சுழல் சிக்கல்

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மீண்டும் ஐசிசி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பை பெற்றிருக்கிறது இந்தியா.

March 15, 2023 11:20 am | Updated 11:20 am IST

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் தொடர்களில் 2-1 என்ற கணக்கில் வென்று பார்டர் - கவாஸ்கர் கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டதன் மூலம் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கிரிக்கெட்டில் இந்தியாவின் அசைக்க முடியாத ஆட்டத்தை உறுதிப்படுத்தியது. ஆனால் ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யூ.டி.சி) இறுதிப் போட்டியில் இடம் பெறுவதற்கான போட்டிதான் முக்கியமானது. இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவதன் மூலம் ஒரு தெளிவான முன்னிலையைப் பெற்றிருப்பது முக்கியம் என்றாலும், ஆஸ்திரேலிய அணி இந்தூரில் வெற்றிபெற்று தோல்வி வித்தியாசத்தைக் குறைத்தது. அதே நேரம், அகமதாபாத்தின் அமைதியான மேற்பரப்பு, அதிக ரன்களைக் குவிக்கக்கூடிய ஒரு போட்டிக்கான எல்லா அறிகுறிகளையும் கொண்டிருந்தது. ஆஸ்திரேலியா ஏற்கனவே தனது இடத்தை உறுதி செய்திருந்த நிலையில், மற்றொரு போட்டியாளரான இலங்கைக்கும் ஒரு வாய்ப்பு இருந்தது. ஆனால், கேன் வில்லியம்சனின் மாஸ்டர் கிளாஸ் ஆட்டத்தால் கிறிஸ்ட்சர்ச்சில் இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து கடைசி பந்தில் த்ரில் வெற்றியைப் பெற உதவியது. அகமதாபாத் டெஸ்ட் போட்டி ஒரு முட்டுக்கட்டையை நோக்கி நகர்ந்தாலும், இலங்கையின் தோல்வி இந்தியாவுக்கு ஒரு ஊக்கமாக அமைந்து உடனடியாக தகுதியை பெற உதவியது. சவுத்தாம்ப்டனில் நடந்த 2021 இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்ற இந்தியாவின் நோக்கம் இந்த முறை முதலில் தகுதி பெறுவதும், பின்னர் மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் உள்ள தனது அலமாரிகளில், ஐசிசியின் கோப்பைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுமாகத்தான் இருந்தது. 2013ஆம் ஆண்டு பர்மிங்காமில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்றதன் மூலம் கிடைத்த கோப்பைதான் அதன் கடைசி ஐசிசி கோப்பை. அதைத் தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கள் என இரண்டிலும் இந்தியா நாக் - அவுட் சுற்றில் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி இந்தியாவை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டுமென்றாலும், டபிள்யூ.டி.சி இறுதிப்

போட்டியில் போட்டியாளர்கள் நடுநிலையான ஒரு இடத்தில் மோதும்போது, வடிவான ஸ்பின்னிங் ஸ்கொயர் எல்லாம் இருக்கப் போவதில்லை. முதல் பந்தில் இருந்தே ஆடுகளம் மோசமடைந்து மூன்று நாட்களிலேயே முடிவுக்கு வரும் டெஸ்ட் போட்டிகள் கிரிக்கெட்டின் நீண்ட வடிவத்திற்கு நல்லதல்ல. அகமதாபாதில் ஐந்து நாள் ஆட்டம் என்பது விதிவிலக்காக இருந்தது. ஆனால் இந்திய அணி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் போது, வேகப் பந்துவீச்சுதான் ஆதிக்கம் செலுத்துகிறது. வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வரும் நிலையில், உமேஷ் யாதவைத் தவிர ஷமி முகமதுவும் சிராஜ் முகமதுவும்தான் வேகப்பந்து வீச்சை அதிகரிக்க வேண்டிய சூழல் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சமீபத்திய தொடரின்போது ரோஹித், விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோர் மீண்டும் ரன்களில் இருந்தார்கள். ஷுப்மன் கில் நல்ல ஃபார்மில் இருப்பதால், இந்த பேட்ஸ்மேன்கள் ஓவலில் நல்ல ஒரு ஆட்டத்தைத் தர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், இந்தியா இரண்டு பேரையும் களமிறக்குமா அல்லது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஒரே ஒரு வீரரை மட்டும் அனுப்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ரோஹித், கோலி, புஜாரா, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் அடங்கிய மைய அணி முப்பதுகளின் நடுப்பகுதியில் இருப்பதால் மாற்றம் தவிர்க்க முடியாதது என்பது ஒரு தலைவலி. ஆனால், அதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தொடர்ந்து, இந்தியன் பிரீமியர் லீக்கும் இருக்கிறது: இந்தியா ஜூன் மாதத்தில் இங்கிலாந்துக்கு பறக்க வேண்டும்.

This editorial has been translated from English, which can be read here.

Top News Today

Comments

Comments have to be in English, and in full sentences. They cannot be abusive or personal. Please abide by our community guidelines for posting your comments.

We have migrated to a new commenting platform. If you are already a registered user of The Hindu and logged in, you may continue to engage with our articles. If you do not have an account please register and login to post comments. Users can access their older comments by logging into their accounts on Vuukle.