2024 நாடாளுமன்ற தேர்தல்களுக்கு இன்னும் 19 மாதங்களே உள்ள நிலையில், எதிர்கட்சி ஒற்றுமை என்கிற கோஷம் மீண்டும் வலுப்பெற தொடங்கியிருக்கிறது. எல்லோரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று சொல்லி கடந்த ஒரு மாதத்தில் இரண்டு முறை தில்லி சென்று வந்துவிட்டார் பிஹார் முதல்வர் நிதீஷ் குமார். அந்த பாடலை பாடிக் கொண்டிருப்பவர் அவர் மட்டுமல்ல. தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவும் பா.ஜ.கவுக்கு எதிரான கூட்டணியை அமைப்பதற்கான சாத்தியங்களை தேடி தில்லி, பாட்னா மற்றும் பெங்களூருவுக்கு பயணம் செய்திருக்கிறார். “மதசார்பற்ற, ஜனநாயக சக்திகள்” ஒன்றிணைய வேண்டும் என்று வழக்கமாகவே இடதுசாரி கட்சிகள் குரல் கொடுக்கும். இந்த அடைப்புக்குறிக்குள் யாரெல்லாம் வருவார்கள் என்று சொல்வதில்லை. ஆனால் இது போன்ற உரையாடல்கள் நடந்தாலும், 1977ஐ போல எதிர்கட்சி கூட்டணி உண்டாகும் சாத்தியம் பெரிதாக இல்லை எனலாம். ஹரியானாவில் இந்திய தேசிய லோக் தளம் நடத்திய கூட்டம் ஒன்றில் பல கட்சிகள் ஒன்றிணைந்தன, ஆனால், காங்கிரஸ் விலக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த கட்சி இல்லாமல் எந்தவொரு எதிர்கட்சி கூட்டணியும் பொருளுடையதாக இருக்காது என்று திரு. நிதீஷ் குமார் வெளிப்படையாக சொன்னார். பா.ஜ.கவை எதிர்ப்பதில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் எப்போதும் எந்த குறையும் வைத்ததில்லை. ஆனால் இப்போது பகுஜன் சமாஜ் கட்சியுடனும் காங்கிரசுடனும் கூட்டணி வைப்பது பற்றி அவருக்கு பல சந்தேகங்கள் இருக்கின்றன. அதேபோல, உத்திர பிரதேசத்தில் திரு. நிதீஷ் குமார் தனது தடத்தை விரிவாக்குவதில் திரு. அகிலேஷ் யாதவுக்கு கடுமையான எதிர்ப்புணர்வு இருக்கிறது. எந்தவொரு எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் காங்கிரஸ் மிக முக்கியம். ‘இந்தியாவை ஒற்றுமையாக்குவோம்’ என்கிற கோஷத்தை முன்வைத்து அதன் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்து கொண்டிருக்கிறார். ஆனால் இந்த தருணத்தில் கட்சி, கடுமையான ஒரு உட்கட்சி அரசியல் புயலையும் சந்தித்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோதிக்கு ஒரு மாற்றாக உருவாகும் வாய்ப்புகளை எடை போட்டு வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால், ஒரு பெரிய உருவாக்கத்தில் தனது பங்குகளை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய எதிர்கட்சியாக இருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் ‘எதிர்கட்சி ஒற்றுமையை’ப் பற்றி விசித்திரமான ஒரு மௌனத்தை கடைபிடித்து வருகிறது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு காட்டிய ஆர்வத்தை மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜீ இப்போது காட்டவில்லை. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளோடு சேர்ந்துகொள்வதற்குப் பதிலாக வாக்கெடுப்பை தவிர்க்கும் வாய்ப்பையே திரிணாமூல் காங்கிரஸ் தேர்ந்தெடுத்தது. எதிர்கட்சிகளின் ஒற்றுமை மட்டுமே பா.ஜ.கவை வீழ்த்திவிடும் என்பதில்லை. 2019ஆம் ஆண்டு தேர்தலில் உத்திர பிரதேசத்தில் எஸ்.பியும் பி.எஸ்.பியும் ஒன்றிணைந்த போதும் அந்த மாநிலத்தில் பா.ஜ.கவை பின்னுக்கு தள்ள முடியவில்லை. தேசிய அளவிலான முயற்சிகளை விட மாநில-அளவிலான கூட்டணிகள் இப்போதும் சாத்தியமானவைதான். தேசிய அளவில் அல்லது பல மாநிலங்களில் இந்த கட்சிகள் ஒற்றுமையை அதிகம் காட்ட முயற்சிக்கும் போது,
அவர்களுக்குள்ளே இருக்கும் முரண்பாடுகள் இன்னும் அதிகமாக வெளிப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக கவனம் செலுத்தி, உள்ளூர் பிரச்னைகளை கையிலெடுத்தால் இந்த கட்சிகளுக்கு அவை கூடுதலாக பலனளிக்கலாம்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE