ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில், பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்ததைதான் சமீபத்திய அதிகாரப்பூர்வமான மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள் காட்டுகின்றன. உற்பத்தி மற்றும் சுரங்க தொழில்துறையில் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் வீழ்ச்சி, தனியார் நுகர்வு செலவினங்களிலும் அரசு செலவினங்களிலும் ஒரு பரவலான மந்தநிலை ஏற்பட்டிருப்பது ஆகியவற்றால் வளர்ச்சி பின்னிழுக்கப்பட்டிருக்கிறது. முந்தைய ஆண்டைவிட மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3 சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. முதல் காலாண்டில் பதிவான 13.5 சதவிகித வளர்ச்சி, 2021ஆம் ஆண்டின் ஜூலை-செப்டம்பரில் இருந்த 8.4 சதவீத வளர்ச்சி ஆகியவற்றோடு ஒப்பிட்டால் மிகக் கூர்மையான சரிவு இது. மொத்த மதிப்பு சேர்ப்பைப் பொறுத்தவரையில் எட்டு துறைகளில் மூன்று துறைகள் மட்டுமே – வேளாண்மை, வணிகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, தகவல் தகவல் தொடர்பு போன்ற பல்துறை தீவிர தொடர்பு அடிப்படையிலான சேவைகள், நிதி, கட்டுமானத்துறை மற்றும் தொழிற்முறை சேவைகள் – வளர்ச்சியில் ஆண்டு தோறும் வேகத்தைக் காட்டின. அதோடு, வேளாண்மை, மின்சாரம், எரிவாயு, நீர் வழங்கல், பிற பயன்பட்டு சேவைகள் உள்ளிட்ட ஐந்து துறைகளும், கட்டுமானத் துறையும் தொடர்ச்சியான வீழ்ச்சியையே பதிவுசெய்தது. இது சர்வதேச மந்தநிலையின் மிக உயர்ந்த நிச்சயமற்றதன்மை, யுக்ரைன் போர், தொடர்ச்சியான அதிக உள்நாட்டு பண வீக்கம் ஆகியவை ஒன்றாக இணைந்திருப்பதை பிரதிபலிப்பதாகவே இருந்தது. செலவினத்தைப் பொருத்தவரையில், தடுப்பரண் போலிருந்த தனியார் செலவு நுகர்வு, அரசு செலவு ஆகிய இரண்டும் கணிசமாகக் குறைந்தன. முந்தையது முதல் காலாண்டு வளர்ச்சியான 25.9 சதவிகிதத்தோடு ஒப்பிடுகையில் ஆண்டு தோறும் 9.7 சதவீத விரிவையும், பிந்தையது ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 1.3 சதவிகிதம் விரிவாக்கத்திற்கு பிறகு 4.4 சதவீதம் அளவில் சுருக்கத்தையும் பதிவு செய்தன. ஆனால் தொடர்ச்சியாகப் பார்க்கும்போது, தனியார் நுகர்வுக்கு பண்டிகை கால மீட்சி இருந்தது. அப்போது தோராயமாக 1 சதவிகித வளர்ச்சியை அது பதிவுசெய்தது. தவிர, மொத்த நிலையான மூலதன உருவாக்கத்தில் முந்தைய காலாண்டோடு ஒப்பிட்டால் 3.4% வளர்ச்சி இருந்தது, தனியார்
தொழில்துறையில் முதலீடு செய்வதற்கான ஆர்வம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டியது. கோவிட்-19 தொற்றால் முடங்கியிருந்த பொருளாதாரத்தின் மீட்சி நல்லமுறையில் நடைபெற்று வருவதாக உறுதியாகச் சொல்கிறார் முதன்மை பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன். தவிர, சர்வதேச பின்னடைவுகள் இருந்தபோதும், இந்த நிதியாண்டில் 6.8 முதல் 7 சதவிகிதம் வரையிலான வளர்ச்சியை அடையும் பாதையில் நாடு இருந்தது. இருப்பினும், ரிசர்வ் வங்கியின் முக்கிய கொள்கை வகுப்பாளர் ஒருவர் சுட்டிக்காட்டிய தரவு மாறுமாடு மற்றும் திருத்தங்களால் முன்வைக்கப்படும் சவால் முக்கியமானதும் புறந்தள்ள முடியாததும் ஆகும். சமீபத்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளில் உள்ள “முரண்களின்” உள்ளீடு, கடந்த ஒன்பது காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு 2.8 சதவிகிதமாக இருந்தது, இந்தப் பிரச்சனையைச் சிறப்பாக சுட்டிக்காட்டுகிறது. மேலும் சிமெண்ட், நிலக்கரி, உரங்கள், மின்சாரம், சுத்திகரிப்பு பொருட்கள் உள்ளிட்ட எட்டு முக்கிய தொழில்களில் ஒருங்கிணைந்த உற்பத்தியை காட்டும் அக்டோபர் மாதத்திற்கான அதிகாரப்பூர்வ மையத் துறையின் புள்ளிவிவரங்கள் வளர்ச்சிக்கான தத்தளிப்பைச் சுட்டிக்காட்டின. வளர்ச்சியை உறிஞ்சும் பண வீக்கத்தை கட்டுப்படுத்த போராடும் நிலையில், கொள்கை வகுப்பாளர்கள் கவனமாக இருப்பதை கைவிட முடியாது. கடன் நிலைமைகள் உண்மையான பொருளாதாரத்துக்கு ஆதரவாக இருப்பதையும் அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE