9 முதல் 14 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கு பள்ளிகளின் மூலமாக கர்ப்பபை வாய் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்தியா அந்நோய்க்கு எதிரான போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்திருக்கிறது. இந்த முடிவு மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் வருகிறது. தி லான்செட் ஆய்விதழில் இந்த மாதம் வெளியான ஆய்வின்படி ஆசியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட்டவர்கள் இந்தியாவிலும் அதைத் தொடர்ந்து சீனாவிலும் இருப்பது தெரிய வந்திருக்கிறது. சர்வதேச அளவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுவதிலும் இறப்புகள் நேர்வதிலும் 58 சதவிகிதத்துக்கும் அதிகமானவை ஆசியாவில் நடப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் 21 சதவீத பாதிப்பும் 23 சதவீத இறப்புகளும் நடக்கின்றன. சீனாவில் அது முறையே 18 சதவீதமாகவும் 17 சதவீதமாகவும் இருக்கின்றன. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது தடுக்கக்கூடிய, சிகிச்சையளிக்கக் கூடிய புற்றுநோய். இது மனித பாப்பிலோமாவைரஸ் (எச்.பி.வி) தொற்றால் ஏற்படுகிறது. தவிர, புற்றுநோயை உருவாக்கும் எச்பிவியிலிருந்து பாதுகாக்கும் தடுப்பூசிகள் உள்ளன. 2020ல் உலகளவில் 6,00,000க்கும் மேற்பட்ட பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை ஒரு பொது சுகாதாரப் பிரச்னையாக கருதி அகற்ற நாடுகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை உலக சுகாதார அமைப்பு வகுத்திருக்கிறது. புற்றுநோய்க்கான சர்வதேச ஏஜென்சியின் கூற்றுப்படி, ஆண்டுக்கு 1,00,000 பெண்களில் 4 க்கும் குறைவானவர்களே கர்ப்பப்பை புற்றுநோய் பாதிக்கப்படும் நிலையை நாடுகள் அடைய வேண்டும் மற்றும் அந்த நிலையை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது. இந்த இலக்கை அடைய, 90 சதவீதம் பெண் குழந்தைகளுக்கு 15 வயதுக்குள் தடுப்பூசி போடப்பட வேண்டும். அதன் பொருட்டு, சர்வதேச நோய் தடுப்பு திட்டத்தில் எச்விபி தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதற்கான அரசின் நோக்கும் வரவேற்கத்தக்க நடவடிக்கை. கோவிட்-19 தெளிவாக எடுத்துக் காட்டியதைப் போல இந்தியாவின் நோய் தடுப்பு கட்டமைப்பு நன்றாக வேலைப்பார்த்திருக்கிறது. போலியோ நோய், தாயையும் குழந்தையையும் தாக்கும் டெட்டனஸ் போன்ற நோய்கள் ஒழிக்கப்பட்டிருக்கின்றன. ஆண்டுதோறும் 2 கோடி புதிதாக பிறந்த குழந்தைகளையும் 2 கோடி கர்ப்பிணிப் பெண்களையும் இலக்காகக் கொண்ட மிகப்பெரிய பொது சுகாதாரத் திட்டங்களில் ஒன்றாக சர்வதேச நோய்தடுப்பு திட்டம் இருக்கிறது. குறைந்தது 12 நோய்களுக்கு அது இலவச தடுப்பூசிகளை வழங்குகிறது. கர்ப்பப்பை வாய் புற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கு இந்தியா 2023ஆம் ஆண்டின் மத்தியில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட செர்வவாக் தடுப்பூசியை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரலின் ஒப்புதலை பெற்றிருக்கிறது. சர்வதேச நோய்த் தடுப்பு திட்டத்தின் கீழ் பயன்படுத்த தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவால் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தடுப்பூசி முதன்மையாக பள்ளிகளின் மூலமாக வழங்கப்படும். ஆனால் அதைவிட முக்கியமாக, பள்ளிகளுக்கு செல்லாத பெண் குழந்தைகளுக்கு சமூக தொடர்பு மற்றும் நடமாடும் குழுக்கள் வாயிலாக தடுப்பூசி வழங்கப்படும் என்று அரசு தெளிவுப்படுத்தியிருக்கிறது. இது ஒரு முக்கியமான முயற்சி. காரணம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் நிகழ்வுக்கும் மனித மேம்பாட்டு குறியீட்டு மதிப்பீடுகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. மனித மேம்பாட்டு குறியீடு அதிகரிக்கும் நிலையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் படிப்படியாக குறைந்து வருகிறது. தடுப்பூசி அளிப்பது தவிர, நோய்க்கான ஆரம்ப அறிகுறிகளை கண்டறிய பரிசோதனைகள் நடத்தப்பட்டு, நோய்க்கான சிகிச்சைக்கு உரிய நேரம் அளிக்கப்பட வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE