எல்.விக்டோரியா கௌரி சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக கேள்விக்குரிய வகையில் நியமிக்கப்பட்டிருப்பது நீதித்துறை நியமன முறைகளில் உள்ள பிரச்சனைக்குரிய அம்சங்களுக்கு மிகச் சிறந்த உதாரணமாகியிருக்கிறது. தனக்கு விருப்பமானவர்களைக் கொண்டு நீதித்துறையை நிரப்ப விரும்பும் அரசின் திட்டத்தின் முன்னோட்டமாகவும் அமைந்திருக்கிறது. திருமிகு. கௌரியின் நியமனத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட பிறகு, அவருடைய கடந்த கால பேச்சுகளும் பேட்டிகளும் சிறுபான்மையினர் மீதான அவருடைய பாரபட்சத்தைச் சுட்டிக்காட்டியிருக்கும் நிலையில், அவசரஅவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் அவர் பதவியேற்றுக் கொண்டிருக்கிறது. நீதிபதிகளின் பெயர்கள் அடங்கிய பரிந்துரைப் பட்டியலை மற்ற விவகாரங்களில் காட்டாத அவசரத்துடன் மத்திய சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. கௌரியின் நியமனத்திற்கு எதிராக சில வழக்கறிஞர்கள் தொடர்ந்த வழக்குகளை நீதிமன்றம் விசாரிக்க ஒப்புக்கொண்ட நிலையில், அது இடைக்காலத் தடை எதையும் விதிக்கும் முன்பாக அரசு செயல்பட விரும்பியது என்பது தெளிவு. அதே நேரம், ஆர். ஜான் சத்தியன் என்ற வழக்கறிஞரை நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்ற பரிந்துரையை அரசு ஏற்கவில்லை. முன்னதாகவும் இவரது நியமனத்திற்கு அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. கொலீஜியம் பரிந்துரைக்கும் பெயர்களில் இருந்து தனது அரசியல் விருப்பங்களுக்கு ஏற்ப தற்போதைய அரசு ஆட்களைத் தேர்வுசெய்வும் என்பதை இந்த அரசு தெளிவாகச் சொல்லியிருக்கிறது. அரசு தான் நினைத்ததைச் சாதித்துக்கொள்கிறது என்பதை வைத்துப் பார்க்கும்போது, நீதிபதிகளை நியப்பது என்ற தொடர்ச்சியான பணியில் ஏதாவது முன்னேற்றம் நடக்க வேண்டும் என்றால், சில தனி நபர்கள் குறித்த அரசின் நிலைப்பாட்டை ஏற்க வேண்டிய அழுத்தத்திற்கு கொலீஜியம் உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
சரியான வகையில் ஆலோசனைகளும் தகுந்த தகவல்களும் கொலீஜியத்தின் முன்பாக வைக்கப்பட்டிருந்தால் கௌரியின் நியமனம் நடந்திருக்காது என்ற அடிப்படையில்தான் அவரது நியமனம் எதிர்க்கப்பட்டது. கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்களையும் புறக்கணிக்கும் அவரது பேச்சின் மூலம், அச்சமோ விருப்பு - வெறுப்போ இன்றி செயல்பட அவரே தகுதியற்றவராகியுள்ளார். “மத அடிப்படையில்“ எவ்விதப் பாகுபாடுமின்றி அவர் நீதியை வழங்குவார் என எதிர்பார்க்க முடியாது. ஆனால், கொலீஜியம் முடிவுசெய்த பிறகு நியமிக்கப்படப்போகிறவர்களின் தகுதி குறித்து மறு ஆய்வு செய்ய முடியாது என இது தொடர்பான மனுக்களை நீதிமன்றம் சரியாகவே தள்ளுபடி செய்துள்ளது. தங்களது மூன்று மூத்த நீதிபதிகள் செய்த தேர்வுக்குள் நீதிமன்றத்தால் தலையிட முடியாது. உண்மையில், கொலீஜியத்தின் முடிவை நீதிமன்றத்தின் விசாரணைக்குக் கொண்டுசெல்வதிலேயே அர்த்தமில்லை. அவரது அதீதமான பார்வைச்சாய்வு குறித்து மாநில அரசும் ஏதும் சொல்லவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். அரசியல் சார்ந்து இருப்பதை ஒரு நீதிமன்ற பதவி வகிப்பதிலிருந்து யாரையும் தகுதிநீக்கம் செய்யக்கூடாது என்றாலும், வெளிப்படையான வெறுப்புணர்வு சார்ந்து தகுதி நீக்கம் செய்யலாம். சர்ச்சைக்குரிய பரிந்துரை அதன் ஆய்வைத் தாண்டியும் செல்ல முடியும் என்பது கொலீஜியம் முறையின் தோல்வியையும் சுட்டிக்காட்டுகிறது. இந்த நீதிபதி நியமன முறையை சீர்திருத்துவதைவிட கூடுதலாகவே செய்ய வேண்டியிருக்கிறது: ஒரு வேட்பாளரின் தகுதியை சரியான முறையில் சீர்தூக்கிப் பார்க்கும் சுயேச்சையான முறை தேவை. தற்போதைய நடைமுறையில், வெளிப்படைத் தன்மை இல்லாமல் மூடிய அறைகளுக்குள் ஒருமனதாக முடிவுக்கு வருவது நடக்கிறது. அது ஆரோக்கியமற்ற சமரசங்களுக்கு வழிவகுக்கிறது.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE