கடைசியாக 1961 ஆம் வருடத்தில் மாவோவின் தோல்வியடைந்த ‘கிரேட் லீப் ஃபார்வர்ட்’ பிரச்சாரத்தை தொடர்ந்து மிக மோசமான நான்கு வருட கால பஞ்சத்தின் போதுதான் சீனாவின் மக்கள் தொகை சரிவைக் கண்டது. ஆனால் சமீபத்திய மக்கள் தொகை சரிவு எதிர்பாராத அல்லது தற்காலிகமான விஷயம் இல்லை. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் 2022 ஆம் வருடத்தில் மட்டும் 8,50,000 வரையில் மக்கள் தொகை சரிவை கண்டிருப்பது உலகுக்கும் சீனாவுக்கும் நீடித்த விளைவுகளைக் கொண்ட ஒரு முக்கியமான தருணம். கடந்த ஆண்டு சீனாவில் பிறப்புகள் 10 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்து 9.56 மில்லியனாகவும், இறப்புகள் 10.41 மில்லியனாகவும் இருப்பதாக சீனா ஜனவரி 17 அன்று அறிவித்தது. இந்த 1.411 பில்லியன் மக்கள் தொகையை இந்தியாவின் மக்கள் தொகை இந்த வருடம் முந்திவிடும். சமூகப் பொறியியலில் வலுவான தலையீடுகளை முயற்சித்த நாடுகளுக்கு சீனாவின் மக்கள் தொகை கதை சில படிப்பினைகளைக் கொண்டிருக்கிறது. 1980ல் ஒரு குழந்தை கொள்கையால் குறைந்து வரும் பிறப்பு விகிதங்களை அதிகப்படுத்த கடந்த இருபது ஆண்டுகளில் நிறைய முயற்சிகளை எடுத்த சீனா அதில் தோல்வியைதான் கண்டிருக்கிறது. 2016ல் இதை சரி செய்வதற்காக தாமதமாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘இரண்டு குழந்தை கொள்கை’ ஆரவாரத்துடன் அறிவிக்கப்பட்டாலும் அந்த தளர்வு, அதை திட்டமிட்டவர்கள் எதிர்பார்த்த உற்சாகத்துடன் எதிர்கொள்ளப்படவில்லை. நிதிரீதியான காரணங்களுக்காக மேலும் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை விரும்பவில்லை என்று 70 சதவீதம் பேர் அரசு ஆய்வு ஒன்றில் தெரிவித்திருக்கிறார்கள். இந்த மக்கள் தொகை மாற்றத்தின் தாக்கத்தை ஏற்கனவே சீனாவின் பொருளாதாரம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. 2010லிருந்து உழைக்கும் வயதிலுள்ள (16-59) மக்களின் எண்ணிக்கை 75 மில்லியன் வரை குறைந்து 2022ல் 875 மில்லியனாக இருந்தது. ஊதியங்களும் அதிகரித்து வருகின்றன. உழைப்பை கோரும் வேலைகள் சீனாவிலிருந்து பிற நாடுகளுக்கு குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு நகர்கின்றன. இதற்கிடையில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 30 மில்லியனிலிருந்து 280
மில்லியனாக அதிகரித்திருக்கிறது. 2050ல் முதியவர்களின் எண்ணிக்கை 487 மில்லியனாக உயரும் (மக்கள் தொகையில் 35 சதவீதம்). 2050 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 26% முதியவர்களுக்கான சுகாதார பராமரிப்புக்கான செலவினம் எடுத்துக் கொள்ளும் என்று சீனாவின் முதுமைக்கான தேசிய பணி ஆணையம் மதிப்பிடுகிறது. வீழ்ச்சியடைந்து வரும் தொழிலாளர் எண்ணிக்கை நீண்ட காலத்திற்கு இருக்கும் என்பதை பொருத்தவரையில் ஜப்பானின் முன்னுதாரணத்தை சீனா ஏற்கனவே பின்பற்றுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஜப்பானின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒரு ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியபடி, 2020 ஆம் ஆண்டில் சீனாவில் குழந்தைகள் மற்றும் வயதானவர்களின் விகிதம் 1990 ஆம் ஆண்டில் ஜப்பானைப் போலவே இருந்தது. மேலும், முந்தைய நாற்பது ஆண்டு காலத்தில் அதன் கருவுறுதல் விகிதம் 2.74 லிருந்து 1.28 ஆக இருந்த நிலையில், ஜப்பானின் கருவுறுதல் விகிதம் 1.75 லிருந்து 1.29 ஆக குறைந்துள்ளது. இதன் படி சீனா இந்த நிலையை விரைவாகவே அடைந்துவிட்டது. 2020 ஆம் வருடத்தில் அதன் பொருளாதார ஏற்றம் தொடங்கிய போது இந்தியாவின் குழந்தைகள் மற்றும் வயதானவர்களின் விகிதம் 1980 ஆம் ஆண்டில் சீனாவைப் போலவே இருந்தது என்று ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியது. சுகாதாரம் மற்றும் கல்வியில் அதிக முதலீடு செய்வதன் மூலம் அதன் மக்கள் தொகையை சரியான வகையில் பயன்படுத்தி, உலகின் தொழிற்சாலையாக எது மாறுமோ அதற்கு ஏற்றபட மாறும் திறன் கொண்ட தொழிலாளர்களை உருவாக்குவதன் மூலம் மட்டுமே அது சாத்தியமானது.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE