ADVERTISEMENT

நல்லதும் கெட்டதும்

June 03, 2023 11:46 am | Updated 02:18 pm IST

பாதகமான விளைவுகளைத் தவிர்க்கும் அதே நேரத்தில் செயற்கை நுண்ணறிவின் நன்மைகளை இந்தியா பயன்படுத்த வேண்டும்

உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு என்பது புதிய தரவுகளை உருவாக்கக் கூடிய செயற்கை நுண்ணறிவு. இன்று உலகில் உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு செய்யக் கூடிய பணிகள் பற்றிய பல உதாரணங்கள் இருக்கின்றன. இன்னும் அதிக திறன் இருந்தாலும் கூட அவை பொதுவாக பயனர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக உரை, படங்கள் மற்றும் குறியீட்டை உருவாக்கப் பயன்படுகின்றன. உருவாக்கும் செயற்கை நுண்ணறிவின் பரவலான பயன்பாட்டின் காரணமாக அதன் திறன்கள் மெருகேறின. இதனால் முதலில் பிரமிப்பும் பின்னர் கவலையும்கூட ஏற்பட்டது. OpenAIஇன் ChatGPT சாட்பாட் நுண்ணறிவை மிக நன்றாகவே பிரதிபலிக்கிறது; செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் திறன்கள் என்றாலே இதுதான் நினைவுக்கு வரும் என்கிற அளவில் இன்று ChatGPT இருக்கிறது. கடந்த சில வருடங்களில், நரம்பியல் தொடர்பு கட்டமைப்புகளால் இயக்கப்படும் செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் மிகப் பெரிய தரவுத்தொகுப்புகளில் பயிற்சியளிக்கப்பட்டு, போதுமான கணினி ஆற்றலுக்கான வாய்ப்புடன் நல்லதைச் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. புதிய நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் உலோகக் கலவைகளைக் கண்டுபிடிப்பது, புத்திசாலித்தனமான பொழுதுபோக்கு மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளோடு பல சாதாரண பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டாலும் குறிப்பாக தரவுகளை பொய்யாக மாற்றும் திறனுக்காகவே கவனத்தை ஈர்த்திருக்கிறது. யதார்த்தத்தை உண்மையாக பிரதிபலிக்கும் தரவுகளுக்கும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தவறான நம்பிக்கை கொண்டவர்களால் உண்மையைப் போல பார்க்க உருவாக்கப்பட்ட தரவுகளுக்கும் இடையில் உலகம் நம்பத்தகுந்த முறையில் வேறுபடுத்திப் பார்க்க முடிவதில்லை. செயற்கை நுண்ணறிவில் முன்னோடிகளாக இருக்கக் கூடிய ஒரு முக்கிய குழு ஒற்றை வரி எச்சரிக்கை செய்தி ஒன்றை விடுப்பதற்கு இதுவும் இன்னும் பல நிகழ்வுகளும்தான் காரணம்: “தொற்றுநோய்கள் மற்றும் அணு ஆயுதப் போர் போன்ற பிற சமூக அளவிலான அபாயங்களுடன் செயற்கை நுண்ணறிவின் காரணமாக அழிவு

ஏற்படுவதை தடுப்பதும் உலகளாவிய முன்னுரிமையாக இருக்க வேண்டும்.” இங்கிருக்கும் பல அச்சுறுத்தல்களில் செயற்கை நுண்ணறிவை நேர்மையற்ற முறையில் பயன்படுத்துபவர்களும் ஒரு அச்சுறுத்தல். ஆனால், இந்த எளிய அறிக்கை மானுட சமூகத்தின் சிக்கலான தன்மையை பிரதிபலிக்கும் விதத்தில் இல்லை. ஆனாலும், பிற அறிக்கைகளில் கூறப்பட்டுள்ள சில குறிப்பான கவலைகள் தீவிரமாக எடுத்துக் கொள்ளத்தக்கவை: செயற்கை நுண்ணறிவு மாதிரிகளின் உள் செயல்பாடுகளை புரிந்துகொள்ள முடியாத தன்மை, பதிப்புரிமை பெற்ற தரவைப் பயன்படுத்துதல், மனித மாண்பு மற்றும் தனியுரிமையை மதித்தல் மற்றும் தகவல்களை பொய்யாக்குவதிலிருந்து பாதுகாப்புகள் ஆகியவைதான் அவை. இப்போது உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படும் மாதிரிகள் இவற்றையெல்லாம் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. அவை ஏற்படுத்தக் கூடிய ஆபத்துகளை புரிந்து கொள்வதற்கு எந்த வழியும்கூட இல்லை. எனவே, செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை இயக்க தேவையான கணக்கீட்டு வளங்கள் நுகர்வோர் மின்னணுவியலில் கிடைக்கும் கணக்கீட்டு ஆதாரங்களுடன் முழுமையாக ஒத்துப்போகும் ஒரு கட்டத்தில்கூட, அபாயகரமான நிறுவனங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதன் பொருட்டு ஜனநாயக நிறுவனங்களுக்காக கதவுகளைத் திறந்து வைத்திருக்கும் குறைந்தபட்ச சுழல் கொள்கைகளாகவாவது உலகிற்கு தேவைப்படுகிறது. இந்த நேரத்தில், இந்திய அரசு, செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தக்கூடிய ஆபத்து பற்றிய விவரங்களுக்கான பொது மக்கள் பயன்படுத்தக் கூடிய தளத்தை விரைவில் தொடங்கி பராமரிக்க வேண்டும். தவிர அதிக ஆபத்துள்ள செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை சோதிக்க அவை குறிப்பிட்ட வளங்களை மட்டுமே பெறக்கூடிய, ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கான சூழல்களை உருவாக்க வேண்டும். புரிந்துக் கொள்ள கூடிய செயற்கை நுண்ணறிவை உருவாக்குவதற்கு ஊக்கமளிக்க வேண்டும். அது எந்த இடங்களில் இடையீடு செய்ய முடியுமோ அந்த இடங்களை பற்றிய வரையரையை செய்ய வேண்டும் மற்றும் விழிப்புடன் இருக்க வேண்டும். செயலற்ற தன்மை என்பது ஒரு தேர்வே அல்ல. பாதகமான விளைவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைத் தவிர, இது ‘செயற்கை நுண்ணறிவை நன்மைக்காகப் பயன்படுத்தும்’ வாய்ப்பை இந்தியா இழக்கச் செய்யும்.

This is a Premium article available exclusively to our subscribers. To read 250+ such premium articles every month
You have exhausted your free article limit.
Please support quality journalism.
You have exhausted your free article limit.
Please support quality journalism.
The Hindu operates by its editorial values to provide you quality journalism.
This is your last free article.

ADVERTISEMENT

ADVERTISEMENT