ரிசர்வ் வங்கியின் “இந்தியாவில் வங்கியின் போக்கு மற்றும் முன்னேற்றம் குறித்த அறிக்கை” கடன் வளர்ச்சி மீண்டெழும் ஒரு சித்திரத்தைக் காட்டுகிறது. ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு இந்திய வர்த்தக வங்கிகளின் ஒருங்கிணைந்த இருப்பு நிலை குறிப்புகள் இரட்டை இலக்க வளர்ச்சியைக் காட்டுகின்றன. எடுத்தவுடன் இது மகிழ்ச்சிக்கான காரணமாக இருந்தாலும், கோவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ஆண்டில், கடன்களுக்கான தேவை உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகள் மந்தமாக இருந்தன என்ற பின்னணியில்தான் இந்த வளர்ச்சி உண்டானது. ஆனால் நடப்பு நிதியாண்டிலும் கடன் வேகம் நீடித்து வருவதாக தெரிகிறது. முதல் பாதியில் கடன் வளர்ச்சி பத்தாண்டு கால உயர்வை எட்டியிருக்கிறது. டிசம்பர் 2 வரையிலான பதினைந்து நாட்களில், கடன் முந்தைய ஆண்டைவிட 17.5 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஆனாலும் ஏமாற்றமளிக்கும் வகையில் வைப்பு நிதி வளர்ச்சி பின்தங்கியிருக்கிறது. இந்த காலகட்டத்தில், வைப்பு நிதி வளர்ச்சி 9.9 சதவீதம் மட்டுமே அதிகரித்திருக்கிறது. சில்லரை விற்பனையில் உள்ள பணவீக்கமும் விலைகள் நிலையாக இருக்குமா என்பது பற்றிய கவலைகளும் சேமிப்பில் ஈடுபடுவோருக்குக் கிடைக்கும் அசலான வருவாயைக் குறைக்கின்றன. மேலும் சேமிப்பதற்கான நம்பிக்கையையும் தகர்க்கின்றன. இந்த நிலையில், வங்கிகள் கடன் தேவைக்கு நிதி அளிக்க உதவும் வைப்பு நிதிகளை உயர்த்துவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதை உணர்ந்திருக்கின்றன. முக்கியமாக பொருளாதாரம், சர்வதேச மந்தநிலையின் எதிர்விளைவுகளை எதிர்கொள்ளும் நிலையில், கடன் வழங்குபவர்கள், கடன் வழங்குவதற்கு குறைந்த செலவில் கிடைக்கும் மூலதனம், பற்றாக்குறையாக இருப்பதை தவிர்க்கவே விரும்புவார்கள். கடன் வளர்ச்சி விரைவுப்படுத்தப்படும் நிலையில், கடன்கள் செயல்படா சொத்துகளாக மாறுவது பற்றி எச்சரிக்கையாக இருக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறது ரிசர்வ் வங்கி. மத்திய வங்கியின் சொத்துத் தர மதிப்பாய்வுகளின் காரணமாக கடந்த சில
வருடங்களாகவே வங்கிகளின் இருப்புநிலை குறிப்புகள் ஆரோக்கியமாக மாறியிருக்கின்றன. வர்த்தக வங்கிகள், அழுத்தத்துக்கு உள்ளான சொத்துகளை அங்கீகரிப்பது, தள்ளுபடி செய்வது, திவால் சட்டத்தின் கீழ் கடன் மீட்டெட்டுப்பு ஆகிய நடவடிக்கைகளும் இதற்குக் காரணம். ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கையுணர்வு வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். காரணம், வங்கித் துறை தனது மோசமான கடன் நிலையிலிருந்து - குறிப்பாக மொத்த வாராக் கடன்களுக்கு பிறகு – தனது கவனத்தை எடுக்க முடியாது. மொத்த வாராக் கடன்கள் வங்கியின் கடன் தரும் திறனை பாதிக்கிறது. மோசமான கடன் நிலை, 2017-18ஆம் ஆண்டில் உச்சத்தில் இருந்து, செப்டம்பர் 2022ல் ஐந்து சதவிகிதமாக சரிவைக் கண்டது. கடன் வளர்ச்சி, மூலதன செலவினங்களுக்கு நிதி ரீதியாக உதவினாலும், கடன் வாங்குபவர்கள் மீதான வங்கிகளின் கவனமும் உறுதியான கடன் மதிப்பீடும் வாராக் கடன்களை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இந்த வருடத்தின் முதல் பாதியில் தனியார் மூலதன செலவினங்கள் ரூ. 3 லட்சம் கோடியைத் தொட்டுள்ளதாகவும், அதே வேகத்தைப் பராமரித்தால், முழு ஆண்டு புள்ளிவிவரங்கள் கடந்த சில ஆண்டுகளில் மிக அதிகமாக இருக்கும் என்றும் தலைமை பொருளாதார ஆலோசகர் இந்த மாதம் குறிப்பிட்டிருந்தார். ஆனால் கவலைக்குரிய வகையில், தனியார்களுக்கு கடன் வாங்கவும் முதலீடு செய்யவும் அனுமதிக்கும் வகையில் அரசின் மூலதன செலவினம் அதே வேகத்தில் இருக்க வேண்டியதில்லை எனவும் அவர் சொல்லியிருந்தார். ஆனால் நிதிரீதியான கட்டுப்பாடுகளின் தடைகளை கருத்தில் கொண்டு, மூலதன செலவினத்தின் வேகத்தை அரசு அதிகரிக்க வேண்டும். காரணம், தனியார் மூலதன செலவின வளர்ச்சி ஒரு நிலைத்தன்மையைப் பெற காலம் எடுக்கலாம். கடந்த ஏழு மாதங்களை எடுத்துக் கொண்டால் அதில் இரண்டு மாதங்களில் தொழில்துறை உற்பத்தி சுருங்கியிருப்பதால், உற்பத்தி இன்னும் நிலையற்ற ஒன்றாகவே இருக்கிறது. இந்த நிலையில் கடன் வரத்தும் ஒட்டுமொத்த மூலதன செலவினங்களும் ஆதரவாக இருப்பதை கொள்கை வகுப்பவர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE