ADVERTISEMENT

ஒளி பரவட்டும்

October 05, 2023 11:01 am | Updated 11:01 am IST

எலக்ட்ரான் பண்புகளில் ஏற்படும் மாற்றங்களை அளவிடும் நுட்பங்களை கொண்டாடுகிறது இயற்பியலுக்கான நோபல்.

குவாண்டம் இயக்கவியலின் விதிகளின்படி, ஒரு பழம் அல்லது பாறை போன்ற பருப்பொருளில் உள்ள எலக்ட்ரான்களின் கவனிக்கக்கூடிய பண்புகள் சில நூறு அட்டோ விநாடிகளில் மாறுகின்றன. ஒரு அட்டோ விநாடி என்பது ஒரு வினாடியில் 1000000000000000000ல் ஒரு பகுதி. இந்த மிக விரைவான மாற்றங்களை ஆய்வுசெய்ய, சிறப்பு கருவிகள் தேவை. இந்த கருவிகளை உருவாக்கியதற்காக ஆன் எல்’ஹுய்லியர், பியர் அகோஸ்டினி மற்றும் ஃபெரென்க் கிராஸ் ஆகியோர் 2023ம் ஆண்டின் இயற்பியல் நோபல் பரிசைப் பெற்றிருக்கிறார்கள். 1980களின் பிற்பகுதியிலிருந்து, டாக்டர் எல்’ஹுய்லியர் வழி நடத்திய பல ஆய்வுகளில் ஒன்றில், ஒரு அகச்சிவப்பு கற்றை ஒரு குறிப்பிட்ட அளவிலான மந்த வாயுவின் மீது பாய்ச்சினால் அது பல மேற்சுரங்களை (overtones) உருவாக்கியது தெரிய வந்தது: அதாவது, ‘அசலான’ ஒளி அலையின் முழு எண்-பகுதியான அலைநீளம் கொண்ட அலைகள் அவை. அவரது குழு, அசல் அலையின் அதிர்வெண் மற்றும் மேற்சுரங்களின் தீவிரம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு விசித்திரமான உறவைக் கண்டறிந்ததோடு, குவாண்டம் இயக்கவியலின் தற்போதைய விதிகளைப் பயன்படுத்தி அதை விளக்கியது. இது ஒரு மைல்கல் நிகழ்வு. மேற்சுர அலைகளின் சிகரங்கள் வரிசையாக இருந்தால், அவை ஒன்றிணைந்து மிகவும் தீவிரமான உச்சத்தை (ஆக்கபூர்வமான குறுக்கீடு) உருவாக்கும்; ஒரு அலையின் உச்சம் மற்றொரு அலையின் தொட்டியுடன் ஒத்துப் போகும்போது, அவை தங்களை ரத்து செய்துகொள்ளும் (அழிவுகரமான குறுக்கீடு). இந்த வலுவூட்டும் விளைவை ஒரு சில அட்டோ விநாடிகள் துடிப்பு காலத்துடன் வாயு கடுமையான உச்சங்களை உமிழும் வகையில் நேரப்படுத்த முடியும் என்பதை இயற்பியலாளர்கள் உணர்ந்தார்கள். அழிவுகரமான குறுக்கீடு இந்த வரம்பை எட்டுகிறது. 2001ல் 250 அட்டோ விநாடிகள் துடிப்பு கால அளவு கொண்ட ஒளியை உருவாக்கியதன் மூலம் இதை டாக்டர் அகோஸ்டினி மற்றும் குழுவினர் நிரூபித்தார்கள். அதே ஆண்டில், டாக்டர் க்ராஸ் மற்றும் குழுவினர் 650 அட்டோ விநாடிகள் கால அளவில் ஒரே துடிப்பை பிரித்தெடுத்தார்கள். பின்னர் கிரிப்டான் அணுக்களிலிருந்து வெளியேற்றப்பட்ட எலக்ட்ரான்களின் இயக்க ஆற்றலை ஃபோட்டான்களின் கொத்து மூலம் அளவிட இதைப் பயன்படுத்தினார்கள். அட்டோ விநாடி இயற்பியல் இறுதியில் வெற்றி பெற்றுவிட்டது.

எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளின் கண்டுபிடிப்பு மற்றும் கோவிட் -19 தொற்றுநோயில் அவற்றின் விளைவை இந்த ஆண்டு மருத்துவ நோபல் பரிசு கொண்டாடியது. இதைப் பொறுத்தவரையில் மக்களுக்கான பயன்பாடு நேரடியானது. ஆனால் அட்டோ விநாடி இயற்பியல் அப்படியில்லை. ஆனால் ஆதாரங்கள் இல்லாமல் போனதாலேயே அது இல்லை என்பதற்கான ஆதாரமாகக் கொள்ள முடியாது. உயிர் வேதியியல், நோயறிதல், அதிகடத்தல் மற்றும் உற்பத்தி நுட்பங்கள் உள்ளிட்ட

உடனடி மதிப்பு கொண்ட அமைப்புகளில் எலக்ட்ரான்களின் குறிப்பிட்ட இயக்கவியல் முக்கியமானது. நோபல் பெற்றவர்களின் பணி காரணமாக, அட்டோ விநாடிகளில் வாழும் மற்றும் இறக்கும் நிகழ்வுகளின் கண்டுபிடிப்புகளில் இதுவரை அறியப்படாத சாத்தியங்களை ஒளிரச் செய்யும் வழி அறிவியலாளர்களிடத்தில் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட கண்டுபிடிப்பு பிற்காலத்தில் மதிப்புடையதா என்பதை தீர்மானிக்க தேவையான அனைத்து தகவல்களும் மனிதர்களிடம் அரிதாகவே இருந்திருக்கின்றன. 2016 வேதியியல் பரிசு பெற்றவர்கள் தனிப்பட்ட மூலக்கூறுகளைக் கொண்ட மோட்டார்களை உருவாக்கியதற்காக புகழடைந்தார்கள். அது, அந்த நேரத்தில் அறியப்பட்ட பயன்பாடுகள் இல்லாத ஒரு சாதனை என்றாலும் அதை அடைவதற்காக அவர்கள் வேதியியலின் பிற பகுதிகளை மேம்படுத்தும் நுட்பங்களை உருவாக்கினார்கள். பரிசு பெற்றவர்களில் ஒருவரான ஜே. ஃப்ரேசர் ஸ்டோடார்டின் வார்த்தைகளைச் சுருக்கமாக சொல்வதென்றால், “முன்பு செய்ய கடினமாக இருந்த ஒன்றை இன்று எளிதாகச் செய்வதில் முக்கியமான மதிப்பு இருக்கிறது. தவிர [அதன் பயன்பாடுகள்] என்னவாக இருக்கும் என்பதைக் கண்டுபிடிப்பதில் ஒரு உற்சாகமும் இருக்கிறது.”

This is a Premium article available exclusively to our subscribers. To read 250+ such premium articles every month
You have exhausted your free article limit.
Please support quality journalism.
You have exhausted your free article limit.
Please support quality journalism.
The Hindu operates by its editorial values to provide you quality journalism.
This is your last free article.

ADVERTISEMENT

ADVERTISEMENT