1980ல் அப்போதிருந்த சர்வாதிகாரி தளபதி அகஸ்தோ பினோசெட் தலைமையிலான மோசமான ராணுவ ஆட்சியில் எழுதப்பட்ட 1980 ஆண்டின் சாசனத்துக்கு மாற்றாக முன் வைக்கப்பட்ட புதிய அரசியல் சாசனத்தை சிலி நாட்டு வாக்காளர்கள் நிராகரித்து எடுத்த முடிவு அந்நாட்டின் அரசியல் ரீதியான பிரிவினைகளை மேலும் தீவிரப்படுத்தி எதிர்காலத்தை ஒரு நிச்சயமற்ற நிலைக்கு எடுத்துச் செல்லக் கூடும். சிலியின் 36 வயது இடதுசாரி அதிபர் கேப்ரியல் போரிக்கின் ஆதரவைப் பெற்ற இந்த அரசியல் சாசனம், தென் அமெரிக்காவிலேயே தடையில்லா வர்த்தகத்துக்கு மிக அதிக அளவில் ஒரு நாட்டை அரசால் நிர்வகிக்கப்படும், நலத்திட்டங்கள் கொண்ட மக்கள் நல சமூகமாக மாற்றியிருக்கும். ஆனால் இந்த சாசனம் எல்லையை மீறியிருக்கிறது என்கிற முடிவுக்கு வாக்காளர்கள் வந்துவிட்டார்கள் போலிருக்கிறது. கிட்டத்தட்ட அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், 62 சதவிகிதம் பேர் ‘வேண்டாம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அரசியல் சாசனத்தை இயற்றும் முயற்சியே, பல மாதங்கள் நீடித்த சமூக மற்றும் அரசியல் ரீதியான போராட்டங்களின் விளைவுதான். 2019இல் சப்வே ரயில் கட்டணங்களில் ஏற்பட்ட ஒரு மிதமான உயர்வு காரணமாக சிலியில் தெருப் போராட்டங்கள் நடந்தன. இதைத் தொடர்ந்து அதிபர் செபஸ்டியன் பினேரா அரசியல் சாசனத்தை மாற்றி எழுத வாக்குறுதி அளித்தார். மாற்றங்களுக்குப் பிறகும், பினோசெட் காலத்து அரசியல் சாசனம் வணிகத்துக்கு, சந்தைக்கு ஆதரவான ஒரு சாசனமாக இருந்தது. பொருளாதாரத்தில் அரசு தலையிடுவதை அது கட்டுப்படுத்தியது. சந்தை சீர்த்திருத்தங்களுக்கு பிறகு சிலியில் வேகமான வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், அந்த பகுதியில் மிக அதிகமான சமத்துவமில்லாத ஒரு நாடாகவும் அது இருந்ததன் காரணமாக ஒரு அமைதியின்மை நிலவியது. இந்த குழப்பங்களிலிருந்து உதித்தவர்தான் திரு. போரிக். 2021இல் தேர்தல் பரப்புரையின் போது ஒரு புதிய தொடக்கத்தை அவர் உறுதியளித்தார். சிலியின் எதிர்காலத்தை மாற்றி எழுத அவரிடமிருந்த ஒரு சிறப்பான வாய்ப்பாக இந்த வாக்கெடுப்பு இருந்தது. ஆனால் திரு. போரிக்கும் அவரது தோழர்களும் தருணத்தை தவற விட்டுவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.
170 பக்கங்கள் மற்றும் 388 பிரிவுகளை கொண்ட அரசியல் சாசனம், கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்குவது, அனைவருக்குமான மருத்துவ வசதிகள் வழங்குவது, அரசில் பாலின சமத்துவத்தை கட்டாயமாக்குவது, தொழிற்சங்கங்களை வலுப்படுத்துவது, சுரங்கங்களை தோண்டுவதற்கான விதிமுறைகளை இன்னும் கடினமாக்குவது போன்ற பல விஷயங்களை செய்வதாக உறுதியளித்தது. மக்கள் தொகையில் 13 சதவிகிதம் இருக்கும் 11 தொல்குடி மக்கள் குழுக்களை அங்கீகரிக்கும் ஒரு நாடாக, பல தேசிய இனக் குழுக்களை (plurinational) கொண்ட ஒரு நாடாக சிலியை அறிவிக்கவும் அது உறுதியளித்தது. அதாவது 11 தொல்குடி மக்கள் குழுக்களும் அவர்களுக்கென்று நிர்வாக கட்டமைப்புகளும் சட்ட முறைகளும் வைத்துக் கொள்ளலாம். அரசியல் சாசனத்தை நிராகரித்த பிரிவினருக்கான எதிர்ப்பு புள்ளியாக இந்த முன்னெடுப்பே இருந்தது. (பெரிய திட்டங்களை எதிர்த்து நிறுத்தும் அதிகாரம் உள்பட) தொல்குடி மக்களுக்கான அதிகமான உரிமைகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் மீது புதிய சாசனம் வைத்திருக்கும் கட்டுப்பாடுகள் ஒரு அரசில்லாத அராஜக நிலைக்கு இட்டுச் செல்லும் என்று அவர்கள் வாதித்தார்கள். மாபுச்சே
குழுவின் தீவிரமான போராட்டங்களும் அதிகரிக்கும் விலைவாசியும் இந்த முன்னெடுப்புகளை வாக்காளர்களிடம் கொண்டு செல்வதை திரு. போரிக்கிற்கு கடினமான ஒன்றாக்கியது. இப்போது சிலி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிட்டது. சிலியின் அரசியல் வர்க்கம் ஒரு முடிவை எட்டும் வரை பழைய அரசியல் சாசனமே அமலில் இருக்கும். திரு. போரிக் அரசியல் சாசனத்துக்கான வழிமுறையை மீண்டும் செயல்படுத்துவதாக சொல்லியிருக்கிறார். அதாவது புதிய அரசியல் சாசன சபைக்கான தேர்தல், புதிய அரசியல் சாசன வரைவு மற்றும் அதை மீண்டும் வாக்கெடுப்புக்கு முன் வைப்பது என்கிற வழிமுறை அது. நிச்சயம் அதிக காலமெடுக்கும். சர்வாதிகாரம் வீழ்ந்த பிறகு சிலியை ஆண்ட பழமைவாதிகளும் மையவாதிகளும் எதிர்வரும் தேர்தலில் அவர்களுடைய நலன்களை அதிகரிக்க முயற்சிப்பார்கள். ஆனால் அரசியல் போராட்டங்கள் அரசியல் சிக்கலை இன்னும் மோசமானதாகதான் மாற்றும். அரசியல் சாசனத்தை திரும்ப பெற்று பதிலுக்கு புதிய சாசனம் கொண்டு வர வேண்டும் என்று சிலி மக்கள் கோரியிருப்பது போல, அவர்கள் ஏற்றுக் கொள்ள கூடிய ஒரு சாசனத்தை அரசியல்வாதிகள் வழங்க வேண்டும். அதற்கு, நாட்டின் எதிர்காலம் பற்றிய ஒத்த கருத்தை உருவாக்கும் முயற்சியை அவர்கள் தொடங்க வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE