இந்த வாரம் அமெரிக்காவின் பாயிண்ட் லோமாவில் உள்ள கடற்படை தளத்தில் அமெரிக்கா, ஐக்கிய இராஜ்ஜியம், ஆஸ்திரேலியாவின் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூட்டாகத் தோன்றியதும், அவர்களின் “AUKUS” என்ற முத்தரப்பு பாதுகாப்பு உடன்படிக்கை பற்றிய அவர்களின் விவரிப்பும் தோற்றத்தில் மட்டுமல்ல, அதன் பொருளிலும் முக்கியத்துவம் வாய்ந்தவை. உலகளாவிய வல்லரசு போட்டியில் ஒரு புதிய அத்தியாயத்தை இது உணர்த்துகிறது. செப்டம்பர் 2021ல் முதன்முதலில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அறிவிக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் மூன்று கட்டங்கள் இருக்கும். இந்த ஆண்டு முதல், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து கடற்படைகள் ஆஸ்திரேலிய வீரர்களை தங்களோடு இணைத்துக்கொள்வதோடு, ஒன்றாக பயிற்சி பெற ஆஸ்திரேலியத் துறைமுகங்களுக்கு அடிக்கடி செல்லும். இரண்டாம் கட்டமாக, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆஸ்திரேலியாவுக்கு சுழற்சி முறையில் பயணிக்கும். மேலும், ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தியால் இயங்கக்கூடிய ஐந்து வர்ஜீனியா வகை நீர்மூழ்கிக் கப்பல்களை அமெரிக்கா விற்பனை செய்யும்.இதையடுத்து, எஸ்.எஸ்.என். - ஏ.யு.கே.யு.எஸ். எனப்படும் புதிய நீர்மூழ்கி கப்பல் கட்டப்பட்டு, மூன்று கடற்படைகளும் பயன்படுத்தும் வகையில், செயல்பாட்டு ரீதியாக ஒன்றோடு ஒன்று இணைந்ததாக இருக்கும். பிரிட்டிஷ் வடிவமைப்பு மற்றும் அமெரிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்த ஒப்பந்தம், ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய ஒன்று. இதற்கு 368 பில்லியன் டாலர் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய கூட்டணியின் இலக்கு யார் என்பதை ஊகிப்பது கடினம் அல்ல. இங்கிலாந்து பிரதமர் ரிஷி சூனக் தனது உரையில், “யுக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத படையெடுப்பு, சீனாவின் வளர்ந்து வரும் உறுதிப்பாடு [மற்றும்] ஈரான் மற்றும் வட கொரியாவின் ஸ்திரமற்ற நடத்தை” ஆகியவற்றிலிருந்து உலகிற்கு மிக சமீபத்திய சவால்கள் வந்துள்ளன என்று கூறினார். ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்டு இயங்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள்
உள்ளிட்டகடற்படைகள் விரைவாகவே தென் சீனக் கடலை அடைய முடியும் என்ற எண்ணத்துடன், தைவான் மீது சீனா தனது உரிமைகளை திணிப்பதற்கு ஒரு எதிர்ப்பாக இந்த புதிய கூட்டணி பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்தபடி, சீனாவின் எதிர்ப்பு மிகத் தீவிரமாக இருக்கிறது. ஒரு “தவறான மற்றும் ஆபத்தான பாதை” என்று அது சொல்கிறது. அதே நேரத்தில் ரஷ்யா அணு ஆயுத பரவல் குறித்து கேள்விகளை எழுப்பியிருக்கிறது. காரணம், ஆஸ்திரேலியா அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்தும் நாடுகளின் குழுவில் சேரும். நீர்மூழ்கிக் கப்பல்கள் அணு சக்தியில் இயங்கும், ஆனால் அணு ஆயுதமாக இருக்காது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியிருக்கும் நிலையில், மாஸ்கோவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையிலான சந்திப்பில், ரஷ்யாவும் சீனாவும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்த விதிகளை மீறுவது குறித்து கவலைகளை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தமது அசௌகரியத்தை வெளிப்படுத்தியிருக்கின்றன. இந்தியா இன்னும் எதிர்வினையாற்றவில்லை. ஓரளவுக்கு ஏ.யு.கே.யு.எஸ். நாடுகள் இந்தியாவுடன் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்கின்றன என்பதுதான் இதற்குக் காரணம். குவாட்டில் அதிக வியூக ரீதியாக மற்றும் பாதுகாப்பு அம்சங்களை ஆராய எப்போதும் தயக்கம் கொண்டிருப்பது போல தோன்றும் இந்தியாவைப் பொறுத்தவரையில், இந்தோ-பசிபிக் இராணுவக் கணக்கீட்டில் ஏ.யு.கே.யு.எஸ் ஒரு ஆசுவாசத்தை தருகிறது. உலகளாவிய தெற்கின் குரல் என்ற வகையில் இந்தியா, இந்த அறிவிப்பு அமெரிக்கா தலைமையிலான கூட்டணிகளுக்கும் ரஷ்யா-சீனா கூட்டணிக்கும் இடையில் ஏற்கனவே உள்ள கூர்மையான பிளவுகளை மேலும் அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்ய தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். உலகளாவிய மோதலை விரைவுபடுத்துவதற்கு பதிலாக ஒரு தடுப்பு என்பதை நிரூபிக்க வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE