கத்தாரில் நடைபெறும் ஃபிஃபா உலக் கோப்பை தனது கணிக்கமுடியாத தன்மையை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும் அணிகளின் நரம்பு புடைக்கும் நடனமும் பின் தங்கி வென்றவர்களின் ஆன்மாவை பறக்க செய்யும் ஆட்டமும் கத்தார் வானத்தின் கீழ் பளபளக்கின்றன. கால்பந்து இன்னமும் மிகப்பெரிய விளையாட்டாகவே இருக்கிறது. அதிலும் கடந்த இரண்டு வார காலமாக ஆடும் காலுக்கும் பந்துக்கும் இடையிலான நடனம், சுருங்கி வரும் தொற்றுநோயின் சுவடுகளையும் யுக்ரைன் மீதான ரஷ்ய போரின் பேரழிவையும் தாண்டி உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பல்வேறு அரங்கங்களின் கட்டுமானத்தின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றிய முணுமுணுப்புகள் நீடித்தாலும், கத்தார் இந்த மிகப்பெரிய நிகழ்வை பெரிய சிக்கலில்லாமல் நடத்தியது. மைதானத்தின் வெளியே நிலவும் சூழலை கண்டும் காணாமல் விளையாட்டு இருக்க முடியாது என்ற உண்மையை தங்களது ஆட்டத்துக்கு முன்பு தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது மௌனமாக நின்ற ஈரானிய அணியினர் உணர்த்தினார்கள். பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் அரசியல் நிலைப்பாட்டை எடுக்க பயப்படும் நிலையில் தமது நாட்டில் சம உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் பெண்களுக்கு ஈரானிய அணியினர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். 1930ல் நடந்த உலகக் கோப்பையின் முதல் போட்டியில் அர்ஜெண்டினாவை தோற்கடித்து உருகுவே சாம்பியனாக உருவெடுத்தது. அப்போதிலிருந்து இப்போது வரை உலகக் கோப்பை நீண்ட தூரம் பயணம் செய்திருக்கிறது. உருகுவே வெளியேறி, அர்ஜெண்டினா இப்போதும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பது விளையாட்டின் பரிணாமத்திற்கான குறியீடு. தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், கால்பந்தின் வல்லரண்களாக இருக்கின்றன என்கிற போக்கும் மாறி வருகிறது.
ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகள் வெறும் எண்ணிக்கைக்காக மட்டுமல்லாமல் போட்டியிடவே வந்திருப்பதாக நம்புகின்றன. ஐரோப்பிய லீக்குகளின் பரிச்சயம், வலுவான அடித்தள கட்டமைப்பு மற்றும் போதுமான பயிற்சி நிபுணத்துவம் எல்லாம் சேர்ந்து மொரொக்கோ, செனகல், ஜப்பான் மற்றும் தென் கொரிய முயற்சிகளுக்கு ஒரு ஊக்கத்தை தந்திருக்கின்றன. இந்த நான்கு நாடுகளும் காலிறுதிக்குள் நுழைந்து, ஆப்பிரிக்க, ஆசிய கொடிகளை உயரப் பறக்க விட்டன. இதற்கிடையில், இந்தியா ஒரு போதும் உலகக் கோப்பைக்கு தகுதி பெறவில்லை என்பதும் உண்மை. சுனில் சேத்ரியின் அணியினரும் அவர்களுக்குப் பிறகு வரும் குழுவினரும் கால்பந்தின் மிகப் பெரிய சாம்பியன் ஷிப் போட்டியில் பங்குபெறுவார்களா என்பதைப் பார்க்க வேண்டும். 2026ல் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோவில் நடக்கும் உலகக் கோப்பையில் 48 அணிகள் பங்கேற்கும். தற்போது 32 அணிகளே போட்டிகளில் பங்கேற்கும் நிலையில் இது குறிப்பிடத்தக்க உயர்வு. 106வது இடத்தில் உள்ள இந்தியா, மேம்பட்ட ஆசிய ஒதுக்கீட்டின் மூலம் தகுதி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் தற்போதைக்கு, லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் காயமடைந்த நெய்மர் ஆகியோரை மையமாகக் கொண்ட உலகக் கோப்பையில், ஆசிய மற்றும் ஆப்பிரிக்க கால்களிலிருந்தே உச்சபட்ச சிலிர்ப்புகள் வெளிவந்துள்ளன. கேமரூன் தகுதி பெறாவிட்டாலும், அது பிரேசிலை தோற்கடித்தது. அதே போல சவுதி அரேபியாவும் அர்ஜெண்டினாவுக்கு தொடக்கத்தில் இதே நிலையை உருவாக்கியது. உலகக் கோப்பையின் முக்கியமான பகுதி முடிவுக்கு வரும் நிலையில், போர்ச்சுகல் அணிக்கு எதிரான தென் கொரியாவின் நம்ப முடியாத 2-1 என்ற கோல் கணக்கிலான வெற்றி ஒரு சிறப்பான இடைவெளியாக இருக்கும்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE