கடந்த ஆகஸ்டில் புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லாகோவில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வீட்டில் நடந்த ரெய்டுகளில் நூற்றுக்கணக்கான ரகசிய ஆவணங்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான அரசு ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது, அது அவருக்கே வினையாக முடியும் என்று தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எதிர்பார்த்திருக்க மாட்டார். இருப்பினும் இப்போது வரையில் வாஷிங்டனில் உள்ள ஒரு சிந்தனைக் குழுவான ராஜதந்திரம் மற்றும் சர்வதேச ஈடுபாடுக்கான பென் பைடன் குழு மற்றும் டெலாவெரின் வில்மிங்டனில் உள்ள அவரது வீட்டு கேரேஜ் உள்ளிட்ட பல அறைகள் உள்ளிட்ட பல இடங்களில் அவரது சொந்த வழக்கறிஞர்கள் ரகசிய ஆவணங்களை கண்டுபிடித்ததற்கு திரு. பைடனும் வெள்ளை மாளிகையும் அமைதியாகவே எதிர்வினையாற்றியிருக்கிறார்கள். ஆனால் இரு வழக்குகளிலும் முக்கியமான வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த இரண்டு வகைப்பட்ட ரகசிய ஆவணங்களின் கசிவுகளிலும் இருக்கும் வெவ்வேறு விதமான சட்ட விளைவுகளில் அது பிரதிபலிக்கும். முதலாவதாக டிரம்ப் பதுக்கிய ஆவணங்களின் எண்ணிக்கை 11,000க்கும் அதிகம் எனச் சொல்லப்படுகிறது. அவற்றில் 300 ஆவணங்கள் வகைப்படுத்தப்பட்ட அல்லது உயர் ரகசிய ஆவணங்கள், புகைப்படங்களை உள்ளடக்கியது. ஆனால் திரு. பைடனுடன் தொடர்புடைய ஆவணங்கள் 12ஐ விட குறைவு என்று சொல்லப்படுகிறது. இரண்டாவதாக, சிந்தனை குழுவில் உள்ள ஒரு பூட்டப்பட்ட அலமாரியில்தான் திரு. பைடனின் வழக்கறிஞர்கள் முதன்முதலாக ரகசிய ஆவணங்களை கண்டுபிடிக்கிறார்கள். அதன் பிறகு அவரது குழு தாமாக முன் வந்து தேசிய ஆவணக் காப்பகம் மற்றும் நீதித்துறைக்கு தகவல் அளித்து ‘விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கிறார்கள்.’ திரு. டிரம்பைப் பொறுத்த வரையில் யு.எஸ். தேசிய ஆவணக் காப்பகம் ரகசிய ஆவணங்கள் காணாமல் போனதை கண்டுபிடித்து அவற்றை திரும்பத் தரும்படி திரு. டிரம்பிடம் கேட்டுக்கொண்ட பிறகும் அவர் அதை செய்யாததால் வழக்கு ஃஎப்.பி.ஐயிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மூன்றாவதாக இரண்டு கசிவுகளும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டாலும், திரு. டிரம்ப் ஆவணங்களை கையாண்டது பற்றி ஒரு குற்றவியல் விசாரணையை நீதித்துறை மேற்கொண்டு வந்திருக்கிறது. ஆனால் திரு. பைடனின் வழக்கைப் பொறுத்த வரையில் வேண்டுமென்றே அப்படியொரு நோக்கத்துடன் செயல்பட்டதாக இதுவரை எந்தவொரு அறிகுறியும் இல்லாத நிலையில், பதவியில் இருக்கும் ஒரு அதிபர் மீது குற்றம் சுமத்த முடியாது என்கிற விதியின்படி அவர் பாதுகாக்கப்படுவார்.
ஆனால், இதையெல்லாம் தாண்டி திரு. பைடனோ அல்லது அவர் குழுவோ இந்த ரகசிய ஆவணங்களை முறையற்ற முறையில் கையாண்டது அவருக்கு அரசியல் ரீதியான இழப்பை ஏற்படுத்தும் என்பது தெளிவு. ஏற்கனவே, கடந்த வருட இறுதியில் ஏற்றம் கண்ட பைடனின் பணிகள் குறித்த ஏற்பு மதிப்பீடு இந்த வருடம் 40 சதவீதத்திற்கு குறைந்துவிட்டதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருக்கின்றன. இது அவரது அதிபர் பதவிக் காலத்தில் கிடைத்த மிகவும் குறைந்த மதிப்பீடு. ரகசிய ஆவணங்கள் நவம்பர் 2ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அவரது குழு ஏன் அந்தத் தகவலை நவம்பர் 8 நடந்த இடைக்கால தேர்தலுக்கு பிந்தைய காலகட்டம் வரையில் மறைத்து வைத்தது என்பது போன்ற கடினமான கேள்விகளையும் அதிபர் எதிர்நோக்கியிருக்கிறார். அதேபோல, பிரதிநிதிகள் சபை சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி தலைமையிலான குடியரசுக் கட்சியினர், பைடனின் ரகசிய ஆவண கசிவுகள் குறித்து நாடாளுமன்ற விசாரணையை கோரியிருக்கிறார்கள். திரு. டிரம்பை பொறுத்த வரையில் அவர் உள்நோக்கத்தோடு ரகசிய ஆவணங்களை அவற்றுக்கு உரிய இடத்திலிருந்து எடுத்துச்சென்று, அவற்றை திரும்பத் தர மறுத்ததன் மூலம் நீதிக்கு இடையூறு விளைவித்த போதும், உளவுச் சட்டத்தை மீறியதற்காக திரு. டிரம்ப் மீது வழக்கு தொடரலாம் என்ற நிலையில், பைடன் விவகாரம் அந்த வழக்கில் பின்னடைவை ஏற்படுத்தலாம்.m.
This editorial has been translated from English, which can be read here.
COMMents
SHARE