அவை முக்கியத்துவம்

நிர்வாகம் பற்றிய பிரச்னைகளில் அரசு விவாதத்தை தவிர்க்கக் கூடாது

Published - March 18, 2023 10:52 am IST

நாடாளுமன்றத்தின் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் இரண்டாவது கட்டம் ஒரு நிச்சயத்தன்மையற்ற நிலையில் நிற்கிறது. இந்தியாவில் ஜனநாயகம் பின்னடைவு அடைந்திருப்பதை குறித்து சமீபத்தில் லண்டனில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று ஆளும் பாரதிய ஜனதா கட்சி சொல்கிறது. காங்கிரஸோ, அதானி குழும நிறுவனங்களுக்கு எதிரான சந்தேகத்திற்குரிய நிதி பரிவர்த்தனைகள் மற்றும் நேர்மையற்ற வணிக நடைமுறைகள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இந்திய ஜனநாயகத்திற்கு முன் இருக்கும் சவால்கள் உள்நாட்டிலேயே தீர்க்கப்பட வேண்டும் என்று திரு. காந்தி திட்டவட்டமாகக் கூறியதாகவும், வெளிநாட்டு சக்திகளுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் அவர் சொன்னதாகவும்தான் கிடைக்கக் கூடிய ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளில் வாழும் இந்திய மக்களின் எண்ணிக்கை விரிவடைந்து வரும் நிலையில் இந்திய அரசியல், நாட்டின் புவியியல் எல்லைகளுக்கு அப்பால் விளைவுகள் ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதவை. சொல்லப் போனால், இந்தியாவின் நில வரையறையோடு நின்று விடாத பண்பாட்டு தேசியவாதத்தில்தான் பா.ஜ.க நீண்டகாலமாக நம்பிக்கை கொண்டிருக்கிறது. உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் முன் தேசிய அரசியலைப் பேசியிருக்கிறார் திரு.மோதி. விமர்சனங்களை அனுமதிக்காத ஜனநாயகம் என்பது, அது ஜனநாயகத்தை பற்றியதாகவே இருந்தாலும் கூட, அடிப்படையில் ஒரு முரண். நாடாளுமன்றத்தில் பேசவோ தனது கருத்துக்கு விளக்கம் அளிக்கவோ திரு.காந்தியால் முடியவில்லை. இதற்கிடையில் பா.ஜ.க உறுப்பினர் ஒருவர் திரு.காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை தொடங்கியிருக்கிறார். இது தவறான ஒரு நடவடிக்கை. செயல்படுத்தப்பட்டால், இந்தியாவில் ஜனநாயக பற்றாக்குறை குறித்த அச்சங்களை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

திரு. காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் எழுப்பும் கூக்குரல்களுக்கு மத்தியில், அதானி குழுமத்திற்கு அரசு அளித்துவரும் ஆதரவு பற்றிய கேள்விகளை பா.ஜ.க அமைச்சர்கள் தவிர்த்து வருகிறார்கள். பொதுத்துறை ஆயுள் காப்பீட்டுக் கழகம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கிக்கும் அதானி குழுமத்திற்கும் உள்ள தொடர்புகள் குறித்து காங்கிரஸ் அரசிடம் பதில்களைக் கோரி வருகிறது. அரசு மற்றும் பொது மற்றும் தனியார் துறைகளை பாதிக்கும் இந்த தீவிரமான நிர்வாகப் பிரச்சினையில் பா.ஜ,கவும் அரசும் மௌனம் சாதித்து வருகின்றன. முடிவெடுப்பதில் தன்னிச்சையான தன்மையும், அதைத் தொடர்ந்து பொறுப்புணர்வின்மையும், கூட்டுச் சதி இல்லையென்று வைத்துக் கொண்டால் கூட, நிர்வாகத் தோல்விக்கு சமம். அதானி சர்ச்சையால் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அரசு, மாநிலங்களவைத் தலைவர் மற்றும் மக்களவைத் தலைவர் ஆகியோர் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். அரசின் நம்பகத்தன்மை, ஒழுங்குமுறை சூழல் மற்றும் தனியார் துறையின் பராமரிப்பு ஆகியவற்றுக்கு இதில் வெளிப்படையாக இருப்பது அவசியம். நிதி மோசடி வழக்குகளில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டதற்கான முன்னுதாரணங்கள் இருக்கின்றன. நாடாளுமன்ற விதிமுறைகளை மதிக்காமல் இருப்பதற்கான எண்ணிக்கை வலிமை பா.ஜ.கவிடத்தில் இருக்கவே செய்கிறது. ஆனால் அதை செய்ய வேண்டுமென்கிற ஆவலிலிருந்து ஆட்சியில் அசலான அக்கறை கொண்ட கட்சியாக அது பரிணமிக்க வேண்டும். பொறுப்புக்கூறலை நிர்ணயிப்பதில் நாடாளுமன்றத்துக்கு பங்கு இருக்கிறது. பா.ஜ.க அதை தவிர்த்து, நிர்வாகம் தண்டனையிலிருந்து தப்புவதில் ஒரு புதிய உச்சத்தை அடைய கூடாது.

This editorial has been translated from English, which can be read here.

0 / 0
Sign in to unlock member-only benefits!
  • Access 10 free stories every month
  • Save stories to read later
  • Access to comment on every story
  • Sign-up/manage your newsletter subscriptions with a single click
  • Get notified by email for early access to discounts & offers on our products
Sign in

Comments

Comments have to be in English, and in full sentences. They cannot be abusive or personal. Please abide by our community guidelines for posting your comments.

We have migrated to a new commenting platform. If you are already a registered user of The Hindu and logged in, you may continue to engage with our articles. If you do not have an account please register and login to post comments. Users can access their older comments by logging into their accounts on Vuukle.