1901க்கு பிறகு 2023 பிப்ரவரிதான் அதிக வெப்பமானது என்றும் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 29.54 டிகிரி செல்ஷியஸாக இருந்தது என்றும் சமீபத்தில் சொன்னது இந்திய வானிலை ஆய்வு மையம். இந்திய வானிலை ஆய்வு மையத்தால் ‘வசந்த காலம்‘ மற்றும் ‘குளிர்கால மாதம்‘ என்று கருதப்படும் பிப்ரவரி - பொதுவாக குறைந்த 20களில் வெப்பநிலையைப் பதிவு செய்தாலும், இப்போது குறைந்தபட்ச வெப்பநிலை கூட புதிய உயரங்களை எட்டும் வகையில் படிப்படியாக உயர்ந்திருப்பது தெளிவாகிறது. சராசரி அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1.73 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 0.81 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. இந்திய வானிலை ஆய்வு மையம் தனது சமீபத்திய மதிப்பீட்டில், இந்த போக்குகள் கோடையில் தொடர வாய்ப்புள்ளது என்று கூறியிருக்கிறது. வடகிழக்கு, கிழக்கு, மத்திய மற்றும் வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் “இயல்பை விட“ அதிகமான வெப்பநிலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு, ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், கேரளா மற்றும் கடலோர கர்நாடகாவைத் தவிர இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மார்ச்-மே மாதங்களில் வெப்ப அலைகள் ஏற்படக்கூடும். உண்மையான அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருக்கும்போது அல்லது பிராந்தியத்தின் இயல்பான வெப்பநிலையை விட 4.5 டிகிரி செல்சியஸாக இருக்கும்போது அது ‘வெப்ப அலை‘ ஆகும். காலநிலை மாற்றம், இந்தியாவில் வெப்ப அலைகளின் தாக்கத்தை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடுமையான வெப்பம் காரணமாக இறப்புகளில் 55% அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும் அதிகப்படியான வெப்பம், 2021 ஆம் ஆண்டில் இந்தியர்களிடையே 167.2 பில்லியன் வேலை நேர இழப்புக்கு காரணமானது என்றும் ஒரு லான்செட் ஆய்வு சொல்கிறது.
பல ஆண்டுகளாக கடுமையான வெப்பநிலை கோதுமை விளைச்சலை பாதித்திருக்கிறது. 2021-22 பயிர் பருவத்தில் இந்தியா 106.84 மில்லியன் டன் கோதுமையை உற்பத்தி செய்தது. இது 2020-21 பருவத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 109.59 மில்லியன் டன்களை விடக் குறைவு. இதற்குக் காரணம், வழக்கத்தை விட வெப்பமான மார்ச் அதன் வளர்ச்சி கட்டத்தில் பயிரை பாதித்தது. இந்த ஆண்டின் வெப்பநிலை, பருவமழையில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் இன்னும் தெளிவில்லை. காரணம், மார்ச் மாதத்துக்கு பிறகுதான் சர்வதேச முன்னறிவிப்பு மாதிரிகளால், கடல் மேற்பரப்பு நிலைகளை நன்கு பகுப்பாய்வு செய்து அதை நம்பத்தகுந்த வகையில் விரிவுப்படுத்த இயலும். கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று ஆண்டுகள், இந்தியாவில் இயல்பை விட அதிகமான மழைப்பொழிவைக் கண்டது. இதற்கு முதன்மையான காரணம், ஒன்று லா நினா அல்லது பூமத்திய ரேகை பசிபிக்கில் வழக்கமான வெப்பநிலையை விட குளிர்ச்சியாக இருந்ததுதான். இது குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அது இறுதியில் எல் நினோவாக மாறி இந்தியாவின் கடற்கரைகளில் இருந்து ஈரப்பதத்தை இழுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். உள்ளூர் வானிலைக்கும் காலநிலைக்கும் இடையிலான இடைவினை சிக்கலான ஒன்றுதான். அதிகரித்து வரும் வெப்ப அலை தீவிரத்துக்கனா காரணமாக ‘காலநிலை மாற்றத்தை’ குற்றம் சாட்டுவது எளிதாக இருந்தாலும், அறிவியல் தொடர்ந்து நிச்சயமற்ற ஒன்றாக இருக்கிறது. எப்படியிருந்தாலும், இது பொது சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும், அதிகரித்து வரும் வெப்பநிலையிலிருந்து வரும் சவால்களுக்கு எதிவினையாற்றக் கூடிய ஒன்றாக மாற்றுவதற்குமான ஒரு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும். பல மாநிலங்கள் செயல் திட்டங்கள் மற்றும் முன்கூட்டியே எச்சரிக்கை முன்முயற்சிகளைக் கொண்டிருந்தாலும், போதுமான நேரடியான அணுகல் குறிப்பாக ஊரக இந்தியாவில் குறைவாகவே இருக்கிறது. முன்கூட்டியே முதிர்ச்சியடையும் புதிய பயிர் வகைகளை ஊக்குவிப்பதோடு, இந்த மாற்றங்களுக்கு ஏற்ப மண் மற்றும் நீர் மேலாண்மை நடைமுறைகளை மாற்றியமைக்க விவசாயிகளுக்கு உதவுவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE