ADVERTISEMENT

முரண்பட்ட கூட்டம்

Published - October 07, 2023 11:26 am IST

மெக்கார்த்தி வெளியேற்றப்பட்டிருப்பது ரிபப்ளிகன் கட்சியில் ஆழமடைந்திருக்கும் மோசமான நிலையைக் காட்டுகிறது

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக இருந்த கெவின் மெக்கார்த்தி, நாடாளுமன்ற கீழவையில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டிருப்பது ரிபப்ளிகன் கட்சியை ஒரு முரண்பாடுகள் நிறைந்த கூட்டமாக காட்டியிருக்கிறது. ஃப்ளோரிடாவைச் சேர்ந்த காங்கிரஸ்காரரான மாட் கெய்ட்ஸ் மிக அரிதாகவே கொண்டுவரப்படும் “வெளியேற்றும் தீர்மானத்தைக்” கொண்டுவந்ததன் மூலம் திரு. மெக்கார்த்தியின் பதவிக்காலம் முடிவுக்கு வந்திருக்கிறது. அமெரிக்க வரலாற்றில் அந்தப் பதவியிலிருந்து வெளியேற்றப்படும் முதல் சபாநாயகர் இவர்தான். 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் சபாநாயகர் பதவிக்கான கடும் போட்டியின்போது ரிபப்ளிகன் கட்சிக்குள் உள்ள தனது எதிரிகளை தன் பக்கம் ஈர்ப்பதற்காக முன்வைத்த சலுகை அது. இதைத் தொடர்ந்து, அவர் சபாநாயகராகத் தொடர வேண்டுமா என்று நடந்த வாக்கெடுப்பில், கலிஃபோர்னியாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான திரு மெக்கார்த்திக்கு எதிராக 216 வாக்குகளும் ஆதரவாக 210 வாக்குகளும் கிடைத்தன. நாடாளுமன்றத்தில் திரு. மெக்கார்த்தியின் அரசியல் அபிலாஷைகளை மறுப்பதற்கான முயற்சியில் டெமாக்ரடிக் கட்சியினருடன் 8 ரிபப்ளிகன் உறுப்பினர்களும் சேர்ந்துகொண்டனர். முக்கியமான கொள்கை விவகாரங்களில் டெமாக்ரட்களுடன் ஒத்துழைத்துவந்த திரு. மெக்கார்த்தி சபாநாயகராக இருப்பதை ரிபப்ளிகன் ஃப்ரீடம் குழுவினர் கடுமையாக எதிர்த்தனர். கடன் உச்சவரம்பை உயர்த்துவதன் மூலம் அமெரிக்க அரசு முடங்குவதைத் தவிர்ப்பதற்காக மேற்கொண்ட ஒத்துழைப்பு முயற்சிகள் இதில் குறிப்பிடத்தக்கவை. இந்த இலக்கை எட்டுவதற்காக திரு. மெக்கார்த்தி 45 நாட்களுக்கான தற்காலிக நிதி மசோதாவிற்கு திரு. மெக்கார்த்தி ஒப்புதல் அளித்தார். இது அவையில் இருந்த ரிபப்ளிகன் உறுப்பினர்களுக்குப் பிடிக்கவில்லை.

ரிபப்ளிகன் கட்சக்குள் உள்ள பல பிரச்சனைகளை இந்த விவகாரம் சுட்டிக்காட்டுகிறது. — முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அரசியல் பார்வையுடன் நெருக்கமாக ஒத்துச்செல்வதாகக் கருதும் பிரிவு ஒன்று, அரசு சிறியதாக இருக்க வேண்டும் என்றும் பொதுச் செலவுகள் குறைய வேண்டும் என்றும் கருதுவதோடு, அமெரிக்காவின் வெளியுறவுத் துறை வாட்டாரத்திலும் செல்வாக்குச் செலுத்த விரும்புகிறது. உதாரணமாக, ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிரான யுக்ரைனின் யுத்த முயற்சிகளுக்கு அமெரிக்கா நிதியளிப்பதைக் குறைக்க வேண்டும் என்று கூறுகிறது. “ஜிஓபி அடிப்படைவாதிகள்” என்று சிலரால் குறிப்பிடப்படும் இந்தக் குழு, அரசின் மிக முக்கியமான நடவடிக்கைகளே முடங்கி, மிக மோசமான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டால்கூட, கீழிறங்கிவருவதை இந்தக் குழு எதிர்க்கிறது. யுக்ரைனுக்கு ஆதரவாக 6 பில்லியன் டாலர்களைத் தர வேண்டும் என்ற அதிபர் ஜோ பைடனின் கோரிக்கையை நிராகரித்ததன் மூலமும் அதிபரின் மகன் ஹன்சட் பைடன் செய்ததாகக் கூறப்படும் தவறுகள் குறித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டதன் மூலமும் திரு. மெக்கார்த்தி இந்தக் குழுவைச் சாந்தப்படுத்த முயற்சித்தார். ஆனால், அந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. ஆனால், 2024ஆம் ஆண்டு ஒரு தேர்தல் ஆண்டாக இருக்கும் நிலையில், இந்தக் குழுவின் எதிர் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தக் கட்சிக்கும் அரசியல் ரீதியாக மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். வாக்குகளை மாற்றி, மாற்றி செலுத்தக்கூடிய சுயாதீன வாக்காளர்களைப் பொறுத்தவரை, கட்சி அமைப்பை ஒழுங்காக வைத்துக்கொண்டு, ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்திக்க முடியாத கட்சியிலிருந்து விலகிச் செல்லக்கூடும்.

This is a Premium article available exclusively to our subscribers. To read 250+ such premium articles every month
You have exhausted your free article limit.
Please support quality journalism.
You have exhausted your free article limit.
Please support quality journalism.
The Hindu operates by its editorial values to provide you quality journalism.
This is your last free article.

ADVERTISEMENT

ADVERTISEMENT