has been translated from English, which can be read here.

This is a Premium article available exclusively to our subscribers. To read 250+ such premium articles every month
You have exhausted your free article limit.
Please support quality journalism.
You have exhausted your free article limit.
Please support quality journalism.
The Hindu operates by its editorial values to provide you quality journalism.
This is your last free article.

ADVERTISEMENT

ADVERTISEMENT