Main Text: பாரதிய ஜனதா கட்சியின் மாணிக் சாஹாவின் தலைமையிலான புதிய அமைச்சரவை புதன்கழமையன்று திரிபுராவில் பதவியேற்றுக் கொண்டது. மருத்துவராக இருந்து அரசியல்வாதியாக மாறிய 70 வயதான திரு. சாஹா, மே 2022ல் பிப்லப் தேப்புக்கு பதில் முதல்வராக பதவியேற்றார். தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க மேற்கொண்ட மாற்றங்களின் ஒரு பகுதியாக அது இருந்தது. இதற்கு பலன் இருந்தது. சற்று குறைந்த இடங்களைப் பெற்றிருந்தாலும் கட்சி வெற்றிபெற்றது. மத்திய அமைச்சர் பிரதிமா பவுமிக் போட்டியில் இருக்கிறார் என்கிற ஊகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இரண்டாவது முறையாக பதவியில் தொடர்கிறார் மருத்துவர் சாஹா. திருமிகு. பவுமிக் அவர் வென்ற சட்டமன்ற தொகுதியிலிருந்து விலகி, மத்தியில் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பழைய அமைச்சரவையிலிருந்து நான்கு அமைச்சர்களை தக்கவைத்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க, கட்சியின் பட்டியல் பழங்குடி மோர்ச்சாவின் தலைவர் பிகாஷ் டெபர்மா உள்ளிட்ட மூன்று புதிய முகங்களையும் இணைத்திருக்கிறது. பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சியான திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி கணிசமான அளவில் தோற்றிருந்தாலும் ஒரு இடத்தில் வென்றிருந்தது. அதில் சுக்லா சரண் நோட்டியாவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்தது. 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில், மேலவையில் 12 உறுப்பினர்கள் இருக்கலாம் என்கிற நிலையில் இப்போது மூன்று இடங்கள் காலியாக உள்ளன. மாநிலத்தின் பழங்குடி பகுதிகளில் இருந்து 13 இடங்களைப் பெற்று, அமோக வெற்றிபெற்ற ஒரளவு புதிய கட்சியான திப்ரா மோத்தாவுடன் பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. பா.ஜ.வும், திப்ரா மோத்தாவும் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பது போலதான் தோன்றுகிறது. ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தைச் சேர்ந்த பல அமைப்புகள் பல பத்தாண்டுகளாக சத்தமில்லாமல் செய்து வந்த பணியின் விளைவாகதான் பா.ஜ.க திரிபுராவில் வெற்றி பெற்றிருக்கிறது. 2018ல் இடது முன்னணியின் தோல்விக்கும் இதுதான் வழி வகுத்தது.
கட்சியின் உயர்மட்ட தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் வருகையை வைத்துப் பார்க்கும்போது, மாநிலத்துக்கு கட்சி தரும் முக்கியத்துவம் தெளிவு. புதன்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோதி கூட அகர்தாலாவுக்கு வருகை புரிந்தார். கட்சியின் தொடர்ச்சியான இரண்டாவது தேர்தல் வெற்றி, இந்த எல்லைப்புற மாநிலத்தில் அதன் வலிமையை அதிகப்படுத்தியிருந்தாலும் புதிய சவால்களும் எழுந்திருக்கின்றன. தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வன்முறைகளை உடனடியாக அமைதிப்படுத்தும் பணி புதிய அரசுக்கு காத்திருக்கிறது. பா.ஜ.கவுக்கு பயன் தந்த பழங்குடி மக்கள் மற்றும் பழங்குடியினர் அல்லாத மக்கள் இடையிலான பிளவும் கூர்மையடைந்திருக்கிறது. இப்போது திரிபுரா பழங்குடி பகுதிகள் தன்னாட்சி மாவட்ட கவுன்சில் பகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு தனி கிரேட்டர் திப்ராலாந்துக்கான திப்ரா மோத்தாவின் பிரச்சாரம் ஒரு புதிய கருத்து வேறுபாட்டை உருவாக்கியிருக்கிறது. திரிபுராவில் பழங்குடி சமூகங்கள் ஓரங்கட்டப்படுவதற்கு மக்கள் தொகை மாற்றங்கள் வழிவகுக்கின்றன என்ற அச்சத்திலிருந்தே இந்த கோரிக்கை எழுந்திருக்கிறது. கடந்த அரசின் பதவிக் காலத்தில், உள்நாட்டில் இடம்பெயர்ந்த புரு சமூகத்தினருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. இதனால் தீவிரமடைந்து வந்த ஒரு மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மரு.சாஹாவுக்கு உடனடியாக பணிகள் காத்திருக்கின்றன. கூடவே, அவரது அதிகாரத்துக்கு வரக்கூடிய சவால்களையும் அவர் கவனிக்க வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE