தண்டனைக் குறைப்பு பற்றிய ஒரு மறுபரிசீலனை 

தண்டனைக் குறைப்பின் அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கு உச்ச நீதிமன்றம் சில நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.

Updated - December 30, 2022 04:55 am IST

Published - August 24, 2022 12:24 pm IST

குஜராத்தில் 2002ல் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்த கலவரங்களில் ஒரு பெண்ணை கூட்டு பாலியல் வல்லுறவு செய்ததற்காகவும் ஏழு பேரைக் கொலை செய்த குற்றங்களுக்காகவும் ஆயுள் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்த 11 குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பொது நலனில் அக்கறையுள்ள சமூக செயற்பாட்டாளர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகியிருப்பது நல்ல விஷயம். பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு இதுவரை நீதிமன்றங்களை நாடவில்லை. ஆனால் குற்றவாளிகளுக்கு தண்டனைக் குறைப்பு வழங்கிய குஜராத் அரசின் சர்ச்சைக்குரிய இந்த உத்தரவு நீதிமன்ற மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு குழந்தை உள்ளிட்ட பல பேரின் கொலைகளுக்கும் கூட்டு பாலியல் வல்லுறவுக்கும் காரணமானவர்கள் முன்கூட்டிய விடுதலைக்கு பொருத்தமான நபர்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது ஏற்புடையதில்லை. அப்படி இல்லையென்றாலும், அரசின் முடிவை குறிப்பிட்ட சட்ட அடிப்படைகளின் கீழ் கேள்விக்குட்படுத்த முடியும்.  கைதிகளில் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் இருவர் அமர்வு தந்த  வழிகாட்டுதலின் படியே இந்த தண்டனைக் குறைப்பு நடந்திருந்திருக்கிறது. தண்டனைக் குறைப்புக்கான கோரிக்கையை பரிசீலிக்க வேண்டியது குஜராத் அரசாங்கமா அல்லது மகராஷ்டிரா அரசாங்கமா என்பது முடிவு செய்யப்பட வேண்டிய ஒரு கேள்வி. குற்றம் நடந்த மாநிலமான குஜராத்தில்தான் இந்த பிரச்னை பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் சார்பற்ற விசாரணை நடக்க வேண்டும் என்பதற்காக வழக்கு நடத்தப்பட்ட மகராஷ்டிராவில் இதனைப் பரிசீலிக்கத் தேவை இல்லை என்று நீதிமன்றம் சொன்னது. ஜூலை 1992ல் வகுக்கப்பட்ட ஒரு கொள்கையின் கீழ் தண்டனைக் குறைப்புக்கான கோரிக்கை பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் அமர்வு சொன்னது. 2008ல் தீர்ப்பு வழங்கப்பட்டபோது இந்தக் கொள்கை அமலில் இருந்தது. அதன் அர்த்தம் என்னவென்றால், கொலை மற்றும் பாலியல் வல்லுறவு குற்றவாளிகளுக்கு தண்டனைக் குறைப்பு வழங்கக்கூடாது என்ற தற்போதைய கொள்கை  இந்தக் குற்றவாளிகளுக்கு பொருந்தாது என்பதுதான்.

குறைந்தபட்சம் இரண்டு அடிப்படைகளின் கீழ் இந்த தண்டனைக் குறைப்பை விதிமீறலாக கருத வாய்ப்பிருக்கிறது. முதலாவதாக, மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல் மாநில அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது. சி.பி.ஐ புலனாய்வு செய்த வழக்குகளில் குற்றவியல் நடைமுறை சட்டம் 435ன் கீழ் அத்தகைய கலந்தாலோசனை கட்டாயமாகிறது. மேலும் குற்றவாளிகளுக்கு தண்டனைக் குறைப்பை பரிந்துரை செய்த குழுவில் இரண்டு பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். தண்டனைக் குறைப்புக்கான குழுவில் பொதுவாக சட்டம் அல்லது உள்துறையில் பொறுப்பிலுள்ள அரசு அதிகாரிகள், மாவட்ட நீதிபதி, சிறைத்துறை கண்காணிப்பாளர், குற்றவாளிகளின் நன்னடத்தை சோதனை காலம் மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றுக்கு பொறுப்பான அதிகாரிகள் இருப்பார்கள். அரசியல்வாதிகள் இருப்பது நிச்சயமாக குழுவின் முடிவை தவறான வழியில் பாதிக்கிறது. தவிர, மாவட்ட நீதிபதியின் ஆட்சேபணை புறந்தள்ளப்பட்டதாக சொல்லப்படும் நிலையில் தண்டனைக் குறைப்பின் சட்டப்பூர்வ அங்கீகாரம் சந்தேகத்திற்கு உள்ளாகியிருக்கிறது.  தற்போது அமலில் இருக்கும் கொள்கைக்கு பதிலாக குற்றத்துக்கான தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியன்று அமலில் இருந்த கொள்கையின் கீழ் வழங்கப்படும் தண்டனைக் குறைப்பு முடிவுகளை மறு ஆய்வு செய்ய ஒரு அமர்வை உச்ச நீதிமன்றம் நியமிப்பது பொருத்தமாக இருக்கும். தவிர, இது குறித்து முடிவெடுக்க வேண்டிய ‘பொருத்தமான அரசு’, குற்றம் நிகழ்ந்த மாநில அரசா அல்லது நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய மாநில அரசா என்கிற கேள்விக்கும் அது விடை காண வேண்டும்.  மனிதநேய காரணிகளின் அடிப்படையிலும் குற்றவாளிகள் வருந்தி, மனம் திருந்தி வாழ்வதற்கான சாத்தியங்களின் அடிப்படையிலும் வடிவமைக்கப்படும் ஒரு தண்டனைக் குறைப்பு கொள்கையின் எல்லைகள் என்ன என்பது குறித்தும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலாம்.

This editorial in Tamil has been translated from English which can be read here.

0 / 0
Sign in to unlock member-only benefits!
  • Access 10 free stories every month
  • Save stories to read later
  • Access to comment on every story
  • Sign-up/manage your newsletter subscriptions with a single click
  • Get notified by email for early access to discounts & offers on our products
Sign in

Comments

Comments have to be in English, and in full sentences. They cannot be abusive or personal. Please abide by our community guidelines for posting your comments.

We have migrated to a new commenting platform. If you are already a registered user of The Hindu and logged in, you may continue to engage with our articles. If you do not have an account please register and login to post comments. Users can access their older comments by logging into their accounts on Vuukle.