“ஹேப்பி ஸ்லாம்” என்று பொதுவாக அழைக்கப்பட்டு வந்தாலும், சமீபகாலங்களில் ஆஸ்திரேலிய ஒபன் மகிழ்ச்சியற்ற ஒன்றாகதான் இருந்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத காட்டுத் தீ, கோவிட்-19 ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி போடாததால் நோவக் ஜோகோவிச்சின் விரும்பத்தகாத வெளியேற்றம் என்று கடந்த மூன்றாண்டுகளிலும் ஏதோவொன்று போட்டியை சீர்குலைத்தது. ஆனால் திங்களன்று இந்தத் தொடரின் 2023ஆம் வருடப் போட்டி தொடங்கவுள்ள நிலையில், இந்த சீசனின் முதல் மிகப்பெரிய போட்டி அதன் விடுதலையுணர்வையும் உற்சாகத்தையும் மீண்டும் பெற தயாராக இருப்பதுபோல தெரிகிறது. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட வீரர்கள்கூட போட்டியிடக்கூடிய அளவு சூழல் தடையற்ற ஒன்றாக இப்போது இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில் நினைத்துப் பார்க்க முடியாத விஷயம் இது. தற்போது ஓய்வுபெற்றுவிட்ட ரோஜர் பெடரர் மற்றும் ஆஷ் பார்டி, இரண்டு முறை ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தைப் பெற்ற நவோமி ஒசாகா மற்றும் நடப்பு ஆண்கள் உலகின் நம்பர் 1 கார்லோஸ் அல்காராஸ் ஆகியோர் இல்லாத போதிலும், களத்தில் ஆட்டம் ஒன்றுக்கொன்று சளைக்காமல் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜோகோவிச் அங்கு இருப்பதே அவரை உடனடியாக விருப்பத்திற்குரிய ஒரு வீரராக மாற்றிவிடுகிறது. ரஃபேல் நடாலுக்கு பாரிஸ் எப்படியோ அப்படிதான் அவருக்கு மெல்போர்னும். ஒபன் எரா என்று சொல்லப்படும் புதியவர்களுடன் தேர்ந்த வீரர்கள் மோதும் நிகழ்வை ஒன்பது முறை வென்று சாதனை படைத்திருக்கும் இந்த செர்பிய வீரர் அவர் ஆடிய கடந்த 21 போட்டிகளிலும் தோற்க முடியாதவராக இருந்திருக்கிறார். செபாஸ்டியன் கோர்டாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஒரு போட்டி புள்ளியைக் காப்பாற்றிய பின்னர் அடிலெய்டில் டியுன்-அப் போட்டியை கைப்பற்றியதன் மூலமும் அவர் நன்கு மெருகேறியிருக்கிறார். முதல் நிலை வீரரும் நடப்பு சாம்பியனும் ஆண்கள் பிரிவில் 22 முறை பெரிய போட்டிகளில் வென்ற சாதனையாளருமான நடால் அவ்வளவாக தயாராக இல்லை என்பது போலதான் தோன்றுகிறது. ஆனால் 2022 நிரூபித்துக் காட்டியதைப் போல இந்த ஸ்பெயின் வீரரை அவ்வளவு எளிதாக புறம்தள்ளி விட முடியாது.
பெண்கள் பிரிவைப் பொறுத்த வரையில் அனைவரது பார்வையும் உலகின் நம்பர் ஒன் சாம்பியனும் மூன்று முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றவருமான இகா ஸ்வியாடெக் மீதுதான் இருக்கும். யுனைடெட் கோப்பையில் ஜெசிகா பெகுலாவிடம் பெற்ற ஏமாற்றமளிக்கும் தோல்வி மற்றும் வலது தோள்பட்டை காயம் அவரைப் பாதித்திருக்கலாம், ஆனால் போலந்தை சேர்ந்த இகா இப்போதும் கடும் போட்டியை தரக்கூடியவர்தான். இரண்டாம் நிலை வீரர் ஓன்ஸ் ஜாபர் களத்தில் ஆடும்போது அச்சுறுத்தலாக இருக்கிறார். அவர் விம்பிள்டன் மற்றும் யு.எஸ் ஒப்பனில் இரண்டாம் இடத்தை கடந்த வருடம் பெற்ற நிலையில் தனது முதல் ஸ்லாம் கோப்பையை பெற வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பார். முப்பெரும் வீரரின் (ஃபெடரர், நடால், ஜோகோவிச்) பிடி தளர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அந்த இடங்களுக்கு உரிமை கோரும் ஒரு வாய்ப்பாக அடுத்த கட்ட வீரர்களுக்கு இந்த போட்டி இருக்கும். பெண்கள் விளையாட்டு ஏற்கனவே பார்ட்டி, செரினா வில்லியம்ஸின் காலத்தைத் தாண்டி நகர்ந்துவிட்டது. 2021ஆம் ஆண்டின் அமெரிக்க ஓபன் சாம்பியனும், ஆஸ்திரேலியாவில் இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு வந்தவருமான டேனில் மெத்வதேவ், 2022ஆம் வருடத்தில் நான்கு பெரும் போட்டிகளில் இரண்டாம் இடத்தை பிடித்த காஸ்பர் ரூட், ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்; மற்றும் ஃபெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் என எல்லோருமே நன்றாக வர விரும்புவார்கள். மூன்றாம் நிலை வீரரும் இப்போது நல்ல நிலையில் இருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த பெகுலாவும் பிரெஞ்சு வீரர் கரோலின் கார்சியாவும் பெலாரஸின் ஆரினா சபலென்காவும் மற்றும் தொடர்ந்து உயர்ந்து வரும் கோகோ காஃப்வும் அதையே விரும்புவார்கள்.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE