கூட்டணி அரசுகளும் அரசியல்வாதிகளின் மாறி வரும் விசுவாசங்களுக்கும் பழகிய ஒரு மாநிலமாக இருக்கும் மேகாலயாவின் 60 சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினராவது கடந்த ஐந்தாண்டு சட்டப்பேரவை காலத்தில் கட்சி தாவியிருப்பார்கள். பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கூட, தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் ஒருவர் கட்சி மாறி பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராகிவிட்டார். ஒரு காங்கிரஸ் வேட்பாளர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு மாறிவிட்டார். 2018ல் காங்கிரஸ் 21 தொகுதிகளும் தேசிய மக்கள் கட்சி 20 தொகுதிகளும் பா.ஜ.க இரண்டு தொகுதிகளும் வென்றன. எஞ்சியிருந்த தொகுதிகளை பிராந்திய கட்சிகளும் சுயேச்சை வேட்பாளர்களும் கைப்பற்றினார்கள். தற்போது தேர்தல் நடைபெற உள்ள மூன்று வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்புள்ள ஒரே மாநிலம் மேகாலயா மட்டுமே. ஒரு காலத்தில் மேகாலயாவில் முக்கிய அரசியல் சக்தியாக இருந்த காங்கிரஸ், 2018ல் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் அதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இல்லை. இரட்டை இலக்கத்தை எட்டும் நோக்கத்தோடு 60 தொகுதிகளிலும் போட்டியிருகிறது பா.ஜ.க. நவம்பர் 2021ல் 12 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறிய நிலையில் ஒரே நாளில் மாநிலத்தின் எதிர்கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் 55 வேட்பாளர்களை நிறுத்துகிறது. மிகுந்த செல்வாக்குள்ள பிராந்தியக் கட்சியான ஐக்கிய ஜனநாயகக் கட்சி 46 இடங்களில் போட்டியிடுகிறது. மூன்று தாய்வழிப் பழங்குடிகளின் இயக்கவியல்தான் மாநில அரசியலுக்கு அடிப்படை. இனரீதியாக நெருக்கமான காசி மற்றும் ஜெயின்டியா பழங்குடிகள் மற்றும் 50 ஆண்டுகளுக்கு முன்பு மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து 34 ஆண்டுகளாக முதல்வர் நாற்காலியில் இருக்கும் காரோ பழங்குடியினர்.
காரோ பழங்குடியினர் அவ்வபோது தனி மாநில கோரிக்கையை எழுப்பி வந்திருக்கிறார்கள். ஆனால் இந்த முறை அந்த கோரிக்கை பெரிய அளவில் முன்வைக்கப்படவில்லை. மாநிலத்தின் 60 தொகுதிகளில் காசி-ஜெயின்டியா மலைகள் 36 இடங்களையும், காரோ ஹில்ஸ் 24 இடங்களையும் கொண்டிருக்கிறது. போட்டி மிகத் தீவிரமாக இருக்கும் காரோ மலைகளில் ஆளும் தேசிய மக்கள் கட்சியும் பிரதான போட்டியான திரிணாமூல் காங்கிரசும் மோதுகின்றன. அசாம் தேர்தல்களில் முக்கியமாக இருக்கும் வங்கதேச புலம்பெயர்ந்தவர்களின் பிரச்சினை இந்த முறை மேகாலயாவிற்குள் நுழைந்திருக்கிறது. தேசிய மக்கள் கட்சியும் பா.ஜ.கவும் திரிணாமுல் காங்கிரஸை இந்தியாவின் அண்டை நாட்டைச் சேர்ந்த மக்களுக்கு அனுதாபமுள்ள ஒரு வங்காள கட்சியாக சித்தரிக்க முயற்சிக்கின்றன. மோசமான ஆட்சி, மின்சாரம், சுகாதாரம், கல்வி, பொது விநியோகத் திட்டம் மற்றும் பிற துறைகளில் பெரிய அளவில் ஊழல், எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அசாமுடன் “சமச்சீரற்ற” ஒப்பந்தம் ஆகிய குற்றசாட்டுகளை தேசிய மக்கள் கட்சியின் மீது திரிணாமூல் காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வைக்கின்றன. கூட்டணிக் கட்சிகள் அரசில் தாங்களும் பங்கு வகித்ததை பொருட்படுத்தாமல், முழு பழியையும் தேசிய மக்கள் கட்சி மீது சுமத்த முயற்சி செய்கின்றன. எல்லா முடிவுகளையும் தேசிய மக்கள் கட்சியே எடுத்ததென்றும் தங்களை எந்த பிரச்னையிலும் கலந்தாலோசிக்கவில்லை என்றும் கூட்டணிக் கட்சிகள் சொல்கின்றன. பதவியிலிருந்து வெளியேறும் அரசில் அங்கம் வகித்த கூட்டணிக் கட்சிகள் ஆளுங்கட்சிக்கு எதிராக போட்டியிடுகின்றன. ஒவ்வொருவரும் சட்டமன்றத்தில் தங்களது பலத்தை அதிகரிக்கவும் தேர்தலுக்கு பிந்தைய வாய்ப்புகளுக்கு திறந்த மனதோடு இருக்கவுமே முயற்சி செய்கிறார்கள்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE