ஒடிசாவில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் கிராமமான சுந்தர்கர் மாவட்டம், ஹாக்கி விளையாட்டின் தொட்டிலும் கூட. கிராமப்புற அளவில் இங்கு நடக்கும் போட்டிகளில் ஆடுகளை கோப்பையாக பார்க்கும் மக்களுக்கு ரூர்கேலாவில் ஆண்கள் உலகக் கோப்பை போட்டிகள் நடப்பது, வெள்ளிக் கிழமையன்று சிறந்த அணிகள் போட்டியிடுவதை பார்ப்பதற்கான கனவு வாய்ப்பைத் தந்திருக்கிறது. புவனேஷ்வரோடு இணைந்து ரூர்கேலா இந்த மிகப் பெரிய போட்டியை நடத்துகிறது. இந்திய தேசிய அணிகளுக்கு ஸ்பான்சர் செய்வதுடன், 2018ல் உலகக் கோப்பையை புவனேஷ்வரில் நடத்தவும் ஒடிசா அரசு ஒரு தாராளமான முடிவை எடுத்தது. 2023ல் அதிகாரப்பூர்வமாக முதல் முறையாக இரண்டு நகரங்களில் போட்டியை நடத்துவது என்கிற ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் முடிவு அதைவிட மிகப்பெரிய முடிவு. ஏற்பாடு தொடர்பான சிக்கல்களை சமாளிக்க மாநில அரசு மும்முனை அணுகுமுறையை பின்பற்ற வேண்டியிருந்தது. 20,000 பார்வையாளர்களைக் கொண்ட ஒரு புதிய விளையாட்டரங்கை 260 கோடி ரூபாய் செலவில் கட்டியது. வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தங்குவதற்கு 225 அறைகள் கொண்ட ஐந்து நட்சத்திர விடுதிகளை கட்டியது. பிறகு குறிப்பிட்ட காலத்துக்கு ரூர்கேலாவில் வணிக விமானங்களுக்கான ஒரு விமான நிலையத்தை தயார் செய்தது. கொள்ளை நோய் ஒரு மிகப்பெரிய தடையாக இருந்தாலும், ஒடிசா அரசு மனவுறுதியோடு செயல்பட்டது. இதன் மூலம் உலகக் கோப்பை போட்டிகளை தொடர்ச்சியாகவும் நான்காவது முறையாகவும் நடத்திய முதல் நாடாக இந்தியா இருக்கும். நிகழ்வை நடத்தும் நான்காவது இந்திய நகரமாக எஃகு நகரமான ரூர்கேலா இருக்கும். 1860களில் கிறிஸ்துவ மிஷனரிகள் மூலம் சுந்தர்கர் மாவட்டத்துக்கு ஹாக்கி அறிமுகமானது. அப்போதிலிருந்து அது கடந்து வந்த பாதை பெரிது. முன்னாள் இந்திய கேப்டனும் தற்போதைய ஹாக்கி இந்தியா தலைவருமான திலீப் திர்கி, இக்னேஸ் திர்கி, பிரபோத் திர்கி, லாசரஸ் பார்லா, வில்லியம் சால்க்ஸோ, பிரேந்திர லக்ரா, ஜோதி சுனிதா குலு, சுபத்ரா பிரதான் மற்றும் தீப் கிரேஸ் எக்கா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை அந்த மாவட்டம் தந்திருக்கிறது. இப்போது அதன் இரண்டு மகன்கள் – துணை கேப்டன் அமித் ரோஹிதாஸ் மற்றும் நீலம் சஞ்சீப் செஸ் – ஆகியோர் சொந்த மண்ணில் இந்திய கொடிகளை ஏந்தியிருப்பதை அந்த மாவட்டம் பார்க்கும்.
2021ல் டோக்கியோவில் வெண்கலப் பதக்கத்தை வென்ற பிறகு நாற்பதாண்டுகளில் முதல்முறையாக இந்தியா ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற ஒரு அணியாக உலகக் கோப்பையை எதிர்கொள்ளப் போகிறது. 1971ல் வெண்கலப் பதக்கமும், 1973ல் வெள்ளிப் பதக்கமும், 1975ல் ஒரு தங்கப் பதக்கமும் வென்ற இந்தியாவுக்கு, வெற்றிக்கான பசி தீவிரமாக இருக்கும். கடைசியாக 48 வருடங்களுக்கு முன்பு இந்தியா உலக கோப்பையின் இறுதி மேடையில் இருந்தது. ஆஸ்திரேலிய உலகக் கோப்பை மற்றும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற கிரகாம் ரீட்டால் பயிற்றுவிக்கப்பட்ட இந்திய அணி, கடந்த போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியது. இளைஞர் சக்தியும் அனுபவமும் கலந்த ஒரு அணியாக இருக்கும் இந்த அணி இப்போது நல்லதொரு ஆட்டத்தை ஆட ஆர்வமாகவே இருக்கும். இந்தியா எப்படி விளையாடினாலும் சரி, 16 அணிகள் மோதும் இந்த போட்டி மிகப்பெரிய விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்வதில் ஒடிசாவுக்கு உள்ள நற்பெயரை அதிகரிக்கவே செய்யும்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE