மெல்போர்னில் ஞாயிற்றுக்கிழமை அன்று முடிவுக்கு வந்த ஐசிசி டுவெண்டி - 20 உலகக் கோப்பை, கிரிக்கெட்டின் மிகக் குறுகிய வடிவத்திற்கு ஒரு பொருத்தப்பாட்டை வழங்கியது. இந்தியன் பிரீமியர் லீக் தொடங்கி பிக் பாஷ் வரையிலான உள்ளூர் போட்டிகளின் அடுக்குகளில் அந்த ஆட்டம் தொலைந்துவிட்ட நிலையில், இருதரப்பு போட்டிகளில் டி - 20 போட்டிகள் பெரும்பாலும் தாமதமாகவே சிந்தனைக்கு வருகின்றன. அந்தந்த கிரிக்கெட் வாரியங்கள் தங்களுக்கு சொந்தமான போட்டிகளுக்கு அதிக கவனம் தர முயற்சிக்கும் போது, சில விளையாட்டுகள் சாதாரணமாக நடத்தப்படுகின்றன. உலகின் கவனம் பெரும்பாலும் கால்பந்தாட்டத்தில் இருக்கும் நிலையில், கிரிக்கெட்டின் வரையறுக்கப்பட்ட தளத்தில் அந்தந்த நாடுகளுக்கான லீக் கிரிக்கெட் அதிகமாக பரவி கொண்டிருக்கும்போது, கிரிக்கெட்டுக்கு ஒரு நிரந்தரத்தன்மை தேவைப்படுகிறது. இப்போது அதன் வடிவம் பெரும்பாலும் கண் மூடி - கண் திறப்பதற்குள் முடிந்துவிடும் என்ற ஒரு தளத்தில்தான் இருக்கிறது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கென்று ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் டி - 20 அதிக பணமும் மிகைப்படுத்துதலும் உள்ள ஒரு கொல்லைப்புற மோதலாகவே பார்க்கப்படுகிறது. அந்த பார்வையை இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மாற்றுகிறது டி - 20 உலக கோப்பை. இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியும் இதற்கு விதிவிலக்கல்ல. வணிக ரீதியான செல்வாக்கு இந்தியாவிடம் இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டின் பாரம்பரியத்தில் ஊறிப்போன இங்கிலாந்து கோப்பையை வென்றிருப்பது 20 ஓவர் போட்டி வடிவத்திற்கு ஒரு உந்துதலைத் தரக்கூடும். இங்கிலாந்தின் பயற்சி கட்டமைப்பில் உள்ள நெகிழ்வுத்தன்மைக்கும் ஒரு மரியாதை இது. டெஸ்டுகள், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளை தனித்துவம் வாய்ந்த தனியான வடிவங்களாக நிர்வாகம் பார்ப்பதையும் அதனால் அணி சேர்ப்பு மற்றும் அணுகுமுறைகளும் அதற்கேற்ப மாற்றப்படுவதையும் இது சுட்டிக்காட்டுகிறது. இங்கிலாந்தின் டி - 20 போட்டிகளில் ஜோ ரூட் இடம்பெறவில்லை என்பது இந்த விளையாட்டில் உணர்வுகளை தள்ளி வைத்திருப்பதற்கான ஒரு அறிகுறி.
இறுதிப் போட்டியில் இங்கிலாந்துடன் மோதியது பாகிஸ்தான். இறுதியில் ஜோஸ் பட்லரின் வீரர்களும் அவர்களின் அதிரடி ஆட்டமும் வென்றது என்றாலும், பாபர் அசாமின் அணியினர் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சு திறமை அப்படியே இருப்பதை நிரூபித்தார்கள். 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை மட்டுமே எடுத்த போதிலும், ஷாஹின் அப்ரிடி இறுதியில் மந்தமாக ஆடினாலும் கூட பாகிஸ்தான் தனது வேகப்பந்து வீச்சாளார்களின் மூலம் போட்டியை நீட்டிக்க முடிந்தது. இங்கிலாந்தும் பாகிஸ்தானும் போட்டியில் நீடிக்க ஒரு சராசரி அணியாக இல்லாமல் ஆடினார்கள். அதேபோல, இந்தியாவும் நியூசிலாந்தும் வலுவிழப்பதற்கு முன்பு நல்ல நிலையிலேயே இருந்தன. அரையிறுதியில் இங்கிலாந்துடன் தோற்பதற்கு முன்பு இந்திய அணி விராட் கோலியின் நிலைத்தன்மை, சூர்யகுமார் யாதவின் அதிரடி, மற்றும் பந்து வீச்சாளர்களின் திறமை ஆகியவற்றால் நல்ல நிலையில் இருந்தது. டி20 போட்டிகளை அணுகும் விதத்தில் இந்தியாவுக்கு ஒரு இயக்க ஆற்றல் தேவைப்படுகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. நீண்ட நேரம் தங்கியிருந்து இறுதியில் வெடிப்பதென்பது ஒரு நாள் போட்டிக்களில் எடுபடலாம் ஆனால் மிக குறுகிய வடிவத்தில் அது ஒரு பலவீனம். முக்கியமான வீரர்கள் அனைவரும் முப்பதுகளின் நடுப்பகுதியில் இருக்கிறார்கள். இந்திய தேர்வாளர்கள் அணியில் ஒரு புது ரத்தத்தை பாய்ச்ச வேண்டும். அதே போல நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் வெளியேறிய நிலையில் ஐயர்லாந்தும் நெதர்லாந்தும் சில அதிர்ச்சிகளை தந்தது டி - 20 பிரிவின் பரிணாம வளர்ச்சியையே சுட்டிக்காட்டுகிறது. இதற்கிடையில் கிரிக்கெட்டின் நலனுக்கு இன்றியமையாதவர்களான மேற்கிந்திய தீவுகள் அணி தகுதிகூட பெறத்தவறியது துயரமானது.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE