இந்தியாவில் கார்பன் விற்பனைச் சந்தை (Carbon trading market) குறித்த துல்லியமான விவரங்களை இந்த ஆண்டின் பிற்பகுதியில் மத்திய அரசு தெளிவுபடுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட எரிசக்தி பாதுகாப்புச் சட்டமும் பாரிஸ் மற்றும் க்ளாஸ்கோ ஒப்பந்தங்களின் மூலம் ஐ.நாவின் காலநிலை மாற்றம் குறித்த கட்டமைப்பு உடன்படிக்கை தரும் ஒப்புதலும் இந்த கார்பன் விற்பனைச் சந்தைக்கு உள்ள உலகளாவிய செலாவணி மதிப்பை அதிகரித்துள்ளன. கார்பன் விற்பனைச் சந்தைகளில் கார்பன் கிரெடிட்களும் மாசுபாட்டுச் சான்றிதழ்களையும் வாங்கவும் விற்கவும் முடியும். எல்லாவற்றையும் உள்ளடக்கிய இந்த ‘கார்பன் சந்தை’ என்பது குறித்து ஒரு தெளிவு, குறிப்பாக இந்தியப் பின்னணியில் தேவைப்படுகிறது. ஒரு தசாப்தத்திற்கு முன்பு, Clean Development Mechanism வகுத்த விதிகளின்படி கார்பன் வெளியிடுதலையோ, உள்வாங்குதலையோ பங்குச் சந்தைகளில் விற்பதைப் போல விற்கலாம் என இதற்குப் பொருள் இருந்தது. வளர்ந்த நாடுகளில் பச்சில்ல வாயுக்கள் வெளியேறுவதைத் தடுககும் தொழிற் திட்டங்களுக்கு சில பரிசோதனைகளுக்குப் பிறகு கார்பன் கிரெடிட்கள் கிடைக்கும். ஐரோப்பிய நிறுவனங்கள் பச்சில்ல வாயு வெளியேற்றத்தைத் தடுப்பதற்குப் பதிலாக, இந்த கிரெடிட்டை ஐரோப்பிய நிறுவனங்கள் வாங்கிக்கொள்ளலாம். அதே நேரத்தில் ஐரோப்பிய யூனின் - எமிஷன் டிரேடிங் சிஸ்டம் (EU - ETS)என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அலுமினியம் அல்லது இரும்புத் தொழிற்சாலைகளுக்கு அரசு கார்பன் வெளியேற்றத்திற்கு கட்டுப்பாடுகளை விதிக்கும். ஒன்று, இந்தத் தொழிற்சாலைகள் கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தலாம். அல்லது தாங்கள் கட்டுப்படுத்த வேண்டிய அளவைவிட அதிகம் கட்டுப்படுத்திய நிறுவனங்களிடமிருந்து அரசு சான்றிதழ் அளிக்கும் உரிமங்களை வாங்கலாம். இவற்றை அரசே ஏலம் விடும். EU - ETS என்ற பரிமாற்றச் சந்தைகளில் கார்பன் கிரெடிட்டை உரிமங்களாக பயன்படுத்த முடியும் என்பதால் அவற்றுக்கு மதிப்பு ஏற்பட்டது. இந்த உரிமங்கள் சூழலை மாசுபடுத்த உரிமை அளிக்கும். அவற்றை கார்பன் சந்தைகளில், பங்குகளை வாங்கி - விற்பதைப் போல பரிமாற்றம் செய்யலாம். மாசுபாட்டு விதிகளுக்கும் கட்டுப்பட்டு, லாபத்தையும் சம்பாதிக்க வேண்டியிருக்கும் கம்பனிகளைப் பொறுத்தவரை, தேவைக்கு ஏற்ப இவற்றின் மதிப்பு ஏற்ற இறக்கமாகவே இருக்கும்.
இம்மாதிரி சந்தையின் நோக்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் முதலீடு செய்வதை ஊக்குவிப்பதுதான். அடுத்த சில ஆண்டுகளுக்கு தன் கார்பன் வெளியேற்றத்தை அதிகரிக்க உரிமை இருப்பதாக இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இதன் வெளியேற்ற வளர்ச்சியின் தீவிரத்தை 2030க்குள் 45 சதவீதம் அளவுக்கு குறைக்க ஒப்புக்கொண்டிருக்கிறது. அப்படியானால் இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் 2005ஆம் ஆண்டில் இருந்த அளவுக்கு இருக்கும். செயல்படு, சாதித்திடு, விற்பனை செய் (PAT) என்ற திட்டத்தை ஒரு பகுதியளவுக்கு இதற்காக இந்தியா பயன்படுத்திக்கொள்கிறது. அதன்படி சுமார் 1,000 தொழிற்சாலைகள் எரிசக்தி சேமிப்பு சான்றிதழ்களை வர்த்தகம் செய்வதில் ஈடுபடும். 2015ஆம் ஆண்டிலிருந்து பல PAT சுற்றுகள் தரும் விவரங்களின்படி, கார்பன் வெளியேற்றம் 3 முதல் 5 சதவீதம் அளவுக்குக் குறைந்திருக்கிறது. 2005ஆம் ஆண்டிலிருந்து கார்பன் டிரேடிங்கை நடத்திவரும் ஐரோப்பிய யூனியனைப் பொறுத்தவரை, 2005க்கும் 2019க்கும் இடையில் 35 சதவீதம் கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது. முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிட்டால் 2009ல் மட்டும் 9 சதவீதத்தைக் குறைத்துள்ளது. இதுபோன்ற கார்பன் டிரேடிங் இந்தியப் பின்னணியில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க அர்த்தமுள்ள வகையில் உதவுமா என்பது ஒரு கேள்விதான். சில தசாப்தங்களுக்குப் பிறகே இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியும். உள்ளூரிலேயே நிதியைத் திரட்டி, புதைபடிம எரிபொருளில் இருந்து விலகுவதை வேகப்படுத்த முடிந்தாலே அதுவே ஒரு வெற்றிதான். இந்த இலக்கை மனதில் கொண்டு, இந்த சந்தையில் பங்கேற்க தொழில்துறைக்கு அரசு சரியான அளவில் அழுத்தம் அளிக்க வேண்டும். ஆனால், அதே நேரம்,
இந்தச் சந்தையைச் சார்ந்திராமல், பச்சில்ல வாயுக்கள் வெளியிடப்படுவதைக் குறைப்பது குறித்து ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட முயற்சிகளையும் கைவிடக்கூடாது.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE