ஆறு சதவிகிதத்துக்கும் அதிகமான கட்டுப்பாடில்லாத விலை உயர்வை எதிர்கொண்டிருக்கும் இந்திய நுகர்வோரின் 10 மாத கால கிட்டத்தட்ட முறிக்க முடியாத நிலைக்குப் பிறகு, நவம்பரில் சில்லறை பணவீக்கம் சற்று தளர்ந்து 5.88 சதவிகிதமாக காணப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் சகிப்புத் தன்மை வரம்பான ஆறு சதவிகிதத்தை விட இது கொஞ்சம் மட்டுமே குறைவாக இருந்தாலும் இது ஒரு நிவாரணத்தை கொண்டு வந்திருக்கிறது. ஏப்ரல் 2022 தொடங்கி எட்டு ஆண்டு காலத்தில் இல்லாத உயர்வான 7.8 சதவிகிதம் அளவில் சில்லறை விலைகள் உயர்ந்த நிலையில், 2022-23ன் முதல் எட்டு மாதங்களில் ஐந்து மாதங்கள் 7 சதவிகிதத்துக்கும் அதிகமான பண வீக்கம் பதிவு செய்தன. தொடர்ச்சியாக, அக்டோபரின் 6.77 சதவிகித புள்ளியிலிருந்து நவம்பரின் 0.9 சதவிகித புள்ளி வீழ்ச்சி, இந்த காலகட்டத்தில் நடந்த மிகக் கூர்மையான மட்டுப்படுத்துதல் ஆகும். இது மாதிரியான திருத்தம் இருக்கும் ஊரக பண வீக்கத்தின் பாதையில் இது 6.1 சதவிகிதம் என்கிற அளவில் அதிகமாகவே இருக்கிறது. அரசு எடுத்த நடவடிக்கைகளால் உணவு விலை பண வீக்கத்தில் ஏற்பட்ட கூர்மையான குறைவு காரணமாகதான் இந்த ‘கடுமையான சரிவு’ என்று நிதி அமைச்சகம் சொன்னது. நுகர்வோர் உணவு விலை பணவீக்கம் அக்டோபரில் 7 சதவிகிதத்தற்கும் அதிகமாக இருந்ததிலிருந்து நவம்பரில் 4.67 சதவீதமாகக் குறைந்தது. உணவு பண வீக்கத்தில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு காய்கறி விலைகள் முக்கிய காரணம். அக்டோபரில் 7.8 சதவிகிதம் பண வீக்கத்திலிருந்து கடந்த மாதம் 8.1 சதவிகித பண வாட்டத்துக்கு நகர்ந்தது. மாதம் தோறும் 8.3 சதவிகிதம் என்கிற அளவில் சரிந்தது.
காய்கறி விலைகள் சிறிது காலத்துக்கு சாதாரணமானதாக இருக்கலாம், ஆனால் இயற்கையாகவே அவை நிலையற்றவை. அவற்றை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், சில்லறை வணிகம் நவம்பரில் 7 சதவிகிதத்திற்கு அதிகரித்திருக்கும் என்று சிலர் கருதுகிறார்கள். பிற வீட்டு பட்ஜெட் பொருட்களில் பெரிய நிவாரணம் எதுவும் கிட்டவில்லை. தானியங்கள், பால் மர்றும் மசாலப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய சமையலறைப் பொருட்களையும் சேர்த்துதான் இது. அதன் பண வீக்க விகிதங்கள் 13 சதவிகிதத்திலிருந்து, முறையே 8.2 சதவிகிதம் மற்றும் 19.5 சதவிகிதம் என்கிற அளவில் மாறின. வரவிருக்கும் மாதங்களில் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளின் விலையை ‘இன்னும் கணிசமாக உணர’ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எதிர்பார்க்கிறது. மண்ணெண்ணெய் மற்றும் நிலக்கரி விலைகள் மாதந்தோறும் அதிகரித்து வருவதால் எரிபொருள் பணவீக்கம் 10.6 சதவிகிதமாக உயர்ந்தது. சமீபத்திய நாணயக் கொள்கை மறுஆய்வில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் உணவு மற்றும் எரிசக்தி விலைகளின் ‘ஒட்டும்தன்மை’ பற்றி எச்சரித்திருந்தார். அவற்றை தவிர்த்த முக்கிய பணவீக்கமும் அதிகரித்துள்ளது. போக்குவரத்து, தகவல் தொடர்பு, சுகாதாரம், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றின் விலை உயர்வு அதிகமாகியிருக்கிறது. நுகர்வோர் விலைக் குறியீட்டில் உள்ள சுமார் 56 சதவிகிதப் பொருட்கள் நவம்பரில் 6 சதவிகிதத்துக்கும் அதிகமான பணவீக்கத்தைக் கண்டன. இது செப்டம்பர் மற்றும் அக்டோபரை விட அதிகம். மிக மோசமான காலகட்டத்தை கடந்துவிட்டோம் என்று வலியுறுத்தும் ரிசர்வ் வங்கி, இந்த காலாண்டில் பண வீக்கம் 6.6 சதவிகிதம் என்கிற அளவில் சராசரி நிலையை எட்டும் என்றும் சொல்கிறது. எனவே டிசம்பர் இன்னும் 7 சதவிகிதத்துக்கும் அப்பால் எழுச்சியைக் காணலாம். பணவீக்கம் நிலையான முறையில் 6 சதவிகிதித்தக்கும் குறைவாக கட்டுப்படுத்தப்பட வேண்டும். தவிர விருப்பமான 4 சதவிகித இலக்கை அடைய வேண்டும். ஆனால் தொழில்துறை உற்பத்தியும் சரிந்துள்ள நிலையில், மத்திய வங்கியில் தீவிரமான விகித உயர்வுகளுக்கு பெரிய இடம் இல்லை. இதனால் நிதிக் கொள்கை இப்போது அதிக பணியை செய்ய வேண்டியிருக்கும். இந்தியாவில் பெட்ரோல் பங்க் விலைகள் முடக்கப்பட்டிருப்பது என்பது சர்வதேச கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியிலிருந்து நுகர்வோருக்கு எந்த லாபமும் கிடைக்காது என்பதையே குறிக்கிறது. பெட்ரோலியப் பொருட்களுக்கான தினசரி விலை மீட்டமைப்பு முறை மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படும் வரையில் இந்த நிலை தொடரும். அதை சரி செய்வதன் மூலம் அரசு ஒரு தொடக்கத்தை ஏற்படத்தலாம்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE