ADVERTISEMENT

வருவாய் புதிர்கள்

Published - October 07, 2023 11:32 am IST

பரவலாக ஆரோக்கியமாக இருக்கும் ஜிஎஸ்டி வரவுகளுக்கு மத்தியில், சில போக்குகளை இன்னும் கூடுதலாக ஆராய வேண்டும்

நிதியாண்டின் பாதியில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மூலம் இந்தியாவின் மொத்த வருவாய் ரூ. 9.92 லட்சம் கோடிக்கு மேல் இருக்கிறது. இது 2022 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான வசூலைவிட 11.1 சதவீதம் அதிகரித்திருக்கிறது. 2023-24 ஆம் ஆண்டில் சராசரி மாதாந்திர வருவாய் ரூ. 1,65,418 கோடி என்ற அளவில் ஆரோக்கியமாக இருந்தது. இந்த நிதியாண்டில் ஜி.எஸ்.டி வருவாய் ஆறு முறைகளில் கிட்டத்தட்ட நான்கு முறை ரூ. 1.6 லட்சம் கோடியைத் தாண்டியிருக்கிறது. கிட்டத்தட்ட ரூ. 1.63 லட்சம் கோடி என்ற அளவில், செப்டம்பரின் ஜி.எஸ்.டி வசூல் சராசரியைவிட சற்று குறைவாக இருந்தாலும் ஆகஸ்ட் மாத வரவைவிட 2.3 சதவீதம் அதிகம். ஆகஸ்ட் மாத வருவாய், மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைவாக இருந்தது. விழாக்காலம் தொடங்கியிருக்கும் நிலையில், இந்த காலாண்டு முழுவதும் ரூ. 1.6 லட்சம் கோடிக்கு மேல் வசூல் நிலைத்திருக்கக்கூடும். நிதிச் சூழலில் ஜி.எஸ்.டி வருவாயைப் பொறுத்தவரையில், அரசு நல்ல இடத்தில் இருப்பது போலவே தெரிகிறது. முதல் காலாண்டில் 7.8 சதவீதமாக இருந்த உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5.7 சதவீதமாக குறையும் என்று மத்திய வங்கி எதிர்பார்க்கும் ஜனவரி-மார்ச் 2024 காலாண்டில் வரவுகளில் ஓரளவு மிதமான தன்மைக்கு இடமிருக்கிறது. இந்த புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டும் பெரிய அளவிலான மீள்தன்மைக்கு அப்பால், இன்று கூடும் ஜி.எஸ்.டி கவுன்சிலும் கொள்கை வகுப்பாளர்களும் இன்னும் கவனமாக பார்க்க வேண்டிய கவலைக்குரிய சில பகுதிகளும் இருக்கின்றன.

ஒன்று, ஜி.எஸ்.டி வரவுகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க மந்த நிலை இருக்கும் நிலையில், செப்டம்பர் மாதத்தில் அது 10.2 சதவீதமாகக் குறைந்தது. ஜூலை 2021க்குப் பிறகு மிக மெதுவான ஏற்றம் இது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான சராசரி வளர்ச்சி முதல் காலாண்டில் 11.5 சதவீதத்திலிருந்து இரண்டாவது காலாண்டில் 10.6 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. உள்நாட்டு பரிவர்த்தனைகள், சேவைகள் ஆகியவற்றின் இறக்குமதி வளர்ச்சி ஜூன் மாதத்தில் 18 சதவீதத்திலிருந்து கடந்த இரண்டு மாதங்களில் 14 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் அடிப்படையில் செப்டம்பரில் வரும் வருவாய், 2017-18ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை தொடங்கியதிலிருந்து வணிகர்களிடமிருந்து வரவேண்டிய நிலுவைத் தொகையையும் உள்ளடக்கியது என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும். காரணம், செப்டம்பர் 30ஆம் தேதிதான் அவற்றை அனுப்புவதற்கான காலக்கெடு. மேலும், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ரூ. 5 கோடிக்கு மேல் விற்றுமுதல் கொண்ட அனைத்து நிறுவனங்களுக்கும் மின்-இன்வாய்சிங் கட்டாயமாக்கப்பட்டது. இதன் காரணமாக, வேலையில் இன்னொரு விஷயத்திற்கு இணங்க வேண்டும் என்கிற நிலை உருவானது. உண்மையாகவே ஏற்பட்ட நுகர்வு, உற்பத்தி அதிகரிப்பு ஆகியவற்றால் உருவான வளர்ச்சியின் அளவை அளவிட இந்த விளைவுகளை வடிகட்டுவது அவசியம். உதாரணத்துக்கு, ஆகஸ்ட் மாதத்தில் உருவாக்கப்பட்ட 9.34 கோடி இ-வே பில்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வருவாயை ஈட்டவில்லை என்பது, பரிவர்த்தனை அளவுகள் சுருங்கிவிட்டதை குறிக்கலாம். இந்த ஆண்டு பொருட்களின் இறக்குமதி நான்கு மடங்கு சுருங்கிவிட்ட நிலையில், அதிலிருந்து கிடைக்கும் வருவாய் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஆண்டு குறைவான அளவில் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதால், இதற்கான ஜி.எஸ்.டியும் குறைவாகவே இருக்க வேண்டும். ஆனால், ஆகஸ்ட் மாதத்தில் கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு இறக்குமதி 58.6 பில்லியன் டாலரை எட்டியது. இது, ஜூலை மாத இறக்குமதி செலவைவிட 10.75 சதவீதம் அதிகமாகும். இருந்தாலும் செப்டம்பரில் வசூலிக்கப்பட்ட வருவாய் முந்தைய மாதத்தைவிட 5.7 சதவீதம் குறைவு. இந்தக் கணக்கு சரியாக இல்லை. இறக்குமதி மூலம் கிடைக்கும் வருவாயில் கசிவை தடுக்க அதிகாரிகள் இன்னும் தீவிரமாக விசாரிக்க வேண்டும்.

This is a Premium article available exclusively to our subscribers. To read 250+ such premium articles every month
You have exhausted your free article limit.
Please support quality journalism.
You have exhausted your free article limit.
Please support quality journalism.
The Hindu operates by its editorial values to provide you quality journalism.
This is your last free article.

ADVERTISEMENT

ADVERTISEMENT