ஹாக்கி மையமான ரூர்கேலாவில் உள்ள கவர்ச்சிகரமான புதிய பிர்சா முண்டா விளையாட்டு அரங்கில் நடந்த ஆட்டத்தில் உள்ளூர் இளைஞர் அமித் ரோஹிதாஸ் அடித்த அற்புதமான கோல், சொந்த மண்ணில் இந்தியா தொடர்ச்சியாக நடத்திய இரண்டாவது ஹாக்கி உலகக் கோப்பையில் இந்தியாவின் ஆட்டத்துக்கு ஒரு கனவு தொடக்கத்தை வழங்கியது. ஹாக்கி மையமான ரூர்கேலாவில் ஸ்பெயினை 2-0 என்கிற கோல் கணக்கில் இந்தியா தோற்கடிக்கவும் செய்தது. பத்து நாட்கள் கழித்து, இந்த மகிழ்ச்சி நொறுங்கியது. ஆறாவது இடத்தில் இருந்த இந்தியா, பதினோரவது இடத்தில் இருந்த நியூசிலாந்துடனான ஆட்டத்தில் அழுத்தத்திற்கு உள்ளானது. பெனால்டி ஷூட் அவுட் மூலம் கிராஸ் ஓவர் போட்டியில் தோற்றதால் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் கூடியிருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கு முன்பு இந்தியா நடத்திய மூன்று உலகக் கோப்பைகளில் முதல் எட்டு இடங்களில் இடம்பெற்றிருந்த இந்தியா, இப்போது ஒன்பதாவது முதல் பதினாறாவது இடங்களுள் ஒன்றுக்கு போட்டியிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. 2018 உலகக் கோப்பையில் காலிறுதி வரை சென்ற இந்திய அணியிலிருந்து 14 பேரையும் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் 13 பேரையும் கொண்ட அணி முன்கூட்டியே வெளியேறியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, நாற்பது வருடங்களில் முதன் முறையாக ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற அணியாக உலகக் கோப்பைக்குள் நுழைந்த அணி இது. தோல்வி பற்றிய ஆய்வு தொடங்கிவிட்ட நிலையில், அணியிலிருந்து முன்னாள் வீரர்கள் சிலர் விடுபட்டது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அணிக்கான வீரர்களை தேர்ந்தெடுப்பது அந்த பணியில் இருந்தவர்களின் உரிமை சார்ந்த விஷயம் என்றாலும், சில குறைபாடுகள் வெளிப்படையாகவே தெரிந்தன.
மோசமான பெனால்டி கார்னர் மாற்றம் (26ல் 5, குறிப்பாக தாக்குதல் பாணி கோல் அடிப்பதில் ஏற்பட்ட தொய்வு மற்றும் தலைவர் ஹர்மன்பிரீத் சிங் காரணமாக), நுண்ணிய தற்காப்பு அமைப்பு, முன்கள வீரர்களின் சமநிலைக்கு குறைவான செயல்திறன் (பல போட்டிகளில் நான்கு பீல்டு கோல்கள்), முக்கியமான தருணங்களில் பந்தை இழந்தது, மற்றும் தீவிரத்தன்மையை நீடிப்பதில் ஒட்டுமொத்தமாக ஒரு நிலையற்றதன்மை இருந்தது ஆகியவை கிரஹாம் ரீட் பயிற்சியளித்த அணிக்கு அதன் முழுமையான
திறனை காட்ட தடையாக இருந்தது. 94 சர்க்கிள் என்ட்ரிகளில் இருந்து 9 கோல்களும், கோல்களில் 49 ஷாட்டுகளும் அடித்தது இந்தியாவின் துயரங்களை தெளிவாக சொல்லும் புள்ளிவிவரங்கள். முக்கிய மிட் ஃபீல்டர் ஹர்திக் சிங் தொடக்க நிலையிலேயே காயம் காரணமாக விலகியது மற்றும் பிரபல கோல்கீப்பர் பி.ஆர். ஸ்ரீஜேஷ் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அடிபட்டதும், பெரிய பின்னடைவுகள். ஷூட் அவுட்களின்போது அனுபவம் வாய்ந்த சில பேருக்கு வாய்ப்பு கிடைக்காதது இந்தியாவின் வாய்ப்புகளையும் பாதித்திருக்கலாம். இந்த ஆண்டு ஒலிம்பிக் தகுதிப் போட்டியான ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் 2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் ஆகியவற்றுக்கு முன்னதாக இந்தியா ஒரு பரிசோதனை செய்துகொண்டு பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்க வேண்டும். உலகக் கோப்பை பதக்கத்திற்கான இந்தியாவின் 48 ஆண்டு கால காத்திருப்பு நீண்டதாகிவிட்டாலும், கவலைக்குரிய பகுதிகளை அடிக்கோடிட்டுக் காட்டிய ஹாக்கி இந்தியா தலைவரும் முன்னாள் இந்திய கேப்டனுமான திலீப் திர்கி, அணியை மீண்டும் பாதைக்கு கொண்டு வர சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இளம் இந்திய வீரர்களுக்கு தரமான ஒரு தளத்தை வழங்குவதற்காக ஹாக்கி இந்தியா லீக்கை புதுப்பிப்பது மற்றும் தாக்குதல் ஆட்டம் ஆடும் பெரிய படையை அடையாளம் காண்பது போன்ற திட்டங்களை செயல்படுத்துவது ஹாக்கியின் தரத்தை உயர்த்த பங்களிக்கும்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE