சில நேரங்களில், அதிகாரத்தை பயன்படுத்துவதற்கும் தவறாக பயன்படுத்துவதற்கும் இடையிலான கோடு மிக மெல்லியது. டிசம்பர் 2016ல் நிகழ்ந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், மருத்துவ காரணிகளுக்காகவோ பொது மக்களின் கோரிக்கைகளுக்காகவோ அன்றி அரசியல் கணக்குகளுக்காகவே அமைக்கப்பட்டது. தனித்துவிடப்பட்ட ஒரு காலகட்டத்துக்கு பின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் தன்னை மீண்டும் இணைத்துக் கொள்ளும் செயலை எளிமைப்படுத்துவதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்பதை இணைப்புக்கான முன் நிபந்தனையாக வைத்தார். இதில் எதிரியாக கூடியவர் ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்த வி.கே.சசிகலா என்பதாலும் இருவருக்கும் அவர் பொதுவான எதிரி என்பதாலும் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்வதில் அ.இ.அ.தி.மு.கவின் எடப்பாடி பழனிச்சாமிக்கும் எவ்விதமான தயக்கமும் இல்லை. அப்படிதான் செப்டம்பர் 2017ல் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மருத்துவமனையின் மீது குற்றசாட்டுக்கான நோக்கம் கற்பிக்க இந்த விசாரணை ஆணையம் முனைவதாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை சொன்னது இந்த முயற்சியில் ஏற்பட்ட முதல் முட்டுக்கட்டை. சிகிச்சையின் சரித்தன்மை குறித்து விசாரிக்க ஆணையத்திற்கு தகுதி இல்லை என்று சொல்லி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது மருத்துவமனை. கூடவே ஒரு மருத்துவர் குழுவும் நியமிக்கப்பட வேண்டும் என்று கோரியது. ஆனால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 2018ல் அதே கோரிக்கையை விசாரணை ஆணையத்திடமும் வைத்தது மருத்துவமனை. ஏப்ரல் 2019ல் விசாரணை ஆணையத்தின் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.
விசாரணை ஆணையத்துக்கு அறிவுரை வழங்க 2021ல் எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து ஒரு மருத்துவ குழுவை அமைக்கும்படி உச்ச நீதிமன்றம் கூறியது. இந்தக் குழு இந்த மாத தொடக்கத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் மருத்துவமனை சொன்னதுபோல ஜெயலலிதா பலவிதமான நோய்களால் அவதிப்பட்டு வந்தார் என்றும் அவருக்கு சரியான, முறையான சிகிச்சை வழங்கப்பட்டது என்றும் சொன்னதோடு நோய் பற்றிய இறுதி கணிப்புகளையும் உறுதிப்படுத்தியது.
பற்பல கால அவகாச நீட்டிப்புகளுக்கு பிறகு விசாரணை ஆணையம் ஒரு வழியாக ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதில் ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகாத சசிகலா உள்ளிட்ட சில நபர்களின் பங்கு பற்றி அரசு விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது. இதில் என்ன ஆச்சரியம் என்னவென்றால் இந்த ஆணையம் அமைய காரணமாக இருந்த திரு. பன்னீர்செல்வம் கூட ஆணையத்தின் முன் ஆஜராகி சாட்சி சொல்வதை இந்த மார்ச் மாதம் வரையில் தள்ளிப்போட்டார். மேலும், அப்படி ஆஜரானபோதுகூட பெரிதாக எதுவும் சொல்லவில்லை. அ.இ.அ.தி.மு.கவுக்கு ஆணையம் அளித்து வந்த அரசியல் ரீதியான நன்மைகள் முடிந்துவிட்டது என்பது தெளிவு. இந்த குழப்பத்திற்கு இடையில் திராவிட முன்னேற்ற கழகம் மாநிலத்தில் ஆட்சியை பிடித்துவிட்டது. இப்போதும் இந்த விவகாரத்தை போட்டு அடித்துக்கொண்டிருப்பது, அறிவார்ந்த செயல்பாடாக இருக்காது என்பது மட்டுமல்ல, அரசியலில் அது ஒரு புதிய வீழ்ச்சியையும் குறிக்கும். இந்த இல்லாத பிரச்னையை ஒரேடியாக ஒதுக்கி வைப்பதுதான் அரசு செய்ய கூடிய சரியான செயல். இந்த அறிக்கையிலிருந்து யாரும் எவ்விதமான அரசியல் லாபத்தையும் அடைய முடியாது.
This editorial has been translated from English which can be read here.
COMMents
SHARE