2002 மற்றும் 2005ல் சாம்பியனாக இருந்த ஜெர்மனி, ஞாயிறு அன்று அதன் மூன்றாவது ஆண்கள் பிரிவு ஹாக்கி உலக கோப்பையை வென்ற போது, அந்த நாட்டுக்கும் புவனேஷ்வருக்கும் இருந்த தொடர்பு இன்னும் ஆழமடைந்தது. சொல்லப் போனால் தனது கடைசி பெரிய பட்டத்தைக் கூட – 2014 சாம்பியன் கோப்பை – ஒடிஷா தலைநகரில்தான் ஜெர்மனி வென்றது. இந்த தலைநகரின் நவீன வடிவத்தை 1946ல் வடிவமைத்தது கூட ஜெர்மனியைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் ஒட்டோ கோனிக்ஸ்பெர்கர்தான். டை ஹோனாமாஸ் என்று அழைக்கப்படும் ஜெர்மனியின் ஆண்கள் ஹாக்கி அணி, ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்தின் மூன்று மகுடங்களை சமன் செய்ததோடு இல்லாமல் பாக்கிஸ்தானுக்கு பின்னால் ஒரு இடத்தைப் பிடித்தது. யூரோ ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் இரண்டாமிடம் பெற்றதன் மூலம் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்று, 2021 டோக்கியோ ஒலிம்பிக் வெண்கலப் பதக்கப் போட்டியில் இந்தியாவிடம் தோற்ற ஜெர்மனி, மக்கள் செல்வாக்கு பெற்ற அணிகளில் ஒன்றில்லைதான். காலிறுதியில் இங்கிலாந்து, அரையிறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, இறுதிப் போட்டியில் 2018-ம் ஆண்டு சாம்பியனான பெல்ஜியம் ஆகிய அணிகளுக்கு எதிராக வெற்றிகளை குவிக்க தனது உள்ளார்ந்த மன உறுதியையும், மீள்திறனையும் அந்த நாடு நம்பியது. இதில் இறுதி மோதல் உள்ளிட்ட இரண்டு வெற்றிகள், சமன்நிலையில் இருந்த இரு அணிகளுக்கிடையில் அதை சரி செய்வதற்கான மோதலில் (penalty shootouts) வந்தன. 2014 சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற அணியில் இருந்து ‘இறுதிப் போட்டியின் சிறந்த வீரர்’, ‘சிறந்த வீரர்’ மற்றும் போட்டியின் ‘சிறந்த ஃபார்வர்ட்’ நிக்லாஸ் வெல்லன் உள்ளிட்ட ஏழு வீரர்களை உள்ளடக்கிய நம்பிக்கையும் பாரம்பரியமும் கலந்த அணியாக இருந்த ஜெர்மனி ஒரு நல்ல அணியாகவே தோன்றியது. 2018 ஆம் ஆண்டில் அர்ஜென்டினா அணிக்காக விளையாடிய தாக்குதல் பாணி வீரர் கோன்சாலோ பீலாட், முக்கியமான கோல்களை அடித்ததன் மூலம் கணிசமான பங்களிப்பை வழங்கினார்.
சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் பெல்ஜியத்தின் கனவும் தகர்ந்தது. சாதனையை சமன் செய்யும் நான்காவது தங்கத்தை வெல்லும் ஆஸ்திரேலியாவின் லட்சியமும் பின்னடைவை சந்தித்து, 1998க்கு பிறகு முதன்முறையாக வெறும் கையுடன் வெளியேறியது. நெதர்லாந்து வெண்கலம் வென்றது ஆறுதல். ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் தொடர்ந்த நிலையில், அவற்றின் ஆசிய சகாக்கள் ஏமாற்றத்தையே தந்தார்கள். சிறந்த ஆசிய அணியான தென் கொரியா எட்டாவது இடத்தைப் பிடித்தது. அர்ஜென்டினாவுடன் இணைந்து ஒன்பதாவது இடத்தை பிடித்த இந்தியா, தான் நடத்திய நான்கு உலகக் கோப்பைகளிலும் மிகக் குறைந்த வெற்றியை இதில்தான் பதிவு செய்தது. இதன் விளைவாக டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வரலாற்று வெண்கலப் பதக்கத்தை பெற்றுத் தந்த தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் வெளியேறினார். ஒட்டுமொத்தமாக, இருக்கைகளின் எண்ணிக்கை சார்ந்து உலகின் மிகப்பெரிய விளையாட்டரங்கங்களை கொண்டிருந்த புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில், 44 போட்டிகளில் 11 போட்டிகள் டிராவில் முடிந்து அல்லது சமன் நிலையில் இருந்த அணிகளுக்கான கூடுதல் போட்டிகளுக்கு இட்டுச் சென்ற நிலையில் ஆட்டம் கணிக்க முடியாததாகவே இருந்தது. ஒரு போட்டிக்கு சராசரியாக 5.66 கோல்கள் அடித்ததே ஆண்கள் உலகக் கோப்பையில் அதிகபட்ச கோல்கள். பல ஆட்டங்களின் போது அரங்குகள் நிரம்பியிருந்ததும், ஒட்டுமொத்தமாக போட்டியை வெற்றிகரமாக நடத்தியதும் இப்படியான பெரிய போட்டிகளின் அமைப்பாளராக இந்தியாவுக்கு இருக்கும் நற்பெயரை அதிகப்படுத்தியிருக்கிறது. 2026 ஆண்கள் மற்றும் பெண்கள் உலகக் கோப்பைகளின் கூட்டாக நடத்தும் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்திற்கு ஒரு அளவுகோலை அமைத்தது. சொந்த மண்ணில், முன்னாள் கேப்டன் திலீப் திர்கே தலைமையிலான ஹாக்கி இந்தியா, இந்த புகழ்பெற்ற நிகழ்வால் உருவாக்கப்பட்ட சூழலைப் பயன்படுத்தி விளையாட்டை புத்துயிர் பெறச் செய்ய வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE