ADVERTISEMENT

கடன் விவாதம்

December 26, 2023 10:58 am | Updated 10:59 am IST

சர்வதேச நாணய நிதியத்தின் இந்தியாவுக்கான கடன் அபாய மதிப்பீடு ஒரு கூர்மையான எதிர்வினையைத் தூண்டியிருக்கிறது

கடந்த வெள்ளிக்கிழமை, ‘இந்தியாவுடனான சர்வதேச நாணய நிதியத்தின் பிரிவு 4 ஆலோசனைகள் தொடர்பான அசல் நிலைப்பாடு’ என்ற தலைப்பில் நிதியமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்), அதன் ஒப்பந்த விதிகளின் கீழ், வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் உறுப்பினர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துகிறது. நிதியத்தின் நிர்வாகக் குழுவால் விவாதிக்கப்படும் ஒரு அறிக்கையைத் தயாரிப்பதற்கு முன்பு, சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் பொருளாதார மற்றும் நிதி தொடர்பான தகவல்களைச் சேகரித்து, உயர் அதிகாரிகளுடன் கொள்கைகளைப் பற்றி விவாதிக்கிறார்கள். சர்வதேச நாணய நிதியம் அதன் சமீபத்திய இந்திய ஆலோசனை விவரங்களை வெளியிட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு, நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கை “உண்மை நிலையை பிரதிபலிக்காத சாத்தியமான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு சில அனுமானங்கள் செய்யப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டிருக்கிறது. குறிப்பாக, பாதகமான அதிர்ச்சிகள் இந்தியாவின் பொது அரசுக் கடனை நடுத்தர காலத்தில் (2027-28க்குள்) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100 சதவீதம் அல்லது அதற்கு அப்பால் உயர்த்தக்கூடும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் கருத்தைப் பற்றி அமைச்சகம் பேசியிருக்கிறது. இது மிகவும் மோசமான ஓரு சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கான ஒரு மதிப்பீடு மட்டும்தான் என்றும் மாற்ற முடியாததில்லை என்றும் அமைச்சகம் சொன்னது. தவிர, முறையே அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சீனாவைப் போன்ற பிற நாடுகள் குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைகளைப் பொறுத்தவரையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 160 சதவீதம், 140 சதவீதம் மற்றும் 200 சதவீதம் என்ற மிக உயர்ந்த தீவிர ‘மோசமான’ சூழ்நிலைக்கான மதிப்பீடுகளை காட்டுகின்றன” என்றும் அமைச்சரவை வலியுறுத்தியது. 2020-21ஆம் ஆண்டில் 88 சதவீதமாக இருந்த மத்திய மற்றும் மாநில அரசுகளின் மொத்த கடன் 2022-23ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 81 சதவீதமாக இருந்தது. சாதகமான சூழ்நிலை இருந்தால், இது 2027-28ஆம் ஆண்டில் 70 சதவீதமாகக்கூட குறையக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியம் கணக்கிடுகிறது. இந்த நூற்றாண்டில் இதுவரை இந்தியா எதிர்கொண்ட அதிர்ச்சிகள் உலகளாவியவை என்றும் 2008ன் நிதி நெருக்கடி அல்லது தொற்றுநோய் என எதுவாக இருந்தாலும் முழு உலகப் பொருளாதாரத்தையும் அவை பாதித்தன என்றும் அமைச்சகம் சுட்டிக்காட்டியது. ஆரம்பச் செய்திகளுக்கு எதிர்வினையாற்றிய அமைச்சகம், அதன் அறிக்கை சர்வதேச நாணய நிதியத்திற்கு ஒரு மறுப்பு அல்ல என்றும் மாறாக பொது அரசாங்கக் கடன் நடுத்தர காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100 சதவீதத்தைத் தாண்டும் என்பதைக் குறிக்கும் நாணயத்தின் கருத்துகளை தவறாகப் புரிந்துகொள்வதை அல்லது தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் முயற்சி” என்றும் தெளிவுபடுத்தியது. இந்த அறிக்கை முரண்பாடானதா அல்லது தெளிவுபடுத்தப்பட்டதா என்று சொற்பொருள்

வல்லுநர்கள் வாதிடலாம். சர்வதேச நாணய நிதிய வாரியத்தின் இந்திய இயக்குநர் ஏற்கனவே கடன் அபாயங்கள் [”தீவிரமானதாகத் தெரிகிறது”] மற்றும் பொருளாதாரத்தின் வேறு சில அம்சங்கள் குறித்த அதன் ஊழியர்களின் முடிவுகளைப் பற்றிய ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தார். பரந்துபட்ட நோக்கில் பார்த்தால், இந்தியாவின் நிதி நிலைமை குறித்த சர்வதேச நாணய நிதிய ஊழியர்களின் கருத்துக்கள் உண்மையில் கடந்த ஆண்டில் மேம்பட்டிருக்கின்றன. 2022ஆம் ஆண்டில் இந்தியாவின் நிதி இடம் ஆபத்தில் உள்ளது என்று வாதிட்டதிலிருந்து, அவர்கள் இப்போது நாட்டின் கடன் அழுத்த அபாயங்கள் மிதமாக இருப்பதாக என்று நம்புகிறார்கள். இதற்கு மத்திய அரசின் திறன் ஒரு முக்கியமான காரணம். கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 57 சதவீதத்திற்கு கடன் அளவுகளைக் கொண்டிருந்த மத்திய அரசு, சமீபத்திய காலங்களில் நிதிப் பற்றாக்குறை இலக்குகளை எட்டும் நிலையில் இருக்கிறது. இந்த ஆண்டு மதிப்பிடப்பட்ட 5.9 சதவீதத்திலிருந்து 2025-26க்குள் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதமாக கொண்டு வருவதற்கான அதன் உறுதிப்பாட்டில் உறுதியாக இருப்பதற்கு கடன் மற்றும் செலவினங்களைக் குறைப்பது முக்கியமானது. ஒரு அறிக்கையில் உள்ள ஒரு பாதகமான விவரத்திற்கு எதிர்வினையாற்றுவது சில நேரங்களில் அதன் மீது இன்னும் அதிக கவனத்தை ஈர்க்கும். அதைவிட முக்கியமாக, செயல்கள் எப்போதும் வார்த்தைகளைவிட உரக்க ஒரு செய்தியை சொல்கின்றன.

This is a Premium article available exclusively to our subscribers. To read 250+ such premium articles every month
You have exhausted your free article limit.
Please support quality journalism.
You have exhausted your free article limit.
Please support quality journalism.
The Hindu operates by its editorial values to provide you quality journalism.
This is your last free article.

ADVERTISEMENT

ADVERTISEMENT